கூட்டணி எண்ணிக்கை பற்றி எங்களுக்கு கவலை - காங்கிரஸ் முன்னாள் அமைச்சர்!

பாஜகவை தமிழகத்தில் வீழ்த்துவோம் என்று திருப்பத்தூர் பகுதியில் நடைபெற்ற முப்பெரும் விழாவில் செய்தியாளர்களை சந்தித்த காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள் மத்திய அமைச்சர் தங்கபாலு பேட்டி.  

Written by - RK Spark | Last Updated : Feb 14, 2024, 07:04 AM IST
  • பாஜகவை தமிழகத்தில் வீழ்த்துவோம்.
  • எண்ணிக்கை பற்றி கவலை இல்லை.
  • முன்னாள் மத்திய அமைச்சர் தங்கபாலு பேட்டி.
கூட்டணி எண்ணிக்கை பற்றி எங்களுக்கு கவலை - காங்கிரஸ் முன்னாள் அமைச்சர்! title=

கூட்டணி எண்ணிக்கை பற்றி எங்களுக்கு கவலை இல்லை, 40 தொகுதிகளில் யார் நின்றாலும் அவர்களுக்கு வேலை செய்து வெற்றி பெற செய்வோம் என முன்னாள் மத்திய அமைச்சர் தங்கபாலு பேட்டி அளித்துள்ளார். திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர், வாணியம்பாடி, ஜோலார்பேட்டை திருப்பத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் நடைபெற்ற இந்திய ஒற்றுமை நீதிப்பயணம் இதனைத் தொடர்ந்து திருப்பத்தூர் ஆர் எஸ் ரோடு பகுதியில் உள்ள காங்கிரஸ் மைதானத்தில் அமைந்துள்ள முன்னாள் பாரதப் பிரதமர்கள் நேரு, இந்திரா காந்தி, ராஜீவ் காந்தி ஆகியோரின் சிலைகள் திறப்பு விழா மற்றும் 65 அடி உயரம் கொடி ஏற்றுதல் ஆகிய முப்பெரும் விழாவில் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள் மத்திய அமைச்சர் தங்கபாலு மற்றும் அகில இந்திய காங்கிரஸ் தொழில் வல்லுநர்கள் பிரிவு தலைவர் பொருளாதார வல்லுநர் பிரவீன் சக்கரவர்த்தி ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார்கள்.

மேலும் படிக்க | தமிழ்நாட்டில் சாலை விபத்துகளை குறைக்க அரசு புதிய நடவடிக்கை!

அப்போது செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் மத்திய அமைச்சர் தங்கபாலு, இந்தியா கூட்டணியில் யார் தலைவர் என்பதை வருகின்ற நாடாளுமன்ற தேர்தல் வெற்றிக்கு பின்பு எங்கள் தலைமை அறிவிக்கும். அதே போன்று தமிழகத்தில் காங்கிரஸ் திமுகவின் முதல் கட்ட கூட்டணி பேச்சுவார்த்தை நடைபெற்று இருக்கிறது. தேர்தல் கூட்டுனியை பொருத்தவரை எண்ணிக்கை எங்களுக்கு முக்கியமில்லை 40 தொகுதிகளில் யார் நின்றாலும் அவர்களுக்காக வேலை செய்து வெற்றி பெற செய்வோம். தமிழகத்தில் பாஜகவை வீழ்த்துவோம். 

தமிழகத்தில் இந்தியா கூட்டணி மிகப்பெரிய ஒரு விடியலை கொடுக்கும் கண்டிப்பாக வெற்றி பெறுவோம் என்று கூறியவர் தொடர்ந்து பாஜக அரசு பற்றி பேசும்பொழுது விவசாயிகளை கொன்று குவிக்கும் அரசாக பாஜக இருக்கிறது என்பது உள்ளிட்ட பல்வேறு கருத்துகளை கூறினார். இந்த முப்பெரும் விழாவில் காங்கிரஸ் கமிட்டியின் நகர தலைவர் பரத் மாநில ஒருங்கிணைப்பாளர் ஜாவித் எஸ்சி எஸ்டி பிரிவு மாவட்ட பொறுப்பாளர் முனிசாமி உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் தொண்டர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

இந்நிலையில், இந்தியா கூட்டணி குறித்து சமீபத்தில் பேசி இருந்த ஹச் ராஜா, நாடு முழுவதும் எதிர்க்கட்சிகள் ஆயிரம் பேசினாலும் அயோத்திய ராம ஜென்ம பூமியில் பாஜகவில் ஏற்கனவே கூறப்பட்டிருக்கின்ற அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவதற்கு பாஜக உதவிகள் செய்வோம் என்று கூறியதை பிரதமர் மோடி தலைமையிலான அரசு முழு மன திருப்தியோடு நிறைவேற்றி உள்ளது என தெரிவித்தார். இதன் காரணமாக மக்களிடையே நல்ல எண்ணம் உருவாகி இருப்பதாகவும் தெரிவித்தார். இந்தியா கூட்டணியில் முக்கிய நிர்வாகிகள் வெளியேறி வருவது குறித்து கருத்து கேட்டதற்கு, பதில் அளித்த எச்.ராஜா அப்படி ஒரு கூட்டணி இல்லை என்பதில் ஒரு பெரிய புரிதல் நமக்கு வராமல் இருந்தது. 

I.N.D.I.A என்ற புள்ளி வைத்த கூட்டணியாக இருந்ததை தற்பொழுது முற்றுப்புள்ளி வைத்து விட்டார்கள் எனவும் அதன் கண்வினியரே அதில் இல்லை என்ற அளவிற்கு இருக்கிறது என்றால் அதற்கு குறிக்கோள் இல்லாமல் அமைகின்ற கூட்டணிகள் நிலைக்க முடியாது என்பதுதான் காரணம் எனவும் சாடினார். மோடியை நீக்க வேண்டும் என்பதே அவர்கள் குறிக்கோளாக வைத்திருந்ததாகவும் அதை தவிர்த்து வேறு ஏதேனும் குறிக்கோள்கள் இருக்கிறதா அஜண்டா ஏதாவது இருக்கிறதா என்று கேட்டால் அதுவும் இல்லை அதனால் தற்பொழுது அந்த கூட்டணியே திசை தெரியாமல் போய் உள்ளதாக கூறினார்.

மேலும் படிக்க | அதிர்ச்சி..! ‘கடைசி விவசாயி’ பட நடிகை கொலை! நடந்தது என்ன?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News