கறிவேப்பிலை: தலை முதல் கால் வரை.... ஒரே இலை ஓராயிரம் நன்மைகள்

Health Benefits of Curry Leaves: கறிவேப்பிலையை நாம் தினமும் சமையலில் பயன்படுத்தினாலும் இதில் கொட்டிக்கிடக்கும் அசாத்திய நன்மைகள் பற்றி பலருக்கு தெரிவதில்லை.

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Oct 24, 2023, 09:07 AM IST
  • பலவீனமான பார்வைக்கு பயனளிக்கும்.
  • இரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்த உதவும்.
  • வைரல் காய்ச்சலில் நன்மை பயக்கும்.
கறிவேப்பிலை: தலை முதல் கால் வரை.... ஒரே இலை ஓராயிரம் நன்மைகள் title=

கறிவேப்பிலையின் நன்மைகள்: தென்னிந்தியாவில் பொதுவாக அதிகமாக பயன்படுத்தப்படும் கறிவேப்பிலை உணவின் சுவையையும் மணத்தையும் மேம்படுத்துவது மட்டுமல்லாமல் உடல் ஆரோக்கியம் மற்றும் சருமத்திற்கும் நன்மை செய்கிறது. கறிவேப்பிலையை எந்த உணவில் சேர்த்தாலும் அந்த உணவின் சுவையும் மணமும் மேம்படுகின்றது. கறிவேப்பிலையில் அதிகப்படியான சத்துக்கள் உள்ளன. இதில் வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் நிறைந்துள்ளன. இதை நாம் தினமும் சமையலில் பயன்படுத்தினாலும் இதில் கொட்டிக்கிடக்கும் அசாத்திய நன்மைகள் பற்றி பலருக்கு தெரிவதில்லை. கறிவேப்பிலையை சாப்பிடுவதால் கிடைக்கும் பல வகை நன்மைகளை பற்றி இந்த பதிவில் காணலாம். 

கறிவேப்பிலையின் ஆரோக்கிய நன்மைகள் (Health Benefits of Curry Leaves) 

பலவீனமான பார்வைக்கு பயனளிக்கும்

நீங்கள் கண் பார்வைக்காக கண்ணாடி அணியும் நபராக இருந்தால், கறிவேப்பிலை உங்களுக்கு ஒரு சஞ்சீவியாக பயன் தரும். இதை தினமும் உணவில் சேர்த்துக்கொண்டால், உங்கள் கண்பார்வை மேம்படும். கறிவேப்பிலையில் வைட்டமின் ஏ அதிகம் உள்ளது. வைட்டமின் ஏ கண்களுக்கு மிகவும் முக்கியமானது என்பது குறிப்பிடத்தக்கது. ஆகையால் கறிவேப்பிலையை தினசரி உணவில் சேர்த்துக்கொள்வது கண் பார்வை (Home Remedy For Good Eye Sight) மேம்பட உதவும்.

இரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்த உதவும்

கறிவேப்பிலையில் ஆண்டி-ஆக்சிடெண்ட் பண்புகள் நிறைந்துள்ளன. இது முழு உடலில் உள்ள நச்சுகளை நீக்க பயனுள்ளதாக இருக்கும். கறிவேப்பிலையை முறையாக உட்கொள்வதால், இரத்த சர்க்கரை அளவு குறைகப்பட்டு நீரிழிவு நோய் (Diabetes) கட்டுக்குள் இருக்கும். 

வைரல் காய்ச்சலில் நன்மை பயக்கும்

மாறிவரும் பருவ நிலை காரணமாக ஏற்படும் வைரஸ் காய்ச்சலைத் தடுப்பதிலும் (Home Remedy For Viral Fever) கறிவேப்பிலை நன்மை பயக்கும். இதை சாப்பிடுவதால் காய்ச்சல், சளி, இருமல் போன்ற நோய்கள் உடலில் இருந்து விலகி நிற்கும். இதில் அதிக அளவு வைட்டமின் ஏ மற்றும் வைட்டமின் சி உள்ளது.

மேலும் படிக்க | ஜிம், டயட் வேண்டாம்.. நடந்தே தொப்பை, எடையை குறைக்கலாம்: இப்படி வாக் பண்ணுங்க!!

வயிற்று பிரச்சனைகளில் இருந்து நிவாரணம் அளிக்கும்

வெளி உணவுகளை அதிகமாக சாப்பிடுவது அல்லது வறுத்த உணவுகளை அதிகமாக சாப்பிடுவது அமிலத்தன்மை, மலச்சிக்கல் மற்றும் வயிற்றுப்போக்கு போன்ற வயிற்று பிரச்சனைகளை ஏற்படுத்துகிறது. இதுபோன்ற சூழ்நிலைகளில், சில நேரங்களில் மருந்துகளும் வேலை செய்யாது. கறிவேப்பிலையை கொதிக்க வைத்து அதன் நீரை குடித்து வந்தால் உடனடி நிவாரணம் கிடைக்கும். கூடுதலாக, இது உங்கள் செரிமானத்தையும் பலப்படுத்துகிறது.

இயற்கையாகவே நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்

கறிவேப்பிலை இயற்கையான முறையில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் (Home Remedy To Boost Immunity) இலையாகும். இதில் உள்ள வைட்டமின் சி மற்றும் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் உங்கள் உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை பலப்படுத்துகின்றன. கறிவேப்பிலையின் நீரை தண்ணீரை உணவுப் பொருட்களுடன் கலந்து அல்லது கொதிக்க வைத்து குடிப்பது உடலுக்கு மிக நல்லதாக கருதப்படுகின்றது. 

உடல் எடை குறைய

கறிவேப்பிலையில் இருக்கும் பல வித மருத்துவ குணங்கள் பிடிவாதமான தொப்பையைக் குறைக்க (Belly Fat) மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இதில் அதிக அளவு தாமிரம், இரும்பு மற்றும் நார்ச்சத்து உள்ளது.

(பொறுப்பு துறப்பு: அன்புள்ள வாசகரே, எங்கள் செய்திகளைப் படித்ததற்கு நன்றி. இந்தச் செய்தி உங்களுக்கு பல தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதை எழுதுவதில் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களின் உதவியை நாங்கள் பெற்றுள்ளோம். இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)

மேலும் படிக்க | என்னை இப்படி பயன்படுத்தினா சீக்கிரம் ஒல்லியாகலாம்! டிப்ஸ் கொடுக்கும் ஆயில் புல்லிங்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News