அர்ஜென்டினா தோல்வி: லியோனல் மனைவியை கலாய்க்கும் நெட்டிசன்கள்!

குரோஷியா அணிக்கு எதிரான ஆட்டத்தில் சொதப்பல் மெஸ்ஸியின் மனைவியை கேலி செய்யும் ரசிகர்கள்!!

Last Updated : Jun 23, 2018, 03:42 PM IST
அர்ஜென்டினா தோல்வி: லியோனல் மனைவியை கலாய்க்கும் நெட்டிசன்கள்! title=

குரோஷியா அணிக்கு எதிரான ஆட்டத்தில் சொதப்பல் மெஸ்ஸியின் மனைவியை கேலி செய்யும் ரசிகர்கள்!!

உலக கோப்பை கால்பந்து போட்டியின் லீக் ஆட்டத்தில் குரோஷியா அணி 3–0 என்ற கோல் கணக்கில் அர்ஜென்டினாவை வெற்றிக்கொண்டது. நிஸ்னி நவ்கோரோட் நகரில் நேற்று முன்தினம் இரவு நடந்த இந்த ஆட்டத்தில் 2 முறை சாம்பியன் பட்டம் அர்ஜென்டினா அணி, குரோஷியாவை எதிர்கொண்டது.

ஆட்டத்தின் ஆரம்பம் முதலே அர்ஜென்டினா அணி தடுமாறியது. எதிர்முனையில் குரோஷியா அணியும் தங்கள் பங்கிற்கு எதிர்ப்பு ஆட்டத்தினை கொடுத்தது. எனினும் இரு அணியினருக்கும் நல்ல வாய்ப்புகள் கிடைத்தும், அதனை வீணாக்கினார்கள். முதல் பாதியில் இரு அணியினராலும் கோல் எதுவும் அடிக்க முடியவில்லை.

இரண்டாவது பாதியில் ஆக்ரோசமான விளையாட்டை வெளிப்படுத்திய குரோஷியா அணி 3 கோல்களை அடித்தது. ஆட்டத்தின் முடிவில் அர்ஜென்டினா 3-0 என்ற கணக்கில் தோல்வியை தழுவியது.

இந்த தோல்வியானது அர்ஜென்டினா நாட்டை சேர்ந்த கால்பந்து ரசிகர்களை மட்டுமல்லாமல், அந்த அணியையும், அணித்தலைவர் மெஸ்சியையும் நேசிக்கும் பிற நாட்டு ரசிகர்களையும் வெகுவாக பாதித்துள்ளது. மெஸ்சின் சொதப்பலான ஆட்டத்தினால் அவரது ரசிகர்கள் அதிருப்தியடைந்து, அவர் GOAT அல்ல Sheep என்று டிவிட்டரில் கிண்டல் செய்து வருகின்றனர். 

இந்நிலையில், மெஸ்ஸியின் மனைவி அண்டோனெல்லா ரோக்குஸோ சாம்பியன் ஷிப்பிற்காக ரஷ்யாவில் இருக்க முடியாததால், அவர் போட்டிக்கு முன் தனது கணவருக்கு வாழ்த்து தெரிவித்து தம்பதியரின் மூன்று மாத வயது மகனின் படமத்துடன்  "#வாமோஸ்பேபி" என்ற தலைப்புடன், "#GoDaddy" என தலைப்பிட்டு டுவிட் செய்துள்ளார்.

அர்ஜெண்டினா அணி தோல்வியால் கோபம் அடைந்த அர்ஜெண்டினா ரசிகர்கள் மெஸ்ஸியின் மனைவி அண்டோனெல்லாவை இன்ஸ்டாகிராமில் விமர்சனம் செய்ய தொடங்கினர். கோபமான ரசிகர்கள் அந்தப் படத்திற்கு தலைப்பைக் கேலி செய்தனர்.

அதில் சிலர் ஆதரவு தெரிவித்தும் இருந்தனர். "லியோ, போ, உங்கள் குடும்த்துடன் இருங்கள் என கூறி இருந்தனர்.

 

Trending News