Brain Health: மந்தமான மூளையும் சுறுசுறுப்பாக்கும் ‘சில’ அற்புத மூலிகைகள்!

Herbs that Boosts Brain Power: கடினமான உழைப்பு காரணமாக, நமது உடல் சோர்வடைவதை போலவே மூளையும் சோர்வடைந்து மந்தமாகிறது. சோர்வாகும் மூளைக்கு புத்துணர்ச்சி அளித்து  சுறுசுறுப்பாக்குவதில் சில ஆயுர்வேத மூலிகைகள் சிறந்த பலனைத் தரும். 

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : Apr 24, 2024, 04:46 PM IST
  • ஆயுர்வேதக் மூலிகைகளை பயன்படுத்தி, இயற்கையாகவே மூளையின் ஆரோக்கியத்தை மேம்படுத்தலாம்.
  • கடினமான உழைப்பு காரணமாக, நமது உடல் சோர்வடைவதை போலவே மூளையும் சோர்வடைந்து மந்தமாகிறது.
  • மூளையை சுறுசுறுப்பாக்கும் அற்புத ஆயுர்வேத மூலிகைகள்.
Brain Health: மந்தமான மூளையும் சுறுசுறுப்பாக்கும் ‘சில’ அற்புத மூலிகைகள்! title=

Herbs that Boosts Brain Power: மூளை ஆரோக்கியம் என்பது மனித உடலின் இன்றியமையாத அம்சமாகும். நமக்கு வயதாகும்போது, உடலின் மற்ற பாகங்களைப் போலவே, மூளைக்கும் வயதாகிறது. அதனால், மூளைத்திறன் குறையலாம். இருப்பினும், ஆயுர்வேதத்தைப் பயன்படுத்துவதன் மூலம் மூளை உடல் ஆகிய இரண்டில் செயல்பாடுகளையும் மேம்படுத்தி, ஒட்டுமொத்த நரம்பியல் ஆரோக்கியம் மேம்படும் என நிபுணர்கள் நம்புகின்றனர். இந்த முயற்சியில், தரிஷா ஆயுர்வேத மையத்தின் நிறுவனர் மற்றும் மார்க்கெட்டிங் துறை இயக்குநரான ஆயுர்வேத நிபுணர் நமன் தமிஜா, அன்றாட வாழ்க்கைமுறையில் ஆயுர்வேதக் மூலிகைகளை பயன்படுத்தி, இயற்கையாகவே மூளையின் ஆரோக்கியத்தை மேம்படுத்தலாம் என்பது பற்றிய முக்கிய தகவல்களை பகிர்ந்து கொள்கிறார்.

கடினமான உழைப்பு காரணமாக, நமது உடல் சோர்வடைவதை போலவே மூளையும் சோர்வடைந்து மந்தமாகிறது. மூளை சோர்வடையும் போது மனச் சோர்வு, எரிச்சல், கோபம், பதற்றம், யாரிடமும் பேச பிடிக்காத நிலை போன்றவை ஏற்படுகின்றன. இந்த அறிகுறிகள் அனைத்தும், நீங்கள் உங்கள் மூளை ஆரோக்கியத்தில் கவனம் செலுத்த வேண்டும் என்பதையே குறிக்கிறது. மூளை மந்தமாக செயல்பட பல காரணங்கள் உண்டு.  இந்த பிரச்சனையை தீர்க்க (Health Tips) சில மூலிகைகள் பெரிதும் உதவும்

மூளையை சுறுசுறுப்பாக்கும் அற்புத ஆயுர்வேத மூலிகைகள் 

சோர்வாகும் மூளைக்கு புத்துணர்ச்சி அளித்து  சுறுசுறுப்பாக்குவதில் சில ஆயுர்வேத மூலிகைகள் சிறந்த பலனைத் தரும். இதில் துளசி, அஸ்வகந்தா, சங்கபுஷ்பம் மற்றும் பிராமி, ஜடாமான்சி ஆகியவை அடங்கும்.

