கால்பந்து வீரர் மெஸ்ஸி சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு!!

Last Updated : Jun 27, 2016, 12:04 PM IST
கால்பந்து வீரர் மெஸ்ஸி சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு!! title=

இந்த தலைமுறையின் மிகச்சிறந்த கால்பந்தாட்ட வீரர்களில் ஒருவராக கருதப்படுபவர் அர்ஜென்டினாவின் கால்பந்து அணி வீரர் லியோனல் மெஸ்ஸி அவர்கள் சர்வதேச கால்பந்து போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.

இதுகுறித்து மெஸ்ஸி கூறும்போது:- மிகவும் கடினமான கணம். என்ன நடந்தது என்பதை ஆய்வு செய்வது கடினம். ஓய்வு குறித்து ஆய்ந்து முடிவெடுப்பதும் கடினம், நான் என் அறையில் அமர்ந்து சிந்தித்தேன். அர்ஜென்டினா அணிக்கு விளையாடுவது என்பது என்னை பொறுத்தவரை முடிந்து போன விஷயமாகவே கருதுகிறேன். இது எனக்கானதல்ல என்றார்.

கடைசியாக அவர் விளையாடிய கோபா அமெரிக்கா கால்பந்து போட்டிகளில் அர்ஜென்டினாவை இறுதி ஆட்டம் வரை அழைத்துச் சென்றார். இறுதி போட்டியில், சிலி அணியிடம் அர்ஜென்டினா அணி பெனாலிட்டி ஷூட் அவுட் முறையில் அதிர்ச்சி தோல்வியடைந்தது. மெஸ்ஸி தனக்கு அளிக்கப்பட பெனாலிட்டி ஷூட் அவுட்டை அதில் தவற விட்டார் என்பது கவனிக்கத்தக்கது.

இந்நிலையில், கோபா அமெரிக்கா போட்டியின் தோல்வி எதிரொலியாக சர்வதேச கால்பந்து போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக மெஸ்ஸி அறிவித்துள்ளார். மெஸ்ஸி விளையாடிய இந்தக் காலக்கட்டத்தில் அர்ஜென்டினா அணி பெரிய தொடர்கள் எதிலும் வென்றதில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

 

Trending News