தைராய்டு பிரச்சனையில் இருந்து விடுபட... உதவும் ‘5’ யோகாசனங்கள்!

Yogasanas To Control Thyroid Problem: தைராய்டு சுரப்பியின் வேலை தைராக்ஸின் ஹார்மோனை உற்பத்தி செய்வது. உடலின் வளர்சிதை மாற்ற விகிதம் மற்றும் ஆற்றல் அளவைக் கட்டுப்படுத்தும் பணியை செய்யும் இந்த சுரப்பி சரியாக செயல்படாதபோது, ​​தைராய்டு நோய் உண்டாகிறது.

தவறான வாழ்க்கை முறை மற்றும் உணவுப் பழக்கவழக்கங்கள் தற்போது, ​​தைராய்டு பிரச்சனை மக்களிடையே மிகவும் பொதுவானதாகிவிட்டது. 

1 /8

தைராய்டு என்பது, நம் கழுத்தின் நடுவில் அமைந்துள்ள ஒரு சிறிய பட்டாம்பூச்சி வடிவிலான சுரப்பி. இது சிறிய பாகம் என்றாலும், உடல் செயல்பாடுகளில் முக்கிய பங்கு வகிக்கிறது.  தைராய்டு  இந்த சுரப்பி சரியாக செயல்படாதபோது, ​​தைராய்டு ஹார்மோன் போதுமான அளவில் உற்பத்தி செய்யப்படுவதில்லை.

2 /8

தைராய்டு பாதிப்பு ஏற்பட்டால், உடல் எடை அதிகரிப்பு, உடல்வலி, சோர்வு, பலவீனம், முடி உதிர்தல், வறண்ட சருமம் போன்ற பிரச்சனைகள் ஏற்படும். ஆனால் யோகாவின் உதவியுடன் தைராய்டு பிரச்சனையை எளிதாக தீர்க்க முடியும். தைராய்டு அளவை கட்டுப்படுத்த உதவும் 5 யோகாசனங்களைப் பற்றி விரிவாக அறிந்து கொள்ளலாம்.

3 /8

புஜங்காசனம் செய்ய, முதலில் தரையில் குப்புறப் படுத்துக் கொள்ளுங்கள். உங்கள் முழங்கைகளை உங்கள் இடுப்புக்கு நெருக்கமாகவும் உள்ளங்கைகளை மேல் நோக்கியும் வைத்துக் கொண்டு, ஒரு பாம்பை போல் உங்கள் மார்பை மேல்நோக்கி உயர்த்தவும். இந்த நிலையில் 30-50 வினாடிகள் இருக்கவும். இந்த செயல்முறையை 3-5 முறை செய்யவும்.

4 /8

சேதுபந்தாசனம் செய்ய, முதலில் தரையில் உங்கள் நேராக படுத்து கொண்டு முழங்கால்களை மடக்கி, உங்கள் இரு கைகளாலும் உங்கள் கால்களின் குதிகால்களைப் பிடிக்கவும். உடலை பாலம் போல் வளைக்கவும். இந்த நிலையில் 1-2 நிமிடங்கள் இருங்கள். இந்த செயல்முறையை 3-5 முறை செய்யவும்.

5 /8

ஹலாசனம்  செய்ய, முதலில் யோகா பாயில் நேராக படுத்துக் கொண்டு கைகளை உடலுக்கு நெருக்கமாகவும், உள்ளங்கைகளை தரையில் வைக்கவும். இதற்குப் பிறகு, மெதுவாக கால்களை உயர்த்தி, தலை பகுதிக்கு கொண்டு சென்று மெதுவாக கால் விரல்களை  கொண்டு தரையில் தொட முயற்சிக்கவும். இந்த நிலையில் 30 வினாடிகள் இருக்கவும். பின்னர் மெதுவாக ஆரம்ப நிலைக்கு திரும்பவும். இந்த செயல்முறையை 3-5 முறை செய்யவும்.

6 /8

சர்வாங்காசனம் செய்ய, நேராக படுத்துக் கொண்டு, உங்கள் கால்களை உயர்த்தி, உங்கள் கைகளால் உங்கள் இடுப்பை பிடித்துக் கொள்ளவும். இந்த நிலையில் 30-50 வினாடிகள் இருக்கவும். அதன் பிறகு இயல்பு நிலைக்கு திரும்பவும். இந்த செயல்முறையை 3-5 முறை செய்யவும்.

7 /8

உஸ்ட்ராசனம்  செய்ய, தரையில் உட்கார்ந்து முழங்கால்களை மடக்கி,  உங்கள் கைகளால் கால்களைப் பிடித்து, இடுப்பை பின்னோக்கி ஒட்டகத்தை போல் வளைக்கவும். 30-60 வினாடிகள் இந்த நிலையில் இருந்த பிறகு, நீங்கள் மெதுவாக இயல்பு நிலைக்கு வரலாம்.

8 /8

பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ZEE MEDIA இந்த தகவல்களுக்கு பொறுப்பேற்காது.