PELE: விரைவில் குணமடைய வேண்டுகிறோம்: கண்ணீரில் கரையும் பீலே ரசிகர்கள்

Get Well Soon PELE: கால்பந்து விளையாட்டின் ஜாம்பவானாக கருதப்படும் பீலே மருத்துவனையில் சிகிச்சை பெற்று வருகிறார். கேன்சருக்கான கீமோதெரபி சிகிச்சைக்கு பீலேவின் உடல்நிலை ஒத்துழைக்கவில்லை என பிரேசில் உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்தன.

ஆனால் இந்த செய்தியை மறுத்து பீலேவின் மகள் Flavia Nascimento தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டி அளித்துள்ளார். உண்மை இல்லாத இதுபோன்ற செய்திகள் வருத்தமளிக்கிறது என்று அவர் கூறினார்.

1 /6

பிரேசில் மற்றும் கிளப் அணிகளான சாண்டோஸ் மற்றும் நியூயார்க் காஸ்மோஸ் அணிகளுக்காக ஸ்ட்ரைக்கராக விளையாடிய பீலே, காலத்தை கடந்த வீரர் ஆவார்

2 /6

1958, 1962 மற்றும் 1970 ஆகிய ஆண்டுகளில் பிரேசில் உலகக் கோப்பையை வெல்ல பீலேவின் பங்களிப்பு மிகவும் முக்கியமானது

3 /6

22 வருடங்கள் கால்பந்து விளையாடி 1282 கோல்கள் அடித்தவர் பீலே

4 /6

பீலேவின் உண்மையான பெயர் எட்சன் அராண்டஸ் டூ நசிமென்டோ 

5 /6

பிரேசிலின் விளையாட்டுத்துறை அமைச்சராகவும் பணியாற்றியிருக்கிறார்

6 /6

செப்டம்பர் 2021 முதல் புற்றுநோய் பாதிப்புக்கு சிகிச்சை எடுத்து வருகிறார் பீலே