தீ பறக்கும் காதல் கதை... காதலியின் வருங்கால கணவர் வீட்டிற்கு தீ வைத்த காதலர்!

இன்ஸ்டாகிராம் மூலம் தனது முன்னாள் காதலி திருமணம் செய்து கொள்ளப் போவதை அறிந்த காதலர் அறிந்த நிலையில், அந்த இளைஞன் செய்த காரியம் உங்களை அதிர்ச்சியில் ஆழ்த்தும்.

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : Dec 12, 2022, 04:50 PM IST
  • தல் தோல்வியினால், விரக்தி அடைந்து தாடி வளர்த்து, மது பழக்கத்தில் சிக்கி சீரழிந்து போகும் வாலிபர்களை பலர் பார்த்திருப்பார்கள்.
  • இன்ஸ்டாகிராம் மூலம் தனது முன்னாள் காதலி திருமணம் செய்து கொள்ளப் போவதை அறிந்த காதலர்.
தீ பறக்கும் காதல் கதை... காதலியின் வருங்கால கணவர் வீட்டிற்கு தீ வைத்த காதலர்! title=

நீங்கள் பல விதமான  காதல் கதைகளைப் பற்றி கேள்விப்பட்டிருப்பீர்கள். காதல் தோல்வியினால், விரக்தி அடைந்து தாடி வளர்த்து, மது பழக்கத்தில் சிக்கி சீரழிந்து போகும் வாலிபர்களை பலர் பார்த்திருப்பார்கள். ஆனால் இன்று ஒரு காதலன், தனது காதலியின் வருங்கால கணவரின்ன் வீட்டிற்கு தீ வைத்த உண்மை சம்பவம் உங்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தும்..ஆம் , இவர்கள் எங்கிருந்தாலும் வாழ்க என வாழ்த்தும் காதலர் அல்ல; எனக்கு கிடைத்தாவள் வாழ்க்கையில் நிம்மதியாக இருக்கக் கூடாது என கொடூர எண்ணம் கொண்ட காதலர். ஆம், இந்த சம்பவம் சிங்கப்பூரில்நடந்துள்ளது. 

சிங்கப்பூரில் வசித்து வரும் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த 30 வயது நபர் ஒருவர் தனது முன்னாள் காதலியின் வருங்கால கணவரின் வீட்டிற்கு தீ வைத்துள்ளார். இந்தக் குற்றத்திற்காக அந்தக் காதலரும் ஆறுமாதம் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். 'தி ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்' வெளியிட்டுள்ள செய்தியில், சுரேந்திரன் சுகுமாரன் இந்த ஆண்டு அக்டோபர் மாதம் இந்த சம்பவத்தில் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டார்.

மேலும்  படிக்க | Invisibility Cloak: ஜீபூம்பா! கேமராக்களுக்கு ஆப்பு வைக்கும் மேஜிக் ‘மாயஜால கோட்’
 
காதலிக்கு  கல்யாணம் என தெரிந்ததும் வந்த ஆத்திரம்

சுகுமாறன் தனது முன்னாள் காதலிக்கு திருமணம் நடக்க உள்ளதை அறிந்தவுடன் அதிர்ச்சி அடைந்தார். அதன் பிறகு ஆத்திரமடைந்த அவர், ஆத்திரத்தில் அடுக்குமாடி குடியிருப்புக்கு வெளியே தீ வைத்தார். அவரது முன்னாள் காதலியின் வருங்கால கணவர் இந்த குடியிருப்பில் வசித்து வந்தார். இன்ஸ்டாகிராமில் ஒரு பதிவின் மூலம் திருமணம் குறித்து சுகுமாரனுக்குத் தெரிய வந்தது. மார்ச் 11, 2022 அன்று, அவரது முன்னாள் காதலி, முகமது அஜ்லி முகமது சலே என்ற இளைஞருடன் மறுநாள் திருமணம் செய்யப் போவதாக அவருக்குத் தெரியவந்தது.

கருப்பு நிற உடையில் தீ வைக்க சென்றார்

சுகுமாறன் அந்த குடியிருப்பின் முன் கேட்டை பூட்டி தீ வைத்தார். தீ வைத்த பின், சுகுமாறன் லிப்ட் வழியாக தரை தளத்தை அடைந்தார். தப்பிக்க, அவர் கருப்பு நிறை ஹூடி அணிந்து முகத்தை மூடியிருந்தார். அதனால் கேமராவில் அவரது முகம்  தெரியவில்லை. அரசு வழக்கறிஞர் பாரத், இது குறித்து கூறுகையில், சிசிடிவி கேமிராவில் சிக்காமல் தவிர்க்க சுகுமாரன் இந்த வழியை பின்பற்றியதாக கூறியிருந்தார்.

காலையில் விபரம் அறிந்த வருங்கால கணவர்

காலை 8:22 மணிக்கு அஜலி தனது விட்டில் உள்ள கதவை திறந்து பார்த்தபோது, ​​கேட் மூடப்பட்டு பல காலணிகளும் எரிந்து கிடந்தது. அதன்பிறகு போலீசாரை அழைத்தார். இதையடுத்து, அந்த குற்றம் சாட்டப்பட்ட  அந்த நபருக்கு 6 மாத சிறைத்தண்டனை விதித்த நீதிபதி யூஜின் தியோ, அடுக்குமாடி குடியிருப்பில் வசிக்கும் மக்களுக்கு இதுபோன்ற குற்றங்கள் மிகவும் பதற்றத்தை ஏற்படுத்தும் எனக் கூறினார்.

மேலும் படிக்க | தேவையற்ற கர்ப்பத்தை தவிர்க்க பள்ளிகளில் ஆணுறைகளை இலவசமாக வழங்கும் திட்டம்!

மேலும் படிக்க | நாங்களும் வாசிப்போம்ல, டிரம்ஸ் வாசிக்கும் யானை: வீடியோ வைரல் 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News