சனி ஜெயந்தி... பாடாய் படுத்தும் ஏழரை சனியிடம் இருந்து தப்பிக்க சில பரிகாரங்கள்!

Lord Shani Jeyanthi: சனி பகவான் அவதரித்த தினமான வைகாசி மாத அமாவாசை தினம், சனி அமாவாசை என்றும், சனி ஜெயந்தி என்றும் கொண்டாடப்படுகிறது. இந்நாளில் செய்யப்படும் பரிகாரங்கள் சனீஸ்வரன் மனதை குளிர்விக்கிறது

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : May 6, 2024, 12:49 PM IST
  • சனி ஜெயந்தி நாளில் சனி பகவானை வழிபாடு செய்வது மிகவும் சிறந்தது.
  • பாடாய் படுத்தும் ஏழரை சனியிடம் இருந்து தப்பிக்க சில பரிகாரங்கள்.
  • சனி ஜெயந்தி அன்று சனிதேவனின் மனதை குளிர்விக்க செய்ய வேண்டியவை.
சனி ஜெயந்தி... பாடாய் படுத்தும் ஏழரை சனியிடம் இருந்து தப்பிக்க சில பரிகாரங்கள்! title=

Lord Shani Jeyanthi: நவகிரகங்களில் கர்ம காரகன் என அழைக்கப்படும் சனீஸ்வரம், நமது பாவ, புண்ணிய செயல்களுக்கு ஏற்ப பலன்களை கொடுக்கிறார். சனி பகவான் அவதரித்த தினமான வைகாசி மாத அமாவாசை தினமான 2024 மே மாதம் 7ம் தேதி, சனி ஜெயந்தியாக கொண்டாடப்படுகிறது. மே 7ம் தேதி காலை 11:40 மணிக்கு தொடங்கும் அமாவாசை மே 8ம் தேதி காலை 8:51 மணிக்கு நிறைவடையும். வைகாசி மாதம் அமாவாசை நாளினை சனி ஜெயந்தியாக கடைபிடிக்கும் நிலையில், இந்த நாளில் சனி பகவானை வணங்குவதற்கான சிறப்ப்பான நாள் என்பதோடு, இந்நாளில் செய்யப்படும் பரிகாரங்கள் சனீஸ்வரன் மனதை குளிர்விக்கிறது. 

சனிதேவின் அதிருப்திக்கு ஆளாக கூடாது என்றும், அவருடைய ஆசியைப் பெறவும் சனி ஜெயந்தி மிகவும் உகந்த நாள். இந்நாளில் வழிபடுவதன் மூலம், சனி தேவன் மகிழ்ச்சியடைந்து, வாழ்க்கையின் தொல்லைகள் மற்றும் துன்பங்களை நீக்குகிறார். ஏழரை நாட்டு சனி, சனி தோஷம், சனி தசை ஆகியவற்றால் பாதிக்கப்பட்டவர்கள், பிரச்சனைகள் நீங்கி நன்மைகள் பெற, சனி ஜெயந்தி நாளில் சனி பகவானை வழிபாடு செய்வது மிகவும் சிறந்தது. மேலும், ஏழை எளியவர்களுக்கு செய்யும் தொண்டும், உதவியும், அன்ன தானமும் சனி பகவானுக்கு மிகவும் பிடித்தமானதாகும்.

சனி ஜெயந்தி அன்று சனிதேவனின் மனதை குளிர்விக்க செய்ய வேண்டியவை

தீப பரிகாரம்:

சனி ஜெயந்தி அன்று தீப பரிகாரம் செய்வதன் மூலம், வாழ்வின் அனைத்து விதமான தொல்லைகள் மற்றும் அசுப தாக்கங்களில் இருந்து நிவாரணம் பெறலாம். சனிபகவானின் அருளைப் பெற எப்போதும் நல்லெஎண்ணெயில் தீபம் ஏற்ற வேண்டும். சனி ஜெயந்தியை முன்னிட்டு, சனிபகவானுக்கு முன்பாக எள்ளை வெள்ளைத் துணியில் கட்டி, நல்லெண்ணெய் தீபம் ஏற்றுவது சிறப்பு. இதனால் சனி தேவர் மனம் குளிர்ந்து, பிரச்சனைகளில் இருந்து நிவாரணம் கிடைக்கிறது.

மேலும் படிக்க | குரு பெயர்ச்சி: 2025 வரை இந்த ராசிகளுக்கு பணக்கார யோகம்... வெற்றிகள் குவியும், மகிழ்ச்சியில் திளைப்பார்கள்!!

அரச மர பரிகாரம்:

சனி ஜெயந்தி அன்று சனிபகவானை மகிழ்விக்க, அரச மரத்தின் கீழ் ஐந்து தீபங்கள் ஏற்ற வேண்டும். ஐந்து தீபங்களிலும் நல்லெண்ணெய் ஊற்றி தீபம் ஏற்றி அரச மரத்தடியில் வைக்கவும். இதனால் வாழ்க்கையில் ஏற்படும் பிரச்சினைகள் மற்றும் கெட்ட நேரங்கள் அனைத்தும் விலகும். நீங்கள் வணங்கும் மரம் சனி கோவிலுக்கு அருகில் இருந்தால் அதன் பலன் அதிகம்.

சனி சாலிசா பாராயணம்:

சனி தேவரின் அருளைப் பெற, சனி ஜெயந்தி நாளில் சனி சாலிசாவை பாராயணம் செய்ய வேண்டும். மாலையில் பாராயணம் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். சனி ஜெயந்தி நாளில் மேலே கூறப்பட்டுள்ள வழிபாடுகளயும் பரிகாரங்களையும் செய்வதன் மூலம், சனி தேவன் மகிழ்ச்சியடைந்து வாழ்க்கையில் வரும் அனைத்து பிரச்சினைகள் மற்றும் துன்பங்களை நீக்குகிறார். சனிதேவரின் அருளைப் பெற்றாலே போதும், வாழ்க்கையில் அனைத்து பிரச்சனைகளில் இருந்து நிரந்தரமாக விடுபட்டு, மகிழ்ச்சியான, நிம்மதியான வாழ்க்கையை வாழலாம்.

பொறுப்புத் துறப்பு: இந்தக் கட்டுரையில் உள்ள தகவல்கள் பல்வேறு ஊடகங்கள், ஜோதிடர்கள், பஞ்சாங்கம், உபதேசங்கள், நம்பிக்கைகள், ஆன்மீக நூல்கள் ஆகியவற்றிலிருந்து சேகரிக்கப்பட்டு உங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. ZEE NEWS இதற்கு பொறுப்பேற்காது.

மேலும் படிக்க | இன்னும் 6 நாட்களில் புதன் பெயர்ச்சி: இந்த ராசிகளுக்கு பதவி உயர்வு, பண வரவு, அனைத்திலும் வெற்றி

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News