யூரிக் அமிலம், கீல்வாத பிரச்சனைகளுக்கு... முடிவு கட்டும் சூப்பர் பழங்கள்

யூரிக் அமில பிரச்சனை என்பது வசதி படைத்தவர்களுக்கு வரும் பிரச்சனை என்று கூறப்பட்ட காலம் மலையேறிவிட்டது. இப்போது அனைவரையும் இந்த யூரிக் அமில பிரச்சனை போட்டு தாக்குகிறது.

உடலிலும் சில உணவுகளிலும் இயற்கையாக காணப்படும் கியூரிங்கள் உடைபடும்போது உடல் யூரிக் அமிலத்தை உற்பத்தி செய்கிறது. இது அளவிற்கு அதிகமானால், மூட்டு வலி, கீழ்வாத வலி ஆகியவை ஏற்படும்.

1 /6

யூரிக் அமிலம் கீல்வாத பிரச்சனைக்கு முதல் காரணமாகும். ரத்தத்தில் ஹைப்பர் யூரிசினியா எனப்படும் யூரிட் என்ற வேதிப்பொருள் அதிகமாகும் போது, யூரிக் அமில படிவங்கள் மூட்டுகளில் உருவாகி, மூட்டு வலி கீழ்வாதம் ஆகியவை ஏற்படுகிறது. இதற்கு சில பழங்களை தினமும் உணவில் சேர்த்துக் கொள்வது, யூரிக் அமில பிரச்சனையில் இருந்து விடுபட உதவும்.

2 /6

விட்டமின் சி சத்து நிறைந்த ஆரஞ்சு, யூரிக் அமிலத்தின் அளவை கட்டுப்படுத்துகிறது. இது சிறுநீரக ஆரோக்கியத்தையும் மேம்படுத்துகிறது. யூரிக் அமிலத்தினால் குதிகால் வலியை அனுபவிப்பவர்கள், ஆரஞ்சு பழத்தை தினமும் எடுத்துக் கொள்ளுங்கள்.

3 /6

கிவி பழத்தில் யூரிக் அமில அளவை கட்டுப்படுத்த உதவும், பொட்டாசியம், வைட்டமின் சி, வைட்டமின் இ, ஃபோலேட் ஆகிய சத்துக்கள் உள்ளன.

4 /6

ஸ்ட்ராபெர்ரியில் உள்ள விட்டமின் சி மூட்டு வலியில் இருந்து நிவாரணம் அளிக்கிறது. மேலும் ஸ்ட்ராபெர்ரியில் உள்ள நார்ச்சத்து கால்சியம், மெக்னீசியம் போன்ற சத்துக்கள் யூரிக் அமிலத்தை கட்டுப்படுத்துகின்றன.  

5 /6

வைட்டமின் சி நிறைந்துள்ள அன்னாசிப்பழம், யூரிக் அமிலப் பிரச்சனையை தீர்க்க உதவுகிறது. இதில் உள்ள நார்ச்சத்து பியூரினை ஜீரணிக்க உதவுவதால், யூரிக் அமிலம் சிறப்பாக கட்டுப்படுத்தப்படும்

6 /6

பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ZEE MEDIA இந்த தகவல்களுக்கு பொறுப்பேற்காது.