அரசு இல்லத்தை காலி செய்து சாவியை ஒப்படைத்தார் ராகுல் காந்தி!

ராகுல் காந்தி எம்.பி பதவியில் இருந்து தகுதி இழந்ததாக அறிவிக்கப்பட்டதை அடுத்து, ஏப்ரல் 22ம் தேதிக்குள் அரசு பங்களாவை காலி செய்ய வேண்டும் என்று மக்களவைச் செயலகம் அவருக்கு நோட்டீஸ் அனுப்பியது.  

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : Apr 22, 2023, 09:08 PM IST
  • அரசு பங்களாவை ராகுல் காந்தி காலி செய்தது தொடர்பாக காங்கிரஸ் கட்சியின் ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள செய்தி.
  • அரசு பங்களாவை காலி செய்ய வேண்டும் என்று மக்களவைச் செயலகம் நோட்டீஸ்.
  • சூரத் நீதிமன்றம் ராகுல் காந்திக்கு 2 ஆண்டு சிறை தண்டனை விதித்தது.
அரசு இல்லத்தை காலி செய்து சாவியை ஒப்படைத்தார் ராகுல் காந்தி! title=

மோடி என்ற சமூகத்தை ராகுல் அவதூறாகப் பேசியதாக தொடரப்பட்ட வழக்கில், குஜராத்தின் சூரத் நீதிமன்றம் ராகுல் காந்திக்கு 2 ஆண்டு சிறை தண்டனை விதித்தது. இதையடுத்து, குற்றவியல் வழக்கில் 2 அல்லது அதற்கு மேற்பட்ட ஆண்டுகள் தண்டனை பெறுபவர்கள் மக்கள் பிரதிநிதியாக தொடர முடியாது எனும் சட்டத்தின் கீழ், ராகுல் காந்தி தகுதி இழப்புக்கு ஆளானார். கடந்த மாதம் 24ம் தேதி ராகுல் காந்தி எம்.பி பதவியில் இருந்து தகுதி இழந்ததாக அறிவிக்கப்பட்டது. 

இதையடுத்து, ஏப்ரல் 22ம் தேதிக்குள் அரசு பங்களாவை காலி செய்ய வேண்டும் என்று மக்களவைச் செயலகம் அவருக்கு நோட்டீஸ் அனுப்பியது.  இந்நிலையில், அரசு பங்களாவை காலி செய்த ராகுல் காந்தி, அதன் சாவியை இன்று மக்களவைச் செயலகத்திடம் ஒப்படைத்தார். முன்னாள் காங்கிரஸ் தலைவர் வெள்ளிக்கிழமையே தனது உடமைகள் அனைத்தையும் அதிகாரபூர்வ இல்லத்தில் இருந்து எடுத்துக் கொண்டு சென்றார்.

அரசு பங்களாவை ராகுல் காந்தி காலி செய்தது தொடர்பாக காங்கிரஸ் கட்சியின் ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள செய்தியில், ''இந்த நாடு ராகுல் காந்தியின் வீடு. நாட்டு மக்களின் இதயங்களில் ராகுல் குடியிருக்கிறார். மக்களுடனான அவரது உறவை யாராலும் பிரிக்க முடியாது. சிலர் அவரை தங்களது மகனாகப் பார்க்கிறார்கள். சிலர், அவரை சகோதரனாகப் பார்க்கிறார்கள். சிலர் அவரை தலைவராகப் பார்க்கிறார்கள்'' என பதிவிடப்பட்டது.

 

 

மேலும் படிக்க | Karnataka Election: கர்நாடக மாநிலத்தில் அடுத்து ஆட்சி அமைக்கப்போவது யார்?

காங்கிரஸ் தலைவர் சசி தரூர் ட்விட்டரில், "மக்களவை செயலகத்தின் உத்தரவின் பேரில் இன்று ராகுல் காந்தி துக்ளக்லேனில் உள்ள தனது வீட்டை காலி செய்கிறார். மேல்முறையீடு செய்ய நீதிமன்றம் அவருக்கு 30 நாட்கள் அவகாசம் அளித்த்துள்ளது. உயர்நீதிமன்றம் அல்லது உச்ச நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ளதால் அவர் மீண்டும் நாடாளுமன்ற உறுப்பினராகலாம். ஆனாலும், அவர் விதிகளுக்கு மதிப்பளிப்பவராக இல்லத்தை காலி செய்துவிட்டார்" என பதிவிட்டுள்ளார்.

மேலும் படிக்க | கர்நாடக சட்டசபை தேர்தல் 2023: நட்சத்திர பிரச்சாரகர் பட்டியலில் முக்கிய பெயர்கள் மிஸ்ஸிங்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News