Rule 110: கல்வி தொடர்பாக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வெளியிட்ட அறிவிப்புகள்

தமிழ்நாடு சட்டப்பேரவையில், விதி எண் 110ன் கீழ் முதலமைச்சர்  மு.க. ஸ்டாலின் இன்று பல முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டார்...கல்வித்துறைக்கான முதலமைச்சரின் அறிவிப்புகள்...

Edited by - Malathi Tamilselvan | Last Updated : Jan 6, 2022, 11:34 AM IST
  • நீட் தேர்வால் தமிழக மாணவர்களுக்கு பாதிப்பு
  • 12ஆம் வகுப்பு மதிப்பெண் அடிப்படையிலேயே கல்லூரி சேர்க்கை நடக்க வேண்டும் என்பதில் அரசு உறுதி
  • நாளை மறுநாள் நீட் நுழைவுத்தேர்வு தொடர்பாக அனைத்து கட்சி கூட்டம் நடைபெறும்
Rule 110: கல்வி தொடர்பாக முதலமைச்சர்  மு.க. ஸ்டாலின் வெளியிட்ட அறிவிப்புகள் title=

சென்னை: தமிழ்நாடு சட்டப்பேரவையில், விதி எண் 110ன் கீழ் முதலமைச்சர்  மு.க. ஸ்டாலின் இன்று பல முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டார். அதில், கல்வி மற்றும் மாணவர்கள் தொடர்பாக முதலமைச்சர் வெளியிட்ட அறிவிப்புகள் இவை: 

எல்லாருக்கும் எல்லாம் என்ற குறிக்கோளுடன் இயங்குகிறது அரசு என்று தெரிவித்த முதலமைச்சர், 12ஆம் வகுப்பு மதிப்பெண் அடிப்படையிலேயே கல்லூரி சேர்க்கை நடக்க வேண்டும் என்பதில் அரசு உறுதியுடன் இருக்கிறது என்று தெளிவுபடுத்தினார்.

நீட் தேர்வை முன்னிறுத்தியிருப்பதால், நமது மாணவர்கள் பாதிக்கப்பட்டிருக்கின்றனர். மாநில அரசின் கல்லூரி சேர்க்கையிலும் ஒன்றிய அரசு தலையிடுகிறது என்பதை குறிப்பிட்ட முதல்வர், 12 ஆண்டு காலம் படிக்கும் பள்ளிக் கல்வியையே (Education System) இது கேள்விக் குறி ஆக்குகிறது என்று கவலை தெரிவித்தார். ஆனால், மாணவர்கள் எதிர்காலம் பாழாவதை வேடிக்கை பார்க்க முடியாது என்றும் உறுதிபட தெரிவித்தார்.

ALSO READ | ஆவின் முதல் விருது நகர் சிறைச்சாலை வரை... ராஜேந்திரபாலாஜி

திமுகவின் நாடாளுமன்ற குழு தலைவர் டி.ஆர்.பாலு தலைமையில் அனைத்து எம்.பி-க்களும் நீட் நுழைவுத் தேர்வு குறித்து பேச உள்துறை அமைச்சரிடம் அனுமதி கேட்டு வருகிறார்கள். ஆனால் நேரம் ஒதுக்காமல் தள்ளிப்போடுவது அவரது மாண்புக்கு அழகல்ல என்று முதல்வர் தெரிவித்தார்.

திராவிட வரலாற்றை திரும்பி பார்க்கையில் நமது வெற்றிகள் அனைத்து சமூக, சட்ட போராட்டங்களுக்கு பின்னரே கிடைத்திருக்கிறது. நீட் போராட்டம் நமது முழு மூச்சாக எண்ணி போராடுவோம். இதிலிருந்து எள் அளவும் பின்வாங்க மாட்டோம் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உறுதிபட தெரிவித்தார்.

நீட் நுழைவுத்தேர்வு (Neet Exam) தொடர்பாக அனைத்து கட்சி கூட்டம் நாளை மறுநாள் நடத்தப்படும் என்று தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்தார்.

இதனிடையே, ஞாயிற்றுக்கிழமை போட்டித் தேர்வுகளுக்கு  (UPSC, TNPSC) செல்பவர்களுக்கு எந்தவித அனுமதி கொடுக்கப்படுவதாக அரசு அறிவித்துள்ளது.

ALSO READ | தமிழக ஆளுநர் பதவி விலக வேண்டும்: திமுக எம்.பி. டி ஆர் பாலு பரபரப்பு பேட்டி

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News