EPFO உறுப்பினர்களுக்கு ஜாக்பாட் அப்டேட்: கணக்கில் கூடுதல் பணம் வரப்போகுது!!

EPFO Update: இபிஎஃப் உறுப்பினர்களுக்கு ஒரு ஜாக்பாட் செய்தி கிடைத்துள்ளது. பிஎஃப் ஊழியர்கள் விரைவில் வட்டித் தொகையைப் பெற உள்ளனர். இது பண்டிகை காலத்தில் ஊழியர்களுக்கு மிகப்பெரிய பரிசாக இருக்கும். 

1 /8

ஓய்வூதியத்திற்கான திட்டமிடல் மற்றும் நிதி பாதுகாப்பை உறுதி செய்வது ஒவ்வொருவரின் வாழ்க்கையிலும் ஒரு முக்கிய அம்சமாகும். 

2 /8

தற்போது இபிஎஃப் உறுப்பினர்களுக்கு ஒரு ஜாக்பாட் செய்தி கிடைத்துள்ளது. பிஎஃப் ஊழியர்கள் விரைவில் வட்டித் தொகையைப் (PF Interest) பெற உள்ளனர். இது பண்டிகை காலத்தில் ஊழியர்களுக்கு மிகப்பெரிய பரிசாக இருக்கும். 

3 /8

சில நாட்களுக்கு முன், பிஎஃப் ஊழியர்களுக்கு 8.15 சதவீத வட்டியை அரசு அறிவித்தது. அதன்பிறகு இந்த வட்டி பணம் எப்போது கணக்கில் வரவு வைக்கப்படும் என ஊழியர்கள் அனைவரும் ஆவலோடு காத்திருக்கின்றனர். தற்போது தொழிலாளர்களின் காத்திருப்பும் முடிவுக்கு வர உள்ளது. 

4 /8

இன்னும் சில நாட்களில் வட்டி பணம் சந்தாதாரர்களின் கணக்கில் வரவு வைக்கப்படும். பிஎஃப் இருப்பை இந்த வழிகளில் செக் செய்யலாம். 

5 /8

EPF கணக்கில் அரசாங்கம் எவ்வளவு தொகையை செபாசிட் செய்துள்ளது என்பதை அறிய நீங்கள் எங்கும் அலைய வேண்டியது இல்லை. பிஎஃப் சந்தாதாரர்கள் உமங் செயலியை விரைவில் பதிவிறக்கம் செய்து, வீட்டில் இருந்தபடியே தங்கள் கணக்கில் உள்ள தொகையை சரிபார்க்கலாம்.

6 /8

EPFO ​​இன் அதிகாரப்பூர்வ இணையதளத்திற்குச் ( epfindia.gov.in) சென்றும் உங்கள் கணக்கில் உள்ள தொகையை பற்றி தெரிந்துகொள்ளலாம். 

7 /8

மிஸ்டு கால் மூலம் பிஎஃப் இருப்பை அறிய, கணக்கு வைத்திருப்பவரின் மொபைல் எண்ணை இபிஎஃப்ஓ -வில் பதிவு செய்ய வேண்டும். பிஎஃப் சந்தாதாரர் மிஸ்டு கால் மூலம் இருப்புத் தகவலைப் பெற பதிவுசெய்யப்பட்ட மொபைல் எண்ணிலிருந்து 011-22901406 என்ற எண்ணுக்கு மிஸ்டு கால் கொடுக்க வேண்டும். சிறிது நேரம் கழித்து, உங்கள் மொபைலுக்கு எஸ்எம்எஸ் மூலம் கணக்குத் தகவல் வரும்.

8 /8

எஸ்எம்எஸ் மூலம் பிஎஃப் இருப்பை அறிய, இபிஎஃப்ஓ -இல் பதிவுசெய்யப்பட்ட மொபைல் எண்ணிலிருந்து 7738299899 என்ற எண்ணுக்கு SMS செய்யவும். இதற்கு, EPFO UAN LAN என்று டைப் செய்ய வேண்டும். இங்கு LAN என்றால் மொழி என்று பொருள்.