சனி வக்ர பெயர்ச்சி... மேஷம் முதல் மீனம் வரை... அதிர்ஷ்ட ராசிகள் எவை..!!

Saturn Retrograde Effect: ஜோதிடத்தில், சனிதேவர் கர்ம பலன்களை அளிப்பவராகக் கருதப்படுகிறார். சனி பகவான் ஒவ்வொரு ராசிக்காரர்களுக்கும் அவரவர் செயல்களின் பலனைத் தருகிறார்.  இந்நிலையில், சனி வக்ர நிலை அடைவது ராசிக்காரர்களின் வாழ்வில் குழப்பம் ஏற்படும் என்கின்றனர் ஜொதிடர்கள். 

சனி தற்போது கும்பத்தில் சஞ்சரிக்கிறார். இந்நிலையில், ஜூன் 29 ஆம் தேதி, சனி கும்பத்தில் வக்ர நிலை அடைகிறது. இதனால் சில ராசிகளுக்கு சனியின் வக்ர நிலையினால் பலன்கள் சாதகமாக இருக்காது. 

1 /14

Saturn Retrograde Effect: சனியின் வக்ர பெயர்ச்சி ஜூன் 29, 2024 அன்று நள்ளிரவு 12:35 மணிக்கு நிகழும். நவம்பர் 15, 2024 வரை சனி கும்பத்தில் வக்ர நிலையிலேயே இருக்கும். அனைத்து 12 ராசிகளிலும் சனியின் வக்ர நிலை என்ன விதமான பலனைத் தரும் என்பதைத் தெரிந்து கொள்வோம்.

2 /14

மேஷ ராசிக்காரர்கள் தொழில் மற்றும் வேலைக்கான குறிக்கோள்களை மறுபரிசீலனை செய்ய வேண்டியிருக்கும். கடின உழைப்பும் பொறுமையும் வெற்றிக்கு திறவுகோலாக இருக்கும். கடினமாக உழைத்தால் வெற்றி உங்கள் கைகளை முத்தமிடும். சனி வக்ர நிலை அடையும் போது, ​​நீங்கள் கொஞ்சம் கடினமாக உழைக்க வேண்டியிருக்கும். ஆனால் பலன்கள் சிறப்பாக இருக்கும்.

3 /14

ரிஷப ராசிக்காரர்கள் நிதி விஷயங்களிலும் பாதுகாப்பு உணர்விலும் கவனம் செலுத்த வேண்டிய அவசியம் ஏற்படலாம். தேவையற்ற செலவுகளைத் தவிர்த்து, நீண்ட கால இலக்குகளை மனதில் கொண்டு சேமிக்கவும். இது தவிர, சிறிய சவால்கள் ஏற்பட்டால், பீதி அடையாமல், மீண்டும் ஒருமுறை உங்கள் முடிவுகளை மறுபரிசீலனை செய்து, சூழ்நிலைக்கு ஏற்றவாறு முடிவுகளை எடுங்கள்.

4 /14

மிதுன ராசிக்காரர்கள் குடும்ப விஷயங்களில் கவனம் செலுத்த வேண்டி வரும். இதற்கு நீங்கள் பொறுமையாக உழைக்க வேண்டும். குடும்ப விஷயங்களில் வாக்குவாதம் அல்லது சண்டையில் சிக்காமல் இருந்தால், அது உங்களுக்கு நல்லது. பரஸ்பரம் ஆலோசனை செய்து முடிவுகளை எடுக்க முயற்சி செய்யுங்கள். மற்றவர்களைப் புரிந்துகொண்டு பொறுமையாகப் பேச முயற்சிக்கவும்.

5 /14

கடக ராசிக்காரர்கள் தங்கள் உணர்ச்சிகளை கட்டுப்ப்படுத்துவதில் கவனம் செலுத்த வேண்டும். நீங்கள் உணர்ச்சிகளுக்கு ஆளாகாமல், சில ரகசியங்களை யாரிடமும் சொல்லக்கூடாது என்பதையும் நீங்கள் கவனத்தில் கொள்ள வேண்டும். இல்லை என்றால், இது எதிர்காலத்தில் உங்களுக்கு சிக்கல்களை ஏற்படுத்தக்கூடும். பழைய பிரச்சனைகளுக்கு தீர்வு காண இது நல்ல நேரம்.

6 /14

சிம்ம ராசிக்காரர்களுக்கு, சனியின் வக்ர பெயர்ச்சி காரணமாக தன்னம்பிக்கை மற்றும் படைப்பாற்றலில் சிறிது குறைவு ஏற்படலாம். இதை சமாளிக்க நீங்கள் பகவான் ஹனுமானை வணங்க வேண்டும். நீங்கள் பொறுமையாக இருக்க வேண்டிய நேரம் இது. நேர்மறையாக இருங்கள். கடினமாக உழைக்கவும். மன வலிமையைக் கண்டறிய இது ஒரு நல்ல நேரம். இந்த நேரம் உங்களை ஆன்மீகத்தை நோக்கி அழைத்துச் செல்லும்.

