வெறும் வயிற்றில் 30 நாட்களுக்கு நெல்லிக்காய் ஜூஸ்... உடலில் ஏற்படும் அதிசய மாற்றங்கள்!

எடையைக் குறைக்கவும், உங்கள் உடலில் உள்ள நச்சுக்களை நீக்கவும் உதவும் ஒரு சிறந்த காலை பானத்தை நீங்கள் தேடுகிறீர்களானால், ஆம்லா என்னும் நெல்லிக்காய் ஜூஸ் மிக சிறந்த தேர்வாக இருக்கும்.

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : Oct 6, 2023, 04:36 PM IST
  • நெல்லிக்காய் பானமானது ஆயுர்வேத பானமாக கருதப்படுகிறது.
  • ஆம்லா என்னும் நெல்லிக்காய் ஜூஸ் மிக சிறந்த தேர்வாக இருக்கும்.
  • நெல்லிக்காயில் வைட்டமின் சி நிரம்பியுள்ளது.
வெறும் வயிற்றில் 30 நாட்களுக்கு நெல்லிக்காய் ஜூஸ்... உடலில் ஏற்படும் அதிசய மாற்றங்கள்! title=

நெல்லிக்காயில் உள்ள அற்புதமான ஊட்டச்சத்து  மற்றும் ஆரோக்கிய மதிப்பின் காரணமாக இது சூப்பர்ஃபுட் என்று அழைக்கப்படுகிறது. நெல்லிக்காயில் ஊட்டச்சத்துக்களுக்கு பஞ்சமில்லை. இதில் புரதம், கார்போஹைட்ரேட்ஸ், நார்ச்சத்து, வைட்டமின் ஏ, வைட்டமின் சி, வைட்டமின் ஈ மற்றும் கால்சியம் நிறைந்துள்ளன. மேலும், அதில் சர்க்கரை மிகக் குறைவாகவே உள்ளது. ஆகையால் இது நம் உடலுக்கு மிகவும் நன்மை பயக்கும்.  இது பொதுவாக நெல்லிக்காய் சாறு, சட்னி, காய்கறி, ஊறுகாய் மற்றும் இன்னும் பிற வகைகளில் சமைக்கப்பட்டு உட்கொள்ளப்படுகின்றது. 

எடையைக் குறைக்கவும், உங்கள் உடலில் உள்ள நச்சுக்களை நீக்கவும் உதவும் ஒரு சிறந்த காலை பானத்தை நீங்கள் தேடுகிறீர்களானால், ஆம்லா என்னும் நெல்லிக்காய் ஜூஸ் மிக சிறந்த தேர்வாக இருக்கும்.  நெல்லிக்காயில் வைட்டமின் சி நிரம்பியுள்ளது, இது பல ஆரோக்கிய காரணங்களுக்காக சிறந்தது. முதலில், இது சரும பிரச்சினைகளை தீர்க்க உதவுகிறது. சேதமடைந்த செல்களை சரிசெய்கிறது. நல்ல சரும ஆரோக்கியத்தை வழங்குகிறது. மேலும் எடை இழப்புக்கு ஒரு சிறந்த பானமாகும்.

ஆசியாவில், Indian Gooseberry எனப்படும் நெல்லிக்காய் பானமானது ஆயுர்வேத பானமாக கருதப்படுகிறது. இது ஏராளமான நன்மைகளை வழங்குகிறது. வைட்டமின் சி மட்டுமல்ல, நெல்லிக்காய் சாறு மற்ற வைட்டமின்கள் மற்றும் தாதுக்களையும் கொண்டுள்ளது. மேலும் இதில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் நிறைந்துள்ளன.

ஆனால், ஆம்லா ஜூஸ் குடிக்கும் நேரம் மற்றும் வழிமுறை மிகவும் முக்கியம் இந்த கட்டுரையில், வெறும் வயிற்றில் 30 நாட்களுக்கு நெல்லிக்காய் சாற்றை குடிப்பதன் மூலம் உங்கள் உடலில் ஏற்படக்கூடிய அனைத்து அதிசய மாற்றங்களையும் அறிந்து கொள்ளலாம்.

ஆம்லா சாறு ஆரோக்கிய நன்மைகள்

வெறும் வயிற்றில் நெல்லிக்காய் ஜூஸ் குடிப்பதால் கீழ்கண்ட வலையில் பல ஆரோக்கிய நன்மைகள் கிடைக்கும் 

1. துரிதமான உடல் எடை இழப்பு

2. மேம்படுத்தப்பட்ட செரிமானம்.

3. குடல் வீக்கம், குடல் இயக்கம் போன்றவற்றை நிர்வகிக்க உதவுகிறது.

4. நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கிறது

5. சிறந்த சரும ஆரோக்கியம்.

6. நாள்பட்ட நோய்களின் ஆபத்து குறையும்

30 நாட்களுக்கு வெறும் வயிற்றில் நெல்லிக்காய் ஜூஸ் குடித்து வந்தால் ஏற்படும் ஆரோக்கிய நன்மைகள்:

எடை இழப்பு

வெறும் வயிற்றில் நெல்லிக்காய் ஜூஸ் குடிப்பதால் உங்கள் உடல் எடையை வேகமாக குறைக்கலாம். நெல்லிக்காய் சாறு, நார்ச்சத்துக்கான நல்ல மூலமாகும், இது சாப்பிட்ட பிறகு வயிறு நிறைந்த உணர்வு ஏற்படுகிறது. இந்த பானம் உடலின் மெட்டபாலிசத்தை அதிகரிக்கவும், எடை இழப்பை ஊக்குவிக்கவும் உதவும்.

செரிமானத்திற்கு உதவுகிறது

நீங்கள் எந்த வகையான செரிமான ஆரோக்கிய பிரச்சனைகளால் பாதிக்கப்பட்டு வந்தாலும், அம்லா ஜூஸ் குடித்து உங்கள் நாளைத் தொடங்குங்கள். நெல்லிக்காய் சாறு ஒரு இயற்கை மலமிளக்கி மற்றும் செரிமானத்தை மேம்படுத்தவும் மலச்சிக்கலை போக்கவும் உதவும். செரிமானம் தொடர்பான பிரச்சனைகளுக்கு மாமருந்தாக இருக்கும்.

சரும ஆரோக்கியத்திற்கு நன்மை பயக்கும் நெல்லிக்காய்

சரும ஆரோக்கியத்தை நிர்வகிப்பதில் நெல்லிக்காய் சாறு எவ்வளவு பயனுள்ளதாக இருக்கும் என்பதை நாம் அனைவரும் அறிவோம். நெல்லிக்காய் சாறு ஆரோக்கியமான சருமத்திற்கு தேவையான வைட்டமின் சி போன்ற ஆக்ஸிஜனேற்றங்களின் நல்ல மூலமாகும். சரும செல்களின் சேதம் மற்றும் தோல் சுருக்கங்கள் இரண்டும் வைட்டமின் சி மூலம் தடுக்கப்படுகிறது.

வீக்கத்திற்கு சிறந்தது

நீங்கள்  இதய நோய், புற்றுநோய் மற்றும் மூட்டுவலி போன்ற எந்தவொரு நாள்பட்ட நோய்களாலும் வீக்கத்தால் பாதிக்கப்பட்டிருந்தால், உங்கள் நாளை ஒரு ஆம்லா ஜூஸ் மூலம் தொடங்க முயற்சிக்கவும். ஆம்லா ஜூஸில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் நிறைந்துள்ளன. இது உடல் முழுவதும் வீக்கத்தைக் குறைக்க உதவும்.

நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்தும்

நெல்லிக்காய் சாறு பற்றிய மற்றொரு நல்ல விஷயம் என்னவென்றால், இது நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்த உதவுகிறது. நெல்லிக்காய் சாறு வைட்டமின் சி ஊட்டசத்தின் நல்ல மூலமாகும். இது ஆரோக்கியமான நோயெதிர்ப்பு அமைப்புக்கு முக்கியமானது. வைட்டமின் சி உடலின் வெள்ளை இரத்த அணுக்களின் உற்பத்தியை அதிகரிக்க உதவுகிறது. இது தொற்றுநோய்களைத் தடுக்கப் பயன்படுகிறது.

முடிவுரை

ஒரு நாளைக்கு ஒன்று முதல் இரண்டு தேக்கரண்டி ஆம்லா ஜூஸ் பரிந்துரைக்கப்படுகிறது. இருப்பினும், விரும்பிய பலன்களை அடைய, குறைந்தபட்ச அளவோடு தொடங்குவது மற்றும் படிப்படியாக அதை அதிகரிப்பது முக்கியம். நெல்லிக்காய் சாற்றை அதிக அளவு உட்கொள்வது சிலருக்கு வயிற்றுப்போக்கு உள்ளிட்ட  எதிர்மறையான விளைவுகளை ஏற்படுத்தக்கூடும்.

(பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டது. அதை ஏற்றுக் கொள்வதற்கு முன், கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெறுங்கள். ZEE NEWS இதற்கு பொறுப்பேற்காது.)

மேலும் படிக்க | தனியா: சுகர் லெவெல் முதல் இரத்த அழுத்தம் வரை.. அற்புதமான வீட்டு வைத்தியம், இப்படி உட்கொள்ளலாம்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News