Worship On Saturday: சனிக்கிழமை செய்யும் ‘சில’ பரிகாரங்கள் சனீஸ்வரரை சாந்திப்படுத்தும்!

Lord Shani Worship On Saturday : வாழ்க்கையில் வரும் அனைத்து பிரச்சனைகளுக்கும் தீர்வு என்று ஒன்று உண்டு. ஜோதிடங்கள் சொல்லும் தோஷங்கள் என்றால், அதற்கான தீர்வை ஜோதிட நிபுணர்களே கூறிவிடுகின்றனர். அவற்றில் முக்கியமானது சனி தோஷம்... 

நவக்கிரகங்களில் ஈஸ்வரப்பட்டம் பெற்ற ஒரே கிரகமான சனீஸ்வரர், ஒருவரது கர்மவினைகளுக்கு ஏற்றவாறு பலாபலன்களைத் தருகிறார். கர்மத்தை விட்டொழிக்க கதியொன்றுமில்லை என்றாலும், மனமுருகி வேண்டினால் அனைத்தும் சாத்தியமே!

1 /7

சனிபகவானுக்கு உகந்த நாளான சனிக்கிழமை அன்று விரதம் கடைப்பிடித்தால், நீண்ட ஆயுளுடன் நோய்நொடிகள் இன்றி ஆரோக்கியமாக வாழலாம்.

2 /7

சனிபகவானின் அதிபதி மகாவிஷ்ணு. அதனால் தான் திருப்பதிக்கு சனிக்கிழமை விரதம் இருந்து செல்வார்கள் புரட்டாசி மாத சனிக்கிழமைகளில் விரதம் இருப்பது மிகவும் நல்லது

3 /7

சனிக்கிழமைகளில் வரும் பிரதோஷ தினத்தில், சிவனுக்கு வில்வ இலையால் அர்ச்சனை செய்து வழிபடுவது பாவங்களைப் போக்கும்.  

4 /7

சனிக்கிழமைகளில் ஆஞ்சநேயருக்கு வடைமாலை சாற்றி வழிபட்டால். சனீஸ்வரர் ஏற்படுத்தும் பாதிப்புகள் குறையும்.

5 /7

சங்கடஹர சதுர்த்தி தினத்தன்று, விநாயகப் பெருமானுக்கு சிதறு தேங்காய்களை உடைத்து வழிபட்டால், சனியின் பாதிப்புகள் மறைந்துவிடும்

6 /7

சனிக்கிழமையன்று எள்ளு சாதத்தை நைவேத்யமாக சனீஸ்வரருக்கு படைத்துவிட்டு, அதைக் காகத்துக்கு வைக்க வேண்டும்.  

7 /7

சனிபகவானின் தானியம் எள். அந்த எள் எண்ணெயில் சனிக்கிழமைகளில் விளக்குப் போடுவது நன்மைகளைத் தரும்.