IND vs ENG: இன்று யஷஸ்வி ஜெய்ஸ்வால் மீண்டும் பேட்டிங் செய்ய முடியுமா?

India vs England: இரண்டாவது இன்னிங்ஸில் சிறப்பாக ஆடிய ஜெய்ஸ்வால் ஒன்பது பவுண்டரிகள் மற்றும் ஐந்து சிக்ஸர்கள் அடித்து 104 ரன்கள் எடுத்தார், பிறகு முதுகு பிடிப்பு காரணமாக ஓய்வு பெற்றார்.  

Written by - RK Spark | Last Updated : Feb 18, 2024, 06:19 AM IST
  • சதம் அடித்து அசத்திய ஜெய்ஸ்வால்.
  • 104 ரன்கள் அடித்து ரிட்டையர்ட் ஆகி உள்ளார்.
  • உடல்நிலை சரியானால் மீண்டும் பேட்டிங் செய்யலாம்.
IND vs ENG: இன்று யஷஸ்வி ஜெய்ஸ்வால் மீண்டும் பேட்டிங் செய்ய முடியுமா?  title=

India vs England: ராஜ்கோட்டில் உள்ள நிரஞ்சன் ஷா ஸ்டேடியத்தில் இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கிடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகிறது.  முதல் இன்னிங்சில் சிறப்பாக ஆடிய இந்தியா அணி 445 ரன்கள் குடித்தது.  பின்பு ஆடிய இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சில் 319 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன் மூலம் இந்தியா 126 ரன்கள் முன்னிலை பெற்றது.  பின்பு 2வது இன்னிங்சில் பேட்டிங் செய்த இந்திய அணியின் வீரர்கள் அதிரடி காட்டினர். 3-வது நாளான நேற்று யஷஸ்வி ஜெய்ஸ்வால் இந்த தொடரில் மீண்டும் ஒரு சதம் அடித்து அசத்தி உள்ளார். கேப்டன் ரோஹித் சர்மா ஆரம்பத்திலேயே அவுட் ஆனாலும், ஜெய்ஸ்வால் மற்றும் கில் இணைந்து சிறப்பாக விளையாடினர். 3வது நாள் ஆட்ட நேர முடிவில் இந்தியா 322 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளனர்.

மேலும் படிக்க | ஜடேஜா செய்த டாப் கிளாஸ் சாதனைகள்... கபில்தேவ், அஸ்வின் பட்டியலில் சேர்ந்த ஜட்டு..!

இருப்பினும், சிறப்பாக பேட்டிங் செய்து கொண்டிருந்த ஜெய்ஸ்வால் 104 ரன்கள் அடித்திருந்த நிலையில் முதுகில் ஏற்பட்ட காயம் காரணமாக ரிட்டையர்ட் ஆகி வெளியேறினார்.  இருப்பினும், இப்போது ரசிகர்கள் மத்தியில் உள்ள கேள்வி என்னவென்றால், ஜெய்ஸ்வால் மீண்டும் பேட்டிங் செய்ய முடியுமா என்பதுதான். ரிட்டையர்ட் ஆகி வெளியேறி உள்ள ஜெய்ஸ்வால் இன்னும் அவுட் ஆகவில்லை என்பதால், அவர் மீண்டும் நல்ல உடற்தகுதியுடன் இருந்தால் இன்று மீண்டும் பேட்டிங் செய்யலாம்.  இங்கிலாந்துக்கு எதிரான மூன்றாவது போட்டியை வெற்றி பெற இந்தியா நிக்கு மிகப்பெரிய இலக்கு தேவை.  இதனால் அவர் நிச்சயம் மீண்டும் பேட்டிங் செய்யவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.  

மேலும் தனிப்பட்ட காரணங்களுக்காக வெளியேறிய அஸ்வின் மீண்டும் அணிக்கு திரும்புவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.  இருப்பினும், அவர் எப்போது மீண்டும் வருவார் என்று உறுதிப்படுத்தப்பட்ட தகவல் எதுவும் இல்லை. அஸ்வினின் தாயார் உடல்நிலை சரி இல்லாமல் இருப்பதால் போட்டியில் இருந்து விலகி உள்ளார். ஒருவேளை அஸ்வின் மீதமுள்ள போட்டிகளில் பங்கேற்கவில்லை என்றால், இந்திய அணிக்கு பெரிய இழப்பு ஏற்படும்.  அஸ்வின் விலகிய நிலையில், 3வது டெஸ்ட் போட்டியில் இந்தியா 4 பவுலர்களை வைத்து மட்டுமே விளையாடியது. இதனை தனக்கு சாதகமாக மாற்றி கொண்ட முகமது சிராஜ் 4 விக்கெட்களை வீழ்த்தினார்.  குறிப்பாக மதிய உணவுக்கு பிறகு ஒரு சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்தினார்.

அதே போல, குல்தீப் யாதவ் தனது சிறப்பான பந்துவீச்சால் இரண்டு முக்கியமான விக்கெட்களை வீழ்த்தினார். மேலும், ரவீந்திர ஜடேஜா இரண்டு விக்கெட்டுகளையும், ஜஸ்பிரித் பும்ரா ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர். இங்கிலாந்து வெறும் 95 ரன்களுக்கு 8 விக்கெட்டுகளை இழந்தது. தற்போது கில் 6 பவுண்டரிகள் மற்றும் 2 சிக்ஸர்களுடன் ஆட்டமிழக்காமல் 65 ரன்கள் எடுத்து உள்ளார்.  இந்தியா 196 ரன்கள் அடித்து 2 விக்கெட்களை இழந்துள்ளது.  இங்கிலாந்து அணிக்கு மிகப்பெரிய இழக்கை செட் செய்யும் நிலையில், இந்தியா இந்த டெஸ்டில் வெற்றி பெற முடியும்.

மேலும் படிக்க | துருவ் ஜூரல்: கார்கில் வீரரின் மகன், அம்மா நகைகளை அடகு வைத்து கிரிக்கெட் கிட் வாங்கிய இளைஞர்..!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News