CSK vs RCB : சென்னையை துவம்சம் செய்த பெங்களூரு! “ஈ சாலா கப் நம்தே” ரசிகர்களின் மீம் கலாட்டா..

CSK vs RCB Tamil Viral Memes : ஐபிஎல் 2024 தொடரின் நேற்றைய போட்டியில் சென்னை சூப்பர் கிங்க்ஸ் அணி, ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியை எதிர்கொண்டது. பரபரப்பான இந்த ஆட்டத்தில், பெங்களூரு அணி 27 ரன்கள் வித்தியாசத்தில் சென்னை அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது. 

CSK vs RCB Tamil Viral Memes : ஐபிஎல் 2024 தொடரின் பரபரப்பான ப்ளே ஆஃப்ஸ் தகுதி சுற்றுக்கான் ஆட்டம், நேற்று நடைப்பெற்றது. சென்னை-பெங்களூரு இடையே நடைப்பெற்ற இந்த போட்டி, பெங்களூருவில் உள்ள சின்னசுவாமி மைதானத்தில் நடைப்பெற்றது. இதில், எப்போதும் டாஸ் வெல்லாத சென்னை அணி, நேற்று டாஸ் வென்று பந்து வீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து  களமிறங்கிய பெங்களூரு அணி ஆரம்பம் முதலே சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. முதலாவது இன்னிங்க்ஸ் முடிவில் 218 ரன்களை குவித்து சென்னை அணிக்கு இமாலய இலக்கை நிர்ணயித்தது ஆர்சிபி. அடுத்து களமிறங்கிய சிஎஸ்கே, தொடக்கத்திலேயே விக்கெட்டுகளை இழக்க, ஆர்சிபி அணிக்கு சாதகமான சூழ்நிலை அமைந்தது. அடுத்தடுத்து கேட்ச்களை மிஸ் செய்தாலும், அடுத்தடுத்த ஓவரில் சென்னை அணி வீரர்களின் விக்கெட்டுகளை எடுத்து, போட்டியின் முடிவில் 27 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது, பெங்களூரு அணி. இந்த தோல்வியை தாள முடியாமல் சில சென்னை அணி வீரர்கள் இணையத்தில் மீம்ஸ்களை பறக்க விட்டு வருகின்றனர்.

1 /7

Mahirat Fans Be Like : விராட் கோலியே மொதல்ல தோனி ரசிகர்தான் டா..அப்பறம்தான் இந்த கிரிக்கெட்டர் எல்லாம்

2 /7

சிஎஸ்கே ரசிகர்கள்: ஐயோ போச்சே..எல்லாம் போச்சே...

3 /7

தோற்றாலும் பங்காளிதான்..ஜெயித்தாலும் பங்காளிதான்..

4 /7

அதான் கிரவுண்ட தவர எல்லா இடத்துலையும் மழை பெய்ததே..

5 /7

ஈ சாலா கப் நம்தேன்னு எழுதி வெச்சுக்க்கோங்க பாஸ்!

6 /7

கிரிக்கெட்ட பார்க்காம லைஃப பாருங்க ப்ரோ!

7 /7

ஆர்சிபி ஜெயிச்சது கூட வலிக்கல..அவங்க ஃபேன்ஸ் பன்றதுதான் ரொம்ப வலிக்கிது..