பேரறிஞர் அண்ணா சிலைக்கு MK ஸ்டாலின் மாலை அணிவித்து மரியாதை!

மறைந்த தலைவர் பேரறிஞர் அண்ணாவின் சிலைக்கு திமுக தலைவர் முக ஸ்டாலின் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்!

Last Updated : Sep 15, 2018, 12:07 PM IST
பேரறிஞர் அண்ணா சிலைக்கு MK ஸ்டாலின் மாலை அணிவித்து மரியாதை! title=

மறைந்த தலைவர் பேரறிஞர் அண்ணாவின் சிலைக்கு திமுக தலைவர் முக ஸ்டாலின் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்!

மறைந்த தலைவர் பேரறிஞர் அண்ணாவின் 110-வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது. இதையொட்டி சென்னை வள்ளுவர் கோட்டத்தில் உள்ள அவரது சிலைக்கு திமுக தலைவர் முக ஸ்டாலின், பொதுச்செயலாளர் அன்பழகன், மாநிலங்களவை உறுப்பினர் கனிமொழி ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

முன்னதாக., பேரறிஞர் அண்ணா பிறந்தநாள், பெரியார் பிறந்தநாள் மற்றும் திமுக உதயமான நாள் ஆகிய மூன்றையும் ஒன்றாக அனுசரிக்கும் விதமாக விழுப்புரத்தில் முப்பெரும் விழா கொண்டாடப்படும் என திமுக சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

விழுப்புரத்தில் உள்ள காமராஜ் நகராட்சி பள்ளி மைதானத்தில் இருக்கும் அண்ணா திடலில் சனிக்கிழமை மாலை 4 மணிக்கு இந்நிகழ்ச்சி நடைபெறவுள்ளது. திமுக தலைவர் ஸ்டாலின் தலைமையில் கட்சி உறுப்பினர்கள் கலந்துக்கொசண்டு சிறப்பிக்கவுள்ளனர். மேலும் இந்நிகழ்ச்சியில் கட்சி உறுப்பினர்களை ஊக்குவிக்கும் விதமாக விருதுகள் வழங்கப்படவுள்ளது.

Trending News