துளசி

மூலிகைகளின் ராணியான துளசி, அதன் மருத்துவ குணத்தால், ஆயுர்வேத மருத்துவத்தில் பெரிதும் பயன்படுத்தப்பட்டு வருகிறது. தினமும் ஐந்து துளசி இலைகளை தண்ணீருடன் விழுங்குவதால் மூளையின் சக்தி அதிகரிக்கிறது. ஞாபகச் சக்தி அதிகரிக்க உதவும் துளசியை தினமும் உட்கொண்டால் நினைவாற்றல் மிக சிறப்பாக இருக்கும். மந்தமான மூளையும் சுறுசுறுப்பாகும். ஆங்கிலத்தில் Holy Basil என்றும் அழைக்கப்படும் துளசியின் இலைகள் மட்டுமின்றி, அதன் பூக்களிலும் எண்ணற்ற மருத்துவ குணங்கள் நிறைந்துள்ளது. பெரும்பாலான தென்னிந்திய வீடுகளில் துளசி கட்டாயம் வளர்க்கப்படும் செடிகளுள் ஒன்று.

மேலும் படிக்க | ஏறும் சுகர் லெவல் சட்டுனு குறைய இந்த ஆயுர்வேத விதைகளை சாப்பிடுங்கள்

அஸ்வகந்தா

அஸ்வகந்தா என்பது பல நூற்றாண்டுகளாக ஆயுர்வேத மருத்துவத்தில் பயன்படுத்தப்பட்டு வரும் ஒரு மூலிகை. . நரம்பு மண்டலத்தை அமைதிப்படுத்துவதற்கு பயன்படுத்தப்பட்டு வரும் அஸ்வகந்தா, மூளையை சுறுசுறுப்பாக்குவதோடு, உங்கள் மன அழுத்தத்தை போக்கி மனதை அமைதிபடுத்துகிறது. அன்றாடம் சோர்வு இல்லாமல் சுறுசுறுப்பாக இருக்கவும் இதைப் பயன்படுத்தலாம். பாலுடன் அஸ்வகந்தா சேர்த்து பருகுவது என்பது இந்த மூலிகையை நமது அன்றாட உணவில் சேர்க்கக்கூடிய சிறந்த வழியாகும். அஸ்வகந்தா நரம்புகள் தளர்த்தி, ஆழ்ந்த தூக்கத்தையும் கொடுக்கிறது.

பிராமி

பிராமி என்ற மூலிகை உங்கள் நினைவாற்றலை அதிகரிக்கும். மேலும் ஹார்மோன் சமநிலையை பராமரிக்கவும் உதவுகிறது. மறதி பிரச்சனை நீங்கவும்,  பிராமியை உட்கொள்வது நல்ல பலனைத் தரும். ஆயுர்வேதத்தில் பல நூற்றாண்டுகளாக மன அழுத்தத்தைக் குறைத்து புத்துணர்ச்சியூட்ட பிராமி மூலிகை பயன்படுத்தப்படுகிறது. மனதிற்கு அமைதி மற்றும் தெளிவான உணர்வை அளிப்பதால் மன அழுத்தம், பதற்றம் நீங்குகிறது. பிராமி மூலிகை அறிவாற்றல் செயல்பாட்டை மேம்படுத்தி, நினைவகத் திறனையும் மேம்படுத்தும்.

ஜடாமான்சி

இமாலயத்தை பூர்வீகமாகக் கொண்ட  மூலிகையான ஜடாமான்சி பல நூறு ஆண்டுகளாக ஆயுர்வேதத்தில் மன அழுத்தம் மற்றும் பதட்டத்திற்கான சிகிச்சைக்காக  பயன்படுத்தப்படுகிறது. இது நரம்பு மண்டலத்தை அமைதிப்படுத்தி, தூக்கத்தை மேம்படுத்தவும், மன உளைச்சலைக் குறைக்கவும் உதவும் மூலிகை ஆகும்.  

சங்கபுஷ்பம் 

சங்கபுஷ்பம் என்ற மூலிகை மூளையை கூர்மையாக்க மிகவும் உதவுகிறது. இதனை உட்கொள்வதால் உடலும் மனமும் புத்துணர்ச்சி பெறும். மனச் சோர்வை, பதற்றத்தை நீக்கி மந்தமான மூளையையும் சுறுசுறுப்பாக்கும் திறன் இதற்கு உண்டு. 

மேலும் படிக்க | தினமும் 30 நிமிட ஜாகிங்... உடலில் ஏற்படும் வியக்கத்தக்க மாற்றங்கள்..!!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News