இந்த ஆண்டு மலையாளத்தில் வெளியான சிறந்த 8 படங்கள்!

Best Malayalam Movies: தமிழகத்தில் தமிழ் சினிமாவை தாண்டி மலையாள சினிமாவை விரும்பி பார்க்கும் ரசிகர்கள் பலர் உள்ளனர்.  இந்த ஆண்டு வெளியான சிறந்த படங்களை பற்றி பார்ப்போம்.  

Written by - RK Spark | Last Updated : Dec 2, 2023, 07:35 AM IST
  • கம்மி பட்ஜெட்டில் நிறைய படங்கள் ஹிட் அடித்தது.
  • 2018 படம் 200 கோடி வசூல் செய்தது.
  • அதிக வசூல் செய்த மலையாள படமும் இது ஆகும்.
இந்த ஆண்டு மலையாளத்தில் வெளியான சிறந்த 8 படங்கள்! title=

டொவினோ தாமஸ் நடித்த 2018 படம் முதல் மம்முட்டி நடித்த கண்ணூர் ஸ்குவாட் வரை 2023ம் ஆண்டில் மலையாளத்தில் பல நல்ல படங்கள் வெளியாகி உள்ளன.  அவற்றில் சில படங்கள் வசூலில் பெரியதாக இல்லை என்றாலும், ரசிகர்கள் மனதில் இடம் பிடித்துள்ளன.  இந்த ஆண்டு வெளியான சிறந்த 8 மலையாள படங்களை பற்றி பாப்போம்.

2023ன் சிறந்த மலையாளத் திரைப்படங்கள்

2018

2018ம் ஆண்டு கேரளாவில் ஏற்பட்ட கடுமையான வெள்ளத்தை அடிப்படையாக கொண்டு இந்த படம் எடுக்கப்பட்டு இருந்தது.  டோவினோ தாமஸ், குஞ்சாக்கோ போபன், ஆசிஃப் அலி, வினீத் ஸ்ரீனிவாசன் உள்ளிட்ட பலர் இந்த படத்தில் நடித்துள்ளனர். 2018 படம் இந்த ஆண்டு வெளியான சிறந்த மலையாளத் திரைப்படங்களில் ஒன்றாகும்.  மேலும் 2018 பாக்ஸ் ஆபிஸில் வணிகரீதியாக வெற்றி பெற்றது. உலகளவில் 177 கோடி ரூபாய் வசூலித்தது, இதன் மூலம் அதிக வசூல் செய்த மலையாளப் படமாக மாறியது. அதே நேரத்தில் ரூ. 200 கோடி வணிகத்தைத் தாண்டிய முதல் மலையாளப் படம் என்ற பெருமையைப் பெற்றது.

மேலும் படிக்க | 2023ஆம் ஆண்டு கோலிவுட்டிற்குள் எண்ட்ரி கொடுத்த புது நடிகைகள்!

இரட்டா (Iratta)

எமோஷனல் சஸ்பென்ஸ் நிறைந்த இந்த திரில்லல் படத்தில் ஜோஜூ ஜார்ஜ், அஞ்சலி, ஆர்யா சலீம் மற்றும் ஸ்ரீகாந்த் முரளி ஆகியோர் நடித்து உள்ளனர்.  ஜோஜூ ஜார்ஜ் இரட்டை வேடங்களில் நடித்து அசத்தி இருந்தார். போலீஸ் ஸ்டேஷனில் ஒருவர் இறந்துவிட அதற்கான காரணத்தை சுற்றி படம் நகர்கிறது. அடுத்தடுத்து நடக்கும் போலீஸ் விசாரணையில் பல திடுக்கிடும் உண்மைகள் வெளியாகிறது.

ரோமன்சம் (Romancham)

நகைச்சுவை கலந்த திகில் படமாக வெளியான ரோமன்சம் அனைவரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியது.  இயக்குனர் ஜித்து மாதவன் தான் அனுபவித்த நிஜ வாழ்க்கை சம்பவத்தை அடிப்படையாக வைத்து இந்த படத்தை இயக்கி இருந்தார்.  சௌபின் ஷாஹிர், அர்ஜுன் அசோகன், சஜின் கோபு, சிஜு சன்னி, அபின் பினோ மற்றும் அனந்தராமன் அஜய் ஆகியோர் இந்த படத்தில் நடித்து இருந்தனர்.  

புருஷ பிரேதம் (Purusha Pretham)

புருஷா ப்ரேதம் என்பது கிரிஷாந்த் இயக்கத்தில் 2023 ஆம் ஆண்டு வெளியான மலையாள மொழி போலீஸ் கதையம்சம் கொண்ட திரைப்படமாகும்.  மர்மமான முறையில் மிதக்கும் சடலம் மற்றும் காவல் துறையினர் ஒருவர் மீது ஒருவர் வழக்கைத் திணிக்க முயல்வதைச் சுற்றி ஒரு கதை சுழல்கிறது. இதற்கிடையில், இரண்டு குடும்பங்கள் தங்கள் குடும்பங்களில் இருந்து காணாமல் போனவர்களை தேடி வருகின்றனர். தர்ஷனா ராஜேந்திரனின் அட்டகாசமான நடிப்பு படத்தை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்கிறது.  2023 இன் சிறந்த மலையாளத் திரைப்படங்களில் இதுவும் ஒன்றாகவும்.

கண்ணூர் ஸ்குவாட் (Kannur Squad)

மம்முட்டி மற்றும் ரோனி டேவிட் ராஜ் உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்த க்ரைம் த்ரில்லர் சமீபத்தில் வெளியாகி மிகப்பெரிய ஹிட் அடித்தது.  ஒரு கும்பலைப் பிடிக்க வட இந்தியாவுக்குச் செல்லும் நான்கு பேர் கொண்ட போலீஸ் புலனாய்வுக் குழுவைச் சுற்றி இந்த கதை நடக்கிறது.  ஆரம்பம் முதல் இறுதி வரை பரபரப்பிற்கு பஞ்சம் இல்லாமல் திரைக்கதை உள்ளது.

பசுவும் அத்புத விளக்கும் (Pachuvum Athbutha Vilakkum)

2023 ஆம் ஆண்டின் சிறந்த மலையாளத் படங்களின் பட்டியலில் ஃபஹத் பாசில் நடித்த பசுவும் அத்புத விளக்கும் படம் உள்ளது.  ஒரு நடுத்தர இளைஞனைச் சுற்றி நடக்கும் இந்த கதை மனதைத் தொடும் பல விஷயங்களை கொண்டுள்ளது.  பலருக்கும் இந்த படம் பிடித்து இருந்தது.

தங்கம் (Thankam)

பிஜு மேனன், வினீத் ஸ்ரீனிவாசன் மற்றும் அபர்ணா பாலமுரளி நடித்துள்ள இந்த படம், தங்கம் விநியோகம் செய்வதற்காக மும்பை செல்லும் ஒருவரின் இறப்பிற்கு யார் காரணம் என்பதை சுற்றி நடக்கிறது.  சாதாரணமான ஒரு கதை கடைசி நிமிடம் வரை நம்மை கட்டிபோடுகிறது.  மலையாளத்தில் வெளியான சிறந்த படங்களில் இதுவும் ஒன்று.

RDX

ஷேன் நிகம், ஆண்டனி வர்கீஸ் மற்றும் நீரஜ் மாதவ் நடித்த RDX Robert Dony Xavier படம் ஆக்சன் படத்தை விரும்புபவர்களுக்கு சிறந்த படமாக அமைந்தது.  தற்காப்புக் கலையை சொல்லி தரும் மூன்று நண்பர்களைச் சுற்றி படம் நடக்கிறது.  2023ன் சிறந்த மலையாளத் திரைப்படங்களில் ஒன்றாகவும் இருக்கும்.

மேலும் படிக்க | ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் ஓடிடியில் வெளியீடு..! எந்த தளத்தில் எப்படி பார்ப்பது?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News