தினமும் மவுத் வாஷ் யூஸ் பண்ணறீங்களா... இந்த செய்தி உங்களுக்குத் தான்!

Side Effects Of Mouthwash: மவுத்வாஷ் பற்களை ஆரோக்கியமாக வைத்திருப்பதோடு, வாய் துர்நாற்றத்தையும் போக்குகிறது. எனவே இதை பெரும்பாலானோர் தினமும் உபயோகித்து வருகின்றனர்.

மவுத் வாஷில் பாக்டீரியாவை அழிக்கும் திறன் இருப்பதால் துர்நாற்றம் ஏற்படாமல் இருக்கிறது என்பது உண்மை தான். ஆனால் தினமும் மவுத்வாஷ் பயன்படுத்துவது நல்லதல்ல.

1 /7

Side Effects Of Mouthwash: தினமும் மவுத்வாஷ் பயன்படுத்துவது பல பிரச்சனைகளை உண்டாக்கும் என எச்சரிக்கின்றனர் நிபுணர்கள். அதனால் அதனை அளவிற்கு அதிகமாகப் பயன்படுத்துவதைத் தவிர்க்க வேண்டும். 

2 /7

தினமும் மவுத்வாஷை பயன்படுத்துவது உங்கள் வாயில் வறட்சியை ஏற்படுத்தும். ஏனெனில் மவுத்வாஷில் ஆல்கஹால் உள்ளது. அதனால் இதை அதிகமாக பயன்படுத்தினால் வறட்சியுடன் எரிச்சல் உணர்வும் ஏற்படும்.

3 /7

மவுத் வாஷ் அளவிற்கு அதிகமாக பயன்படுத்துவதால் சர்க்கரை நோய் ஏற்படும் அபாயம் அதிகம் இருப்பதாக சமீபத்தில் நடத்திய ஆய்வு ஒன்று தெரிவித்துள்ளது. ஒரு நாளைக்கு இரு முறை மவுத் வாஷ் பயன்படுத்துபவர்களுக்கு 55% சர்க்கரை நோய் ஏற்பட வாய்ப்புள்ளது என ஆய்வு முடிவில் கூறப்பட்டுள்ளது.

4 /7

மவுத்வாஷைப் தினமும் பயன்படுத்துவதால் பெரும்பாலானோர் எரிச்சல் உணர்வு மற்றும் வலி ஏற்படுவதாக கூறுகின்றனர். ஏனென்றால், சில மவுத்வாஷ்களில் அதிக அளவு ஆல்கஹால் உள்ளது.  எனவே அளவோடு பயன்படுத்தும் படி வல்லுநர்கள் எச்சரிக்கின்றனர்.

5 /7

மவுத்வாஷில்  உள்ள செயற்கை கூறுகள் புற்றுநோய் அப்பாயத்தை அதிரிக்கக் கூடும் என ஆய்வுகளில் தெரியவந்துள்ளது. தினமும் அல்லது அளவிற்கு அதிகமான மவுத்வாஷ் பயன்படுத்துபவர்களுக்கு, புற்றுநோய் போன்ற கொடிய நோய் ஆபத்துக்கள் அதிகரிக்கலாம் என கூறப்படுகிறது.

6 /7

அளவிற்கு  அதிகமாக மவுத்வாஷ் பயன்படுத்தினால், அதனால், பற்களில் கறை படிதல் போன்ற பிரச்சனையை ஏற்படுத்தும் என்பது பலருக்கு தெரிவதில்லை, எனவே எச்சரிக்கையுடன் பயன்படுத்துவது நல்லது.

7 /7

பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ZEE MEDIA இந்த தகவல்களுக்கு பொறுப்பேற்காது.