இரவில் அரிசி சாதம் சாப்பிடலாமா? இது நல்லதா கெட்டதா?

Eating Rice At Night: நாம் இரவில் உட்கொள்ளும் உணவுக்கும் நமது உடல் ஆரோக்கியத்துக்கும் அதிக தொடர்பு உள்ளது. ஆகையால் இரவு உணவில் அதிக கவனம் செலுத்த வேண்டியது அவசியமாகும்.

அரிசியை சாதமாக வடிப்பது மிகவும் எளிய காரியமாகும். இதை எளிதாக செய்யலாம் என்பதோடு பலருக்கு பல வகையான சாதங்கள் பிடித்த உணவாகவும் இருக்கின்றன. மக்கள் அரிசியை வெவ்வேறு வழிகளில் சாப்பிடுகிறார்கள். அரிசியில் கார்போஹைட்ரேட் உள்ளது. இதனுடன், இதில் புரதம், கொழுப்பு, கால்சியம் ஆகியவையும் உள்ளன. இருப்பினும் இரவில் சாதம் சாப்பிடலாமா கூடாதா என்ற கேள்வி பலரின் மனதில் நிச்சயம் எழும்.

1 /6

இரவில் சாதம் சாப்பிடலாமா? பொதுவாகவே சாதம் சாப்பிட்டால் உடல் எடை அதிகரிக்கும் என்ற பொதுவான ஒரு கூற்று உள்ளது. அதுவும் இரவு நேரங்களில் சாதம் சாப்பிட பலரும் தயங்குகிறார்கள். ஆனால், இரவில் சாதம் சாப்பிடுவதால் பல நன்மைகள் கிடைக்கும் என நிபுணர்கள் கூறுகிறார்கள். அதை பற்றி இந்த பதிவில் காணலாம். 

2 /6

கார்போஹைட்ரேட் உள்ளது: அரிசியில் கார்போஹைட்ரேட்டின் அளவு அதிகம். இது உடலுக்கு ஆற்றலையும் உற்சாகத்தையும் தருகிறது. கார்போஹைட்ரேட்டுகளின் காரணமாக நாம் நமது பல பணிகளை முழு ஆற்றலுடன் செய்ய முடிகின்றது. 

3 /6

வயிற்றுக்கு நன்மை பயக்கும்: அரிசி வயிற்றுக்கு மிகவும் நன்மை பயக்கும். புழுங்கல் அரிசி எளிதில் ஜீரணமாகும். இதனுடன், வயிற்று வலி மற்றும் அஜீரண பிரச்சனையிலும் இதனால் நன்மை பெறுகிறோம்.  

4 /6

செரிமான அமைப்புக்கு நன்மை பயக்கும்: அரிசி செரிமான அமைப்புக்கும் மிகவும் நல்லது. இதன் காரணமாக, சத்துக்கள் உடலின் அனைத்து பாகங்களுக்கும் சென்றடைகின்றன. அரிசி செரிமான அமைப்புக்கு மிகவும் நன்மை பயக்கும். பலவீனமான செரிமான அமைப்பையும் குணப்படுத்தி, செரிமானம் தொடர்பான பிரச்சனைகளிலும் இது மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

5 /6

இரவில் சாதம் சாப்பிடுவது சரியா? அனைத்திலும் நன்மைகளும் தீமைகளும் சேர்ந்தே உள்ளன. அரிசி சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகளை பார்த்தோம். உடல் எடையை குறைக்க விரும்புபவர்கள், அதிக உடல் செயல்பாடு இல்லாதவர்கள் இரவில் அரசி உட்கொள்வதை தவிர்க்கலாம், அல்லது மிக குறைவாக உட்கொள்ளலாம். 

6 /6

பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.