பஞ்சாயத்தில் சம்பவம்.. சௌந்தரபாண்டிக்கு காத்திருந்த ஷாக் - அண்ணா சீரியல் அப்டேட்

தினசரி தொடராக வரும் டிவி சீரியல்களுக்கும், அவற்றில் நடிக்கும் நடிகர், நடிகைகளுக்கும் சினிமா பிரபலங்களையே மிஞ்சும் அளவுக்கு கூட ரசிகர் பட்டாளம் உள்ளது. "அண்ணா" சீரியலுக்கு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு இருக்கிறது.

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : Jul 28, 2023, 12:12 PM IST
  • பாக்கியம் சௌந்தரபாண்டியிடம் எடக்கு முடக்காக பேசி ரூமுக்கு அனுப்புகிறாள்.
  • ஷண்முகம் வெளியே சென்று விடுகிறான்.
  • ஞ்சாயத்து தலைவர்கள் உனக்கு கொடுத்த டைம் முடிந்து போச்சு என்கின்றனர்.
பஞ்சாயத்தில் சம்பவம்.. சௌந்தரபாண்டிக்கு காத்திருந்த ஷாக் - அண்ணா சீரியல் அப்டேட்  title=

 

இன்றைய காலகட்டத்தில், சினிமாவை விட, தொலைக்காட்சி சீரியல்களை அனைவரும் விரும்பி பார்க்கின்றனர். வீட்டில் வேலை பார்த்துக் கொண்டே சீரியலை பார்க்கலாம் என்பதால், பெண்களிடையே பிரபலமாகி விட்ட சீரியல்கள், தற்போது, அனைவருக்கும் போதை கொடுக்கும் பொழுதுபோக்காகவே மாறிவிட்டது என்று சொல்லலாம். தினசரி தொடராக வரும் டிவி சீரியல்களுக்கும், அவற்றில் நடிக்கும் நடிகர், நடிகைகளுக்கும் சினிமா பிரபலங்களையே மிஞ்சும் அளவுக்கு கூட ரசிகர் பட்டாளம் உள்ளது. "அண்ணா" சீரியலுக்கு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு இருக்கிறது.

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் சனி வரை தினமும் இரவு 8.30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் அண்ணா. இந்த சீரியலில் பஞ்சாயத்தில் கெடு வைக்க முத்துபாண்டிக்கு எதிரான ஆதாரத்தை வைத்து ஷண்முகம் பரணியிடம் உதவி கேட்ட நிலையில் அண்ணா சீரியல் இன்றைய எபிசோடில் நடக்க போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க. 

அதாவது, சௌந்தரபாண்டி பரணி ரூமுக்குள் வந்து சந்தேகத்துடன் சண்முகத்தை தேட பரணி எனக்கு தூக்கம் வருது என்று சொல்லி அவரை வெளியே அனுப்பி சண்முகத்தை எதுக்கு எப்போ வந்த என்று கேட்க அவன் வீடியோவை காட்டி என் தங்கச்சிக்கு நீதான் உதவி செய்யணும், எப்படியாவது அவளை காப்பாற்று என்று சொல்கிறான். 

பிறகு பரணி உன் தங்கச்சிக்கு நாளைக்கு பஞ்சாயத்தில் நல்லது தான் நடக்கும் இன்றி சொல்லி அனுப்ப கீழே இரண்டு போலீஸ் வந்து விட அதை பார்த்து வெட்டுக்கிளி எஸ்கேப் ஆகி விடுகிறான், போலீஸ் ஏணியை தூக்கி கொண்டு சென்று விட ஷண்முகம் ஏணி இல்லாமல் எப்படி இறங்குவது என்று தவிக்கிறான். அடுத்து வீட்டுக்குளேயே சென்று விடலாம் என்று பார்த்தால் சௌந்தரபாண்டி ஹாலில் உட்காந்து இருக்கிறார். 

இதனால் பரணி அவனை வெளியே கூட்டி செல்ல பாக்கியம் தடுத்து நிறுத்த ஷண்முகம் வந்த காரணத்தையும் பரணி உதவ உள்ள விஷயத்தையும் சொல்கிறான். பிறகு பாக்கியம் உன் தங்கச்சிகளுக்கு ஒன்னுனா பரணி கண்டிப்பா உதவுவா, அவளுக்கு ஒன்னு என்றால் நீதான் உதவனும் என்று சொல்கிறாள். ஷண்முகம் கண்டிப்பா உதவுவேன் என்று சொல்ல பாக்கியம் சௌந்தரபாண்டியிடம் எடக்கு முடக்காக பேசி ரூமுக்கு அனுப்ப ஷண்முகம் வெளியே சென்று விடுகிறான். 

மறுநாள் பஞ்சாயத்து கூட பஞ்சாயத்து தலைவர்கள் உனக்கு கொடுத்த டைம் முடிந்து போச்சு, என்ன முடிவு எடுத்து இருக்க என்று கேள்வி கேட்க ஷண்முகம் ரோட்டையே பார்த்து கொண்டிருக்க திரும்பும் கேட்க ஒரு 10 நிமிஷம் என்று சொல்கிறான். சௌந்தபாண்டி இது என் கோட்டை, இங்க உன்னை காப்பாற்ற எவனும் வர முடியாது என்று சொல்ல இவன் என் அப்பன் வருவான் என்று சொல்ல உன் அப்பா பஞ்சாயத்துக்கு வரவே பயப்படுறான், அவன் உன்னை காப்பாற்ற வர போறானா? என்று சிரிக்கின்றனர். ஷண்முகம் முருகன் வருவான் என்று சொல்லி கொண்டிருக்கிறான். 

அடுத்து பரணி காரில் வந்து இறங்கி சண்முகத்துக்கு தம்ப்ஸ் அப் சிம்பல் காட்ட கொஞ்ச நேரத்தில் ஜீப் ஒன்று வந்து மனித உரிமைகள் ஆணையத்தில் இருந்து வந்திருப்பதாகவும் முத்துபாண்டியை விசாரிக்க வேண்டும் எனவும் சொல்கின்றனர். முதலில் முத்துப்பாண்டி அடம் பிடிக்க பிறகு வீடியோ ஆதாரத்தை காட்டி அவனை அழைத்து செல்ல சௌந்தரபாண்டி மூக்குடைந்து நிற்கிறார்.  இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய அண்ணா சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காண தவறாதீர்கள்.

மேலும் படிக்க | அண்ணா சீரியல் அப்டேட்: அசிங்கப்பட்ட ஷண்முகம்.. என்ட்ரி கொடுக்கும் முத்துப்பாண்டி

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News