Preventing Heart Attack: மாரடைப்பு ஏற்படாமல் இருக்க... நீங்கள் செய்ய வேண்டியவை..!

இந்தியாவில் இளம் வயதில் மாரடைப்பினால் இறப்பவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. மாரடைப்பால் இளைஞர்கள் உயிரிழப்பது மிகவும் கவலையளிக்கும் விஷயம். இதற்கு கொலஸ்ட்ரால் அதிகரிப்பது உட்பட பல காரணங்கள் உள்ளது. 

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : May 1, 2024, 12:50 PM IST
  • இதயத்தை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவும் உணவுகள்.
  • மாரடைப்பு ஏற்படுவதற்க்கான அறிகுறிகள்.
  • ஆரோக்கியமான இதயம் ஒரு நாளைக்கு 7600 லிட்டர் இரத்தத்தை பம்ப் செய்கிறது.
Preventing Heart Attack: மாரடைப்பு ஏற்படாமல் இருக்க... நீங்கள் செய்ய வேண்டியவை..! title=

இந்தியாவில் இளம் வயதில் மாரடைப்பினால் இறப்பவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. மாரடைப்பால் இளைஞர்கள் உயிரிழப்பது மிகவும் கவலையளிக்கும் விஷயம். இதற்கு கொலஸ்ட்ரால் அதிகரிப்பது உட்பட பல காரணங்கள் உள்ளது. அதிக கொல்ஸ்ட்ரால் இதய நோய், மாரடைப்பு மற்றும் பக்கவாதம் போன்ற உயிருக்கு ஆபத்தான பிரச்சனைகளை ஏற்படுத்தலாம். கொலஸ்ட்ரால் என்பது HDL எனப்படும் நல்ல மற்றும் LDL எனப்படும் கெட்ட கொலஸ்ட்ரால் என இரு வகைகள் உள்ளன. கெட்ட கொலஸ்ட்ரால் தான் இதயத்திற்கு ஆபத்தை தரும். நல்ல கொலஸ்ட்ரால் இதய ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது.

மாரடைப்பு  ஏற்படாமல் தடுக்க  உடலில் அதிகரித்து வரும் கொலஸ்ட்ராலை (Cholesterol) கட்டுப்படுத்துவது மிக அவசியம். சில குறிப்பிட்ட உணவுகளை தவறாமல் சேர்ப்பதன் மூலம், இதய நரம்புகளில் படிந்திருக்கும் கெட்ட கொலஸ்ட்ராலை முற்றிலும் வெளியேற்றலாம். இது மாரடைப்பு பக்கவாதம் ஏற்படும் அபாயத்தைக் குறைக்கும். இதயத்தை பலவீனப்படுத்தும் எதிரிகளை வெல்வது அவசியம்.  இந்நிலையில், இதயத்தை எவ்வாறு ஆரோக்கியமாக வைத்திருப்பது, மாரடைப்பு ஏற்படுவதற்கான அறிகுறிகள் என்ன மற்றும் இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தும் இதயத்திற்கான சூப்பர்ஃபுட்கள்  என்பதை அறிந்து கொள்ளலாம்.

உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள இதயத் துடிப்பு சீராக இருப்பது அவசியம். ஆரோக்கியமான இதயம் ஒரு நாளைக்கு 7600 லிட்டர் இரத்தத்தை பம்ப் செய்கிறது.  150 கிராம் எடை கொண்ட இதயம், முழு உடலுக்கும் இரத்தத்தை வழங்குகிறது. எனவே, இதயத்தை ஆரோக்கியமாக வைத்திருப்பது மிக அவசியம்.

மாரடைப்புக்கான அறிகுறிகள் ( Heart Attack Symmptoms)

1. மார்பில் வலி

2. தோள்பட்டை வலி

3. திடீர் வியர்வை

4. வேகமான இதயத்துடிப்பு

5. சோர்வு மற்றும் பதற்றம்

6. சுவாச பிரச்சனைகள்

மேலும் படிக்க | காலையில் இந்த பானங்களை குடித்தால் கொலஸ்ட்ரால் அளவை குறைக்கலாம்!

இதயத்தை ஆரோக்கியமாக வைத்திருக்க (How to Keep Your Heart Healthy)

1. இரத்த அழுத்தத்தை கட்டுக்குள் வைத்திருக்க வேண்டும்

2. கொலஸ்ட்ராலை கட்டுக்குள் வைத்திருக்க வேண்டும்

3. சர்க்கரை அளவை கட்டுக்குள் வைத்திருக்க வேண்டும்

4.  உடல் எடையை கட்டுக்குள் வைத்திருக்க வேண்டும்

இதயத்தை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவும்  உணவுகள் (Foods That Keep Your Heart Healthy)

சுரைக்காய் கொலஸ்ட்ராலை எரித்து இதயத்தை ஆரோக்கியமாக வைத்திருக்கும் காய்கறிகளில் ஒன்று.  மேலும் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் நிறைந்த இஞ்சி இது கெட்ட கொலஸ்ட்ரால் (எல்டிஎல்) இதய தமனிகளில் சேருவதை தடுக்க உதவுகிறது. வெந்தயத்தில் கொழுப்பை எரிக்க உதவும், நார்ச்சத்து, பொட்டாசியம், இரும்பு, துத்தநாகம் மற்றும் பிற ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன.  பூண்டில் கந்தகம் உள்ள நிலையில், இது ரத்தத்தை மெலிதக்கி கெட்ட கொலஸ்ட்ரால் (எல்டிஎல்) அளவைக் குறைக்க உதவுகிறது.

இதயத்திற்கான பிற சூப்பர் உணவுகள்

ஆளிவிதை
இலவங்கப்பட்டை
மஞ்சள்

இதயம் வலுவாக இருக்க உதவும் கஷாயம்

1 தேக்கரண்டி அர்ஜுன மரப்பட்டை
2 கிராம் இலவங்கப்பட்டை
5 இலைகள் துளசி
இவற்றை கொதிக்க வைத்து கஷாயம் தயாரித்து, தினமும் குடித்து வந்தால் இதயம் ஆரோக்கியமாக இருக்கும்

(பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ZEE MEDIA இந்த தகவல்களுக்கு பொறுப்பேற்காது.)

மேலும் படிக்க | நாள் முழுவதும் ஆற்றலை அள்ளிக் கொடுக்கும்... சில 'சூப்பர்' உணவுகள்...!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News