ஜெயக்குமார் ஒரு விளையாட்டு பிள்ளை - காட்டமாக விமர்சித்த வைத்தியலிங்கம்

தஞ்சையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த ஓபிஎஸ் ஆதரவாளரான வைத்தியலிங்கம், ஜெயக்குமார் ஒரு விளையாட்டு பிள்ளை என விமர்சித்தார்.   

Written by - S.Karthikeyan | Last Updated : May 12, 2023, 12:10 PM IST
  • சசிகலாவை ஓபிஎஸ் சந்திப்பார்
  • ஜெயக்குமார் விளையாட்டு பிள்ளை
  • வைத்திலிங்கம் கடும் விமர்சனம்
ஜெயக்குமார் ஒரு விளையாட்டு பிள்ளை - காட்டமாக விமர்சித்த வைத்தியலிங்கம் title=

தஞ்சையில் ஓபிஎஸ் ஆதரவாளர் வைத்திலிங்கம் செய்தியாளர்களை சந்தித்தார், அப்போது பேசிய அவர், ஓபிஎஸ் டிடிவி தினகரன் சந்திப்பு நடைபெற்றது. அப்போது நான் செல்லாமல் இருந்தது  குறித்து எடப்பாடி பழனிச்சாமி ஏதோ கற்பனையில் பேசி வருகிறார். மாயமான் சந்திப்பதால் ஒன்றும் ஆகிவிட முடியாது என கூறியிருக்கிறார். அந்த மாயமான் இல்லையென்றால் அவர் முதலமைச்சர் ஆக இருக்க முடியாது. அண்ணா திமுகவை எடப்பாடி பழனிச்சாமி தனது சொத்தாக்க விரும்புகிறார். அது ஒருபோதும் நடைபெறாது. சண்டிக்குதிரை எதற்கும் உதவாது. 

மேலும் படிக்க | அதிமுகவில் பிடிஆர்? ஜெயக்குமாரின் தடாலடி பதில்

ஓபிஎஸ் டிடிவி சசிகலாவை தவிர்த்து அண்ணா திமுக ஆட்சிக்கு வர முடியாது. அன்னைக்கு ஓபிஎஸ் டிடிவி சந்திப்பை 95 சதவீத அண்ணா திமுக தொண்டர்கள் வரவேற்கிறார்கள். நாங்கள்தான் ஓபிஎஸ் டிடிவி சந்திக்க சொன்னோம். முதல் முறை சந்திக்கும் போது கூட்டமாக சென்று சந்திக்க வேண்டாம் என்பதற்காகத் தான் ஓபிஎஸ்ஐ தனியாக சென்று சந்திக்க சொன்னோம். அதிமுக வலுமை பெற வேண்டும் ஒற்றுமைப்பட வேண்டும் ஒன்றுபட்டால் தான் உண்டு வாழ்வு என்று நாங்கள் சிந்திக்கின்றோம். 

ஆனால் காலில் விழுந்து முதலமைச்சராகி சுய லாபத்தால் பதவி மோகத்தால் இந்த கட்சியை அழிக்க நினைக்கின்றார். அந்தக் கட்சியில் யாரும் வெளியே போகாதவாறு ஓநாய்கள் பாதுகாக்கின்றன ஓநாய்களை ஏமாற்றி விட்டு ஆட்டுக்குட்டிகள் வெளியே வரும். நிச்சயமாக சசிகலாவை சந்திப்பார். எடப்பாடி அணியில் இருப்பவர்கள் கட்சி ஒன்று சேர வேண்டும் என நினைக்கிறார்கள். இன்றும் அவர் எங்களிடம் பேசி வருகிறார்கள் நிச்சயம் இது நடைபெறும். கொங்கு மண்டலத்தில் வெகு விரைவில் திருச்சியை விட வெகு சிறப்பான மாநாடை நடத்துவோம். கூட்டணி குறித்து டெல்லிக்கு செல்லும் பொழுது எடப்பாடி பழனிச்சாமி ஜெயக்குமார் உதயகுமார் உள்ளிட்டோரை ஏன் அழைத்துச் செல்லவில்லை? என்று கேள்வி எழுப்பினார்.

மேலும் படிக்க | TN Cabinet: அமைச்சரவையில் அதிரடி மாற்றம் - நிதி அமைச்சர் பொறுப்பில் இருந்து பிடிஆர் விடுவிப்பு!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

 

Trending News