ஷண்முகத்துக்கு மலர்ந்த காதல்.. காரில் வந்து மோதிய பரணி - அண்ணா சீரியல் இன்றைய எபிசோட் அப்டேட்

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் சனி வரை தினமும் இரவு 8.30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் புத்தம் புதிய சீரியல் அண்ணா. இந்த சீரியலின் இன்றைய எபிசோடில் என்ன நடக்கப் போகிறது என்பதை அறிந்து கொள்ளலாம்.

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : May 25, 2023, 11:59 AM IST
  • பரணி ஊரிலிருந்து வருவதாக சொல்ல சண்முகம் சந்தோஷப்படுகிறான்.
  • கடவுள் அண்ணி உனக்கு தானு எழுதி வச்சிருந்தா அவங்க நேரா வந்து உன் பைக் மேல மோதுவாங்க.
  • பரணி சண்முகத்துடன் வண்டியில் உட்கார்ந்து கொண்டு கிளம்ப சண்முகம் காதல் பரவசத்துடன் வண்டியை ஓட்டி செல்கிறான்.
ஷண்முகத்துக்கு மலர்ந்த காதல்.. காரில் வந்து மோதிய பரணி - அண்ணா சீரியல் இன்றைய எபிசோட் அப்டேட் title=

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் இரவு 8.30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் புத்தம் புதிய சீரியல் அண்ணா. நேற்றைய எபிசோடில் ரத்னாவிடம் ஒருவன் லவ் லெட்டர் கொடுத்ததை தெரிந்து சண்முகம் கோபத்தோடு அங்கு சென்று அவனிடம் அண்ணன் தங்கச்சினா என்னன்னு தெரியுமா? என திரும்பவும் நீளமாக டயலாக் பேசுகிறான். கடைசியில் லவ் லெட்டர் கொடுத்தது ஒரு எல்கேஜி பையன் என்ற விஷயம் தெரிய வருகிறது. 

இதனையடுத்து சண்முகம் கடையில் இருக்கும் போது ப்ரோக்கர் ரத்னாவுக்கு ஒரு நல்ல வரன் வந்திருக்கு, அவங்க ஓகே சொல்லிட்டாங்க என்று சொல்ல செந்தில் சந்தோஷப்படுகிறான். மேலும் நம்ம குடும்பத்தில் நடந்த விஷயத்தை பற்றி சொல்லிட்டீங்களா எனவும் கேள்வி கேட்கிறான். 

அதோட வெட்டுக்கிளியிடம் முருகனுக்கு ஒரு தேங்காய் எடுடா என சொல்ல அவன் பெரிய தேங்காயை எடுத்து கொடுக்க நம்ம முருகனுக்கு தானே, இவ்வளவு பெருசு எதுக்கு? இதோட விலை என்ன தெரியுமா என்று திட்டி இருப்பதிலேயே சிறிய தேங்காய் எடுத்துக்கொண்டு கோவிலுக்கு செல்கிறான். 

அங்கே கோவிலில் பாக்கியமும் அவளது இரண்டாவது மகனும் வந்திருக்க சண்முகம் தேங்காய் உடைக்க போகும் போது அவர்கள் பார்த்து என்ன விஷயம் என கேட்க ரத்னாவுக்கு நல்ல இடம் ஒன்னு வந்திருப்பதாக சொல்கிறான். மேலும் நீங்க எதற்கு தேங்காய் உடைக்க வந்தீங்க என கேட்க பரணி ஊரிலிருந்து வருவதாக சொல்ல சண்முகம் சந்தோஷப்படுகிறான். 

மேலும் படிக்க | சீதா ராமன் அப்டேட்: கைதாகும் சூர்யா.. அதிர்ச்சியில் சீதா, ஆட்டத்தை தொடங்கும் மகா!!

பிறகு சண்முகமும் வெட்டுக்கிளியும் வண்டியில் சென்று கொண்டிருக்கும் போது வெட்டுக்கிளி உனக்கு தான் முதல்ல கல்யாணம் நடக்கும் போல, அண்ணி வேற ஊருக்கு வராங்க என சொல்ல சண்முகம் அதை ஏற்கவும் முடியாமல் இல்லை என்று சொல்லவும் முடியாமல் தவிக்கிறான். 

மேலும் கடவுள் அண்ணி உனக்கு தானு எழுதி வச்சிருந்தா அவங்க நேரா வந்து உன் பைக் மேல மோதுவாங்க என சொல்ல அதற்கு ஏற்றார் போல பரணி காரில் வந்து சண்முகம் பைக்கின் மீது மோத சண்முகம் கீழே விழுகிறான். அவனுக்கு கையில் லேசான காயம் ஏற்படுகிறது. 

காரில் இருந்து இறங்கிய பரணி ஏய் சண்முகம் என சொல்லி கை கொடுத்து அவனைத் தூக்கி அவனுக்கு முதலுதவி செய்கிறாள். அந்த நேரம் பார்த்து கார் ரிப்பேர் ஆகிவிட பரணி அவசரமாக போக வேண்டும் என்று சொல்ல வெட்டுக்கிளி அதான் அண்ணனோட வண்டி இருக்கே.. அதுல போங்க என சொல்கிறான். 

பிறகு பரணி சண்முகத்துடன் வண்டியில் உட்கார்ந்து கொண்டு கிளம்ப சண்முகம் காதல் பரவசத்துடன் வண்டியை ஓட்டி செல்கிறான். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய அண்ணா சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்.

மேலும் படிக்க | சொந்த ஊருக்கு வர மறுக்கும் பரணி... ஷண்முகத்தால் புலம்பும் தங்கைகள் - அண்ணா சீரியல் இன்றைய எபிசோட் அப்டேட்

மேலும் படிக்க |  தனுஷின் கேப்டன் மில்லர் படத்தில் இணைந்த அருண்ராஜா காமராஜ்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News