No Sugar Diet: சர்க்கரையை முற்றிலுமாக தவிர்த்தால்... உடலில் ஏற்படும் அதிசய மாற்றங்கள்

No Sugar Diet:  ஒரே ஒரு மாதத்திற்கு சர்க்கரை உட்கொள்வதை முற்றிலுமாக நிறுத்தினால் உடல் ஆரோக்கியத்தில் ஏற்படும் வியக்கத்தக்க மாற்றங்களை பற்றி அறிந்து கொள்ளலாம்.

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : Mar 23, 2024, 01:50 PM IST
  • சர்க்கரை உட்கொள்வதை முற்றிலுமாக நிறுத்தும்போது, எடுத்துக் கொள்ளும் கலோரி அளவு, மிகவும் குறையும்.
  • ரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்துவது மிகவும் எளிதான காரியம்.
  • சர்க்கரை சாப்பிடுவதால் உடனடி ஆற்றல் கிடைக்கும். ஆனால், அது சிறிது நேரத்திற்கு மட்டுமே.
No Sugar Diet: சர்க்கரையை முற்றிலுமாக தவிர்த்தால்... உடலில் ஏற்படும் அதிசய மாற்றங்கள் title=

இனிப்புகள் என்றால் யாருக்குத்தான் பிடிக்காது... சர்க்கரை சேர்த்து தயாரிக்கப்படும் ஐஸ்கிரீம், கேக், சாக்லேட் போன்ற உணவுகளை தவிர்க்க முடியாமல், அதற்கு அடிமையாவதை நாம் அன்றாட வாழ்க்கையில் பலரை காணலாம். பொதுவாகவே சர்க்கரை உடலுக்கு, மிகவும் தீங்கு விளைவிக்க கூடிய உணவுகளில் முதலிடம் வகிக்கிறது. அதிக கலோரி கொண்ட சர்க்கரை, உடல் பருமன், நீரழிவு, பலவீனமான எலும்புகள், களை இழந்த சருமம் ஆகிய பிரச்சினைகளுக்கு முக்கிய காரணமாகிறது. இந்நிலையில் ஒரே ஒரு மாதத்திற்கு சர்க்கரை உட்கொள்வதை முற்றிலுமாக நிறுத்தினால் உடல் ஆரோக்கியத்தில் ஏற்படும் வியக்கத்தக்க மாற்றங்களை பற்றி அறிந்து கொள்ளலாம்.

சர்க்கரையை முற்றிலுமாக நிறுத்துவது என்பது, டீ காபி, பிஸ்கட்  உட்பட சர்க்கரை சேர்த்த அனைத்து விதமான உணவுப் பொருட்களையும் தவிர்ப்பதாகும். சிறிதளவு கூட எந்த வகையிலும் எடுத்துக் கொள்ளாமல் தவிர்ப்பதால், பலவிதமான பிரச்சனைகள் இருந்து விடுபட்டு, உடலில் வியக்கத்தக்க மாற்றங்கள் ஏற்படும்.

உடல் பருமன் (No Sugar Diet For Weight Loss)

சர்க்கரையை முற்றிலுமாக நிறுத்துவதால் ஏற்படும் பலன்களில் உடல் பருமன் குறைதல் மிக முக்கியமான பலனாகும். தொப்பை கொழுப்பை எரிக்க இது மிகவும் உதவும். உடல் எடை அதிகரிப்பதற்கான முக்கிய காரணம், அதிக சர்க்கரை உட்கொள்வது. இந்நிலையில் சர்க்கரை உட்கொள்வதை முற்றிலுமாக நிறுத்தும்போது, எடுத்துக் கொள்ளும் கலோரி அளவு, மிகவும் குறையும். இது உடல் கொழுப்பை எரிக்க (Weight Loss Tips) உதவும்.

நீரழிவு (Diabetes Control)

சர்க்கரை நோயாளிகளுக்கு, இனிப்புகள் விஷம் போன்றது. சர்க்கரை நோய் இல்லை என்றாலும் கூட, சர்க்கரை அதிகம் எடுத்துக் கொள்வதால் நீரிழிவு நோய் ஏற்படும் அபாயம் அதிகரிக்கிறது. 30 நாட்கள் சர்க்கரையை நிறுத்தும் போது, ரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்துவது மிகவும் எளிதான காரியம் ஆகும்.

ஆற்றல் (High Energy Level)

சர்க்கரை சாப்பிடுவதால் உடனடி ஆற்றல் கிடைக்கும். ஆனால், அது சிறிது நேரத்திற்கு மட்டுமே. சர்க்கரையை முற்றிலுமாக கைவிடுவது ஆற்றல் அளவை மேம்படுத்தும்.

கொழுப்பு கல்லீரல் (Fatty Liver)

கொழுப்பு கல்லீரல் அல்லது கல்லீரல் பாதிப்பு உள்ளவர்கள், சர்க்கரை உட்கொள்வதை முற்றிலுமாக நிறுத்தினால், வைக்கும் பலன்களை அடையலாம். கல்லீரல் தன்னைத் தானே புதுப்பித்துக் கொண்டு, சேனமடைந்த நிலையில் இருந்து மீள, இது உதவும்.

மேலும் படிக்க | பச்சை வாழைப்பழத்தை பார்த்தால் விடாதிங்க... உடலுக்கு அவ்வளவு நல்லது இருக்கு!

சரும ஆரோக்கியம் (Skin Care)

உணவில் சர்க்கரையை முற்றிலுமாக தவிர்த்தால், சரும ஆரோக்கியம் மேம்படும். நச்சுக்கள் முழுமையாக உடலில் இருந்து நீங்குவதால், சருமமும் முகமும், பளபளப்பாக இருக்கும். எனவே முதுமையிலும் இளமையாக இருக்க, சர்க்கார் முற்றிலுமாக தவிர்க்கவும்.

பல் ஆரோக்கியம் 

பல்வலி, ஈறுகளில் பிரச்சனை ஆகியவற்றை தவிர்க்க சர்க்கரை சேர்த்த உணவுகளை தவிர்க்க வேண்டும். இனிப்புகளை சாப்பிடும் போது, குறிப்பாக சாக்லேட் போன்றவைகளால், பாக்டீரியா தாக்கி, பல் சொத்தை, பல் வலி போன்ற பிரச்சனைகள் ஏற்படுகின்றன.

எலும்பு ஆரோக்கியம்

சுத்திகரிக்கப்பட்ட சர்க்கரை, எலும்புகளில் இருந்து கால்சியத்தை உறிஞ்சும். இதனால் எலும்புகள் பலவீனமடையும். எனவே சர்க்கரையை உணவில் இருந்து தவிர்ப்பது, ஆஸ்டியோபோரோசிஸ் போன்ற எலும்பு மெலிதல் நோய் தாக்காமல் தவிர்க்கலாம்.

(பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டது. அதை ஏற்றுக்கொள்ளும் முன் மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ZEE NEWS அதை உறுதிப்படுத்தவில்லை.)

மேலும் படிக்க | நீரிழிவு நோயாளியா நீங்கள்? கல்லீரல் பாதிப்பிற்கு அதிக வாய்ப்பு.... உஷார்!!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News