Astro Traits: ஆண்களை காதல் வலையில் சிக்க வைப்பதில் வல்ல ‘4’ ராசிப் பெண்கள்!

ஜோதிடத்தில், எதிர்காலம் குண நலன்கள் பற்றி அறிய பல வழிகள் சொல்லப்பட்டுள்ளன. ராசியின் அடிப்படையில் ஒருவரின் இயல்பு மற்றும் எதிர்காலத்தை அறிவது இந்த வழிகளில் ஒன்றாகும். 

ஒவ்வொரு நபரின் ராசியும், அவர் பிறந்த நேரத்தைப் பொறுத்து தீர்மானிக்கப்படுகிறது. அதன் அடிப்படையில் அந்த நபரின், மன இயல்பு, குணம், எதிர்காலம் ஆகியவற்றை கணிக்கலாம். 

1 /7

காதல் உறவுகள் மிகவும் நுட்பமான உணர்வு பூர்வமான சரங்களால் பிணைக்கப்பட்டுள்ளன. இன்று ஜோதிடத்தில் கூறப்படும் ராசிகளின் குணாதிசயங்களின் அடிப்படையில் எந்தெந்த ராசிப் பெண்கள், தங்கள் துணையின் இதயத்தை எளிதில் வெல்வார்கள் என்பதை அறிந்து கொள்ளலாம். இவர்களின் காதல் வாழ்க்கை எப்பொழுதும் மணம் வீசிக் கொண்டே இருப்பதற்கு இதுவே காரணம். 

2 /7

ஜோதிடத்தில், மிகவும் கவர்ச்சிகரமான பெண்கள் பற்றி கூறப்பட்டுள்ளன. குறிப்பிட்ட 4 ராசிப் பெண்களை நோக்கி ஆண்கள் மிக விரைவாக ஈர்க்கப்பட்டு காதல் வலையில் சிக்கிக் கொள்கிறார்கள்.  காதல் உணர்வும், மற்றவர்களை ஈர்க்கும் சக்தியும் அதிகமாக இருக்கும் அந்த 4 ராசிகள் எவை என்று அறிந்து கொள்ளலாம்.

3 /7

மிதுன ராசி பெண்களின் நகைச்சுவை உணர்வு அற்புதமானது. அவர்களின் பேச்சு மிகவும் இனிமையானவை. யாரையும் எளிதில் ஈர்க்கும். இந்த பேச்சு  திறன் அனைவரையும் ஈர்க்கும். ஆண்கள் அவர்களை வாழ்க்கை துணையாக வர வேண்டும் என அதிகம் விரும்புகிறார்கள். ஆண்களை கவர அவர்கள் எதுவுமே செய்ய தேவையில்லை. அவர்கள் தாங்களாகவே வந்து சிக்கிக் கொள்வார்கள்.

4 /7

கன்னி ராசிப் பெண்கள் மிகவும் புத்திசாலிகளாகக் கருதப்படுவார்கள். இவர்கள் ஈர்ப்பு அனைவரையும் இவர்களை நோக்கி வர வைக்கும். இந்த ராசியைச் சேர்ந்த பெண்கள் தங்கள் நிலையில் உறுதியாக இருக்கிறார்கள், அவர்கள் எடுத்த வேலையை முடித்த பின்னரே மறு வேலை பார்ப்பார்கள். ஆண்கள் இந்த ராசிப் பெண்களின் பேச்சை மிகவும் கவர்ச்சிகரமானதாகக் கருதுகிறார்கள். அவர்களுக்குள் கோபம் குறைவாகவும், பொறுமை அதிகமாகவும் இருப்பதால், ஆண்கள் அவர்களை விரும்புகிறார்கள்.

5 /7

விருச்சிக ராசி பெண்கள் இயற்கையால் மிகவும் கூலான மனம் கொண்டவர்களாக கருதப்படுகிறார்கள். இந்த ராசியின் பெண்கள் ஆண்கள் மீது ஆதிக்கம் செலுத்துவதில்லை. ஆண்கள் அவர்களை விரும்புவதற்கு இதுவே காரணம், ஏனெனில் இது அவர்களுக்கு முழுமையான இடத்தை அளிக்கிறது. இந்த ராசி பெண்கள் தங்கள் காதலருக்கு ஒருபோதும் கட்டுப்பாடுகளை விதிக்க மாட்டார்கள். அதனால்தான் ஆண்கள் அவர்களுடன் நேரத்தை செலவிட விரும்புகிறார்கள். மறுபுறம், அவர்களின் இயல்பு மிகவும் அக்கறை கொண்டது. 

6 /7

மகர ராசி பெண்களை பற்றி ஜோதிடத்தில் கூறப்பட்டிருப்பதாவது, அவர்கள் இயல்பிலேயே மிகவும் சகிப்புத்தன்மை கொண்டவர்கள், எனவே அவர்களின் காதல் நீண்ட காலம் நீடிக்கும். இந்த ராசியைச் சேர்ந்த பெண்கள் சிறந்த வாழ்க்கைத் துணையாக விளங்குகிறார்கள். நம்பிக்கையான மகர ராசி பெண்கள் கடினமான காலங்களில் கூட தங்கள் துணையுடன் எப்போதும் துணை நிற்கிறார்கள். அவளுடைய ஆளுமையில் அவ்வளவு ஈர்ப்பு இருக்கிறது, இதனால் ஆண்கள் எளிதில் அவளை நோக்கி இழுக்கப்படுகிறார்கள். மகர ராசி பெண்கள் பார்ப்பதற்கு மிகவும் கவர்ச்சியாக இருப்பார்கள், துணையிடம் அர்ப்பணிப்பு உணர்வு இருக்கும்.

7 /7

பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல் பொதுவான அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளது. ZEE NEWS இதற்கு பொறுப்பேற்காது.