மும்பை இந்தியன்ஸ் அணியில் சொதப்பும் 4 வீரர்கள் - அடுத்தப்போட்டியில் வரப்போகும் மாற்றம்!

Worst Batsmen In Mumbai Indians IPL 2024: மும்பை இந்தியன்ஸ் அணியில் டாப் ஆர்டரில் விளையாடும் நான்கு பேட்ஸ்மேன்கள் தொடர்ச்சியாக சொதப்புகின்றனர். ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான போட்டியிலும் சொற்ப ரன்களிலேயே அவுட்டாகி வெளியேறினர்.

Written by - S.Karthikeyan | Last Updated : Apr 22, 2024, 10:32 PM IST
  • மும்பை இந்தியன்ஸ் பேட்ஸ்மேன்கள் மோசம்
  • தொடர்ச்சியாக சொதப்பும் டாப் ஆர்டர் பிளேயர்கள்
  • ஹர்திக் பாண்டியா மோசமான பார்மில் உள்ளார்
மும்பை இந்தியன்ஸ் அணியில் சொதப்பும் 4 வீரர்கள் - அடுத்தப்போட்டியில் வரப்போகும் மாற்றம்! title=

மும்பை இந்தியன்ஸ் அணியில் டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் மீண்டும் மீண்டும் சொதப்புவது அந்த அணிக்கு பெரும் பின்னடைவாக மாறியுள்ளது. ஐபிஎல் 2024 தொடரில் டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் ஒரே நேரத்தில் இதுவரை அந்த அணியில் சோபிக்கவில்லை. இஷான் கிஷன் விளையாடினால், ரோகித் அவுட்டாகிறார். ரோகித் சர்மா அதிரடியாக ஆடும்போது இஷான் கிஷன், சூர்யகுமார், ஹர்திக் பாண்டியா, டிம் டேவிட் ஆகியோர் ஆடமால் அவுட்டாகிவிடுகின்றனர். சூர்யகுமார் சூப்பராக ஆடும் போட்டியில் மற்ற பேட்ஸ்மேன்கள் சோபிப்பதில்லை. இதனால், பேட்டிங்கில் பெரும் சொதப்பலை எதிர்கொண்டிருக்கிறது மும்பை இந்தியன்ஸ் அணி.

மேலும் படிக்க | சின்ன பொல்லார்டை இன்னும் வெளியே உட்கார வைத்திருக்கும் மும்பை இந்தியன்ஸ்!

குறிப்பாக, ஹர்திக் பாண்டியா, டிம் டேவிட் இதுவரை ஒரு போட்டியில் கூட சிறப்பாக ஆடவில்லை. அவர்கள் இருவரின் மோசமான பார்ம் மும்பை அணிக்கு பெரும் பாதமாக உள்ளது. அதேபோல் இஷான் கிஷனும் இதுவரை எதிர்பார்த்தளவுக்கு எல்லாம் விளையாடவில்லை. ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான போட்டியிலும் மும்பை அணியின் இந்த மோசமான பேட்டிங் சோகம் தொடர்ந்தது. ஓப்பனிங் இறங்கிய ரோகித் சர்மா 6 ரன்களுக்கும், இஷான் கிஷன் மூன்று பந்துகள் ஆடி ரன் ஏதும் எடுக்காமலும், அதாவது டக் அவுட்டாகி வெளியேறினர். அடுத்து வந்த சூர்யகுமார் யாதவ் 10 ரன்களுக்கு அவுட்டாக மும்பை இந்தியன்ஸ் அணியின் பேட்டிங் சிக்கலுக்குள்ளானது.

மிடில் ஆர்டரில் இறங்கிய திலக் வர்மா மட்டும் நிதனாமாக விளையாடி பின்னர் அதிரடியாக ஆடினார். இதனால் அரைசதம் அடித்த அவர் 45 பந்துகளில் 65 ரன்கள் எடுத்து அவுட்டானார். இதில் 5 சிக்சர்களும் மூன்று பவுண்டரிகளும் அடங்கும். நபி 23 ரன்கள் எடுக்க, நேகல் வதேரா அதிரடியாக ஆடி 24 பந்துகளில் 49 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். அவர் 3 பவுண்டரிகளும் 4 சிக்சர்களும் விளாசினார். 20 ஓவர் முடிவில் மும்பை இந்தியன்ஸ் அணி 9 விக்கெட் இழப்புக்கு 179 ரன்கள் எடுத்தது. 

ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் சந்தீப் சர்மா அபாரமாக பந்துவீசினார். காயத்தில் இருந்து மீண்டு வந்து இப்போட்டியில் களம் கண்ட அவர் 4 ஓவர்கள் பந்துவீசி வெறும் 18 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 5 விக்கெட்டுகளை கைப்பற்றினார். டிரென்ட் போல்ட் 2 விக்கெட்டுகளை வீழ்த்த, ஆவேஷ் கான், யுஸ்வேந்திர சாஹல் தலா ஒரு விக்கெட் கைப்பற்றினர். இப்போட்டியில் ஒரு விக்கெட் எடுத்ததன் மூலம் ஐபிஎல் கிரிக்கெட் வரலாற்றில் 200 விக்கெட்டுகளை வீழ்த்தி சாதனை படைத்த முதல் பந்துவீச்சாளர் என்ற பெருமையை பெற்றார் யுஸ்வேந்திர சாஹல். அவருக்கு முன்பு ஐபிஎல் கிரிக்கெட்டில் இதுவரை யாரும் 200 விக்கெட்டுகளை வீழ்த்தியதில்லை.  

மேலும் படிக்க | IPL playoffs: இன்னும் ஆர்சிபி அணிக்கு பிளேஆப் செல்ல வாய்ப்புகள் உள்ளதா?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News