7 /14

கன்னி ராசிக்காரர்கள் தீய பழக்கங்களை கைவிடுவது நல்லது. உடல்நலம் மற்றும் தினசரி வழக்கத்தில் கவனம் தேவை. இந்த நேரத்தில், சிறிய விஷயங்கள் கூட உங்களை பெரிதும் பாதிக்கலாம். குறிப்பாக உங்கள் கெட்ட பழக்கங்கள் உங்கள் ஆரோக்கியத்தை கெடுக்கும். இது உங்கள் வேலை திறனை பாதிக்கும். கெட்ட பழக்கங்களைக் கைவிட்டு ஆரோக்கியமான வாழ்க்கை முறையைக் கடைப்பிடிக்க இது ஒரு நல்ல நேரம்.

8 /14

துலாம் ராசிக்காரர்கள் சமரசம் செய்து கொள்ள வேண்டி வரும். பரஸ்பர உறவுகளில் கவனம் செலுத்த வேண்டிய நேரம் இது. உங்கள் உறவுகளில் விரிசல் ஏற்படக்கூடிய எந்த ஒரு அவசர முடிவையும் எடுக்காதீர்கள். இந்த நேரத்தில்,  குடும்பத்தில் பதற்றம் இருக்கலாம், எனவே பொறுமையாக இருங்கள். மனம் திறந்து பேசுவதன் மூலம் பிரச்சனைகளை தீர்க்கவும்.

9 /14

விருச்சிக ராசிக்காரர்கள் கடந்த கால பிரச்சனைகளை சந்திக்க வேண்டி வரும். அச்சங்களை விட்டுவிட்டு நேர்மறையான மாற்றங்களுக்கு தயாராக இருங்கள். இது உங்களுக்கு முன்னேற உதவும். இது தவிர, கடந்த காலத்தில் வாழ்வதன் மூலம் நீங்கள் மிகவும் பாதிக்கப்படுவீர்கள்.

10 /14

தனுசு ராசிக்காரர்கள் நம்பிக்கை இழக்க வேண்டாம். பயணம் மற்றும் வெளிநாட்டு பயணங்களில் தாமதங்கள் அல்லது தடைகள் இருக்கலாம், ஆனால் நீங்கள் முயற்சியை கைவிட வேண்டும் என்று அர்த்தமல்ல. தொடர்ந்து உங்கள் முயற்சிகளை தொடருங்கள். இதன் மூலம் உங்கள் வேலை தானாக நிறைவடையும். இந்த நேரத்தில் நம்பிக்கையுடன் இருங்கள்.

11 /14

மகர ராசிக்காரர்களின் தொழில் மற்றும் தொழில் வாழ்க்கையில் கடின உழைப்பும் பொறுமையும் தேவைப்படும். தொழிலைப் பொறுத்தவரை, சில நேரங்களில் நேரம் உங்கள் கைகளில் இருந்து நழுவுகிறது அல்லது நீங்கள் விரும்பிய வெற்றி கிடைக்கவில்லை என்று நீங்கள் உணரலாம். ஆனால் பொறுமையாக இருங்கள். இலக்கை அடைய விடாமுயற்சியையும் உறுதியையும் பேணுங்கள்.

12 /14

கும்ப ராசிக்காரர்கள் தங்கள் நண்பர்களை அடையாளம் கண்டு கொள்வார்கள். சமூக வாழ்க்கையிலும் நண்பர்களுடனான உறவுகளிலும் சில ஏற்ற தாழ்வுகள் இருக்கலாம். உண்மையான நண்பர்கள் அடையாளம் காணப்பட்டு உறவுகள் வலுவடையும். நேரம் காரணமாக, சில நேரங்களில் நீங்கள் நண்பர்கள் விஷயத்தில் ஏமாற்றம் பெறலாம்.

13 /14

மீன ராசிக்காரர்கள் சுயபரிசோதனை செய்து கொள்ள வேண்டும். இதனால் உங்கள் மனதில் தெளிவு ஏற்படும். ஆன்மீகம் மற்றும் உள்ளுணர்வில் கவனம் செலுத்துங்கள். இது உங்கள் மனதிற்கு அமைதியைத் தரும், மேலும் உங்கள் படைப்பாற்றலும் வளரும். இதன் மூலம் உங்கள் தொழிலில் புதிய பரிமாணங்களைத் தொட முடியும்.

14 /14

பொறுப்புத் துறப்பு:  இந்தக் கட்டுரையில் உள்ள தகவல்கள் பல்வேறு ஊடகங்கள், ஜோதிடர்கள், பஞ்சாங்கம், உபதேசங்கள், நம்பிக்கைகள், ஆன்மீக நூல்கள் ஆகியவற்றிலிருந்து சேகரிக்கப்பட்டு உங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. ZEE NEWS இதற்கு பொறுப்பேற்காது.