SA vs NED: தென்னாப்பிரிக்காவில் பிறந்து நெதர்லாந்து அணியில் விளையாடும் 3 வீரர்கள்!

SA vs NED: நடப்பு உலகக் கோப்பை தொடரில் நெதர்லாந்து அணியில் விளையாடும் மூன்று வீரர்கள் தென்னாப்பிரிக்கா நாட்டில் பிறந்தவர்கள் அவர்கள் குறித்து தெரிந்துகொள்ளலாம்.

  • Oct 17, 2023, 18:33 PM IST

 

 

1 /7

உலகக் கோப்பையின் இன்று தென்னாப்பிரிக்கா - நெதர்லாந்து அணிகள் மோதுகின்றன. அந்த வகையில், தென்னாப்பிரிக்காவில் பிறந்து நெதர்லாந்து அணிக்காக விளையாடும் மூன்று வீரர்களை இதில் காணலாம்.

2 /7

1. ரியான் க்ளீன் (Ryan Klein) - நடப்பு உலகக் கோப்பையில் நெதர்லாந்து அணியின் வேகப்பந்துவீச்சாளராக உள்ள ரியான் க்