தமிழகத்தில் தக்காளி வைரஸ் பரவியதா? ராதாகிருஷ்ணன் விளக்கம்

தமிழகத்தில் தக்காளி வைரஸ் பரவியதாக கூறப்படுவது குறித்து மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் விளக்கம் அளித்துள்ளார்.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : May 13, 2022, 09:05 PM IST
  • ரூ. 340 கோடியில் திருப்பூர் மாவட்ட மருத்துவ கல்லூரி
  • முதுநிலை மருத்துவ படிப்பிற்கான தகுதித் தேர்வு தேதி விரைவில் அறிவிக்கப்படும்
தமிழகத்தில் தக்காளி வைரஸ் பரவியதா? ராதாகிருஷ்ணன் விளக்கம் title=

திருப்பூர் தாராபுரம் சாலை பெரிச்சிபாளையம் பகுதியில் நடைபெற்றுவரும் மருத்துவக்கல்லூரி மற்றும் மருத்துவமனை கட்டுமான பணிகளை மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் இன்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார் . 

பின்னர் திருப்பூர் மருத்துவக் கல்லூரியில் முதலாம் ஆண்டு பயிலும் மாணவ மாணவியர்களுக்கு இலவச டேப்லட்களை வழங்கினார். 

பின்னர் அவர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், இந்தியாவிலேயே தமிழகத்தில் 11 மருத்துவக்கல்லூரி கொண்டு வந்ததன் மூலம் ஏராளமான மாணவ மாணவிகள் பயன் அடைந்திருப்பதாகவும் ,  தற்போது தமிழகத்தில் கொரோனா தொற்று கட்டுப்பாட்டிற்குள் இருந்தாலும் பொதுமக்கள் மீண்டும் முழுக் கட்டுப்பாட்டுடன் இருக்க வேண்டும் எனவும் கூறினார்.

மேலும், கட்டாயம் முக கவசம் அணிய வேண்டும் தடுப்பூசி செலுத்தாதவர்கள் செலுத்திக் கொள்ள வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டார் . 

கேரள மாநிலத்தில் தக்காளி வைரஸ் நோயின் தாக்கம் தமிழகத்தில் இருப்பதாக கூறப்படுவதில் உண்மை இல்லை எனவும், கேரள மாநிலத்திலும் தற்போது இல்லை என கேரள மாநில சுகாதாரத்துறை தெரிவித்திருப்பதாகவும் தெரிவித்தார்.

மேலும் படிக்க | தொழில்நுட்பம் சமூகத்துக்கு நல்லது செய்ய வேண்டும்: மாநிலங்களவை எம்பி சுபாஷ் சந்திரா

மேலும், இதனால் எந்த பாதிப்பும் இல்லை என அவர்கள் உறுதிப்படுத்தி இருப்பதாக தெரிவித்தார். பின்னர், இது குறித்து தமிழகத்தில் அச்சப்பட வேண்டியதில்லை எனவும் தெரிவித்தார். 

கேரள மாநிலத்தில் சவர்மா உணவால் ஏற்பட்ட பிரச்சனையின் தீவிரத்தை உணர்ந்து தமிழகம் முழுவதும் கடைகளில் அதிரடி ஆய்வு மேற்கொண்டு இருப்பதாகவும் தமிழகத்தில் சவர்மாவிற்கு தடை என்ற செய்தியில் உண்மை இல்லை எனவும், அதுபோன்ற தடை விதிக்கவில்லை எனவும் தெரிவித்தார்.

இதையடுத்து, ஆனால் பதப்படுத்தப்பட்டு நன்கு சமைத்து இரண்டு மணி நேரத்திற்குள் விற்பனை செய்வதை உறுதி செய்ய வேண்டும் என ஷவர்மா கடை உரிமையாளர்களிடம் அறிவுறுத்தப்படுவதாக தெரிவித்தார்.

ஆறு ஆண்டுகளுக்கு பின்பு அரசாணை வெளியிடப்பட்டுள்ள முதுநிலை மருத்துவ படிப்பிற்கான தகுதித் தேர்வு தேதி விரைவில் அறிவிக்கப்படும் என கூறினார்.

ரூ. 340 கோடியில் திருப்பூர் மாவட்ட மருத்துவ கல்லூரி , மருத்துவமனை கட்டுமான பணிகள் நடைபெற்று வர கூடிய சூழ்நிலையில் ஆகஸ்ட் மாதத்திற்குள் பணிகள் முடிக்க பொதுப்பணித் துறையிடம் கேட்டுக் கொண்டுள்ளதாகவும் தெரிவித்தார். 

இந்நிகழ்ச்சிக்குப் பிறகு முதலாமாண்டு மருத்துவ மாணவ மாணவியர்களிடம் பேசிய அவர் சேவை மனப்பான்மையுடன் மாணவர்கள் கல்வி பயின்று பணியாற்ற வேண்டும் எனவும் சவாலான சூழ்நிலையில் கல்லூரியில் சேர்ந்துள்ள நீங்கள் ஆராய்ச்சியின் மூலம் புதிய மருந்துகளை கண்டுபிடிக்க வேண்டும் எனவும் அவர் கேட்டுக் கொண்டார்.

மேலும் படிக்க | மாநிலங்களவை எம்.பி தேர்தல் - ஜூன் 10ம் தேதி அறிவிப்பு

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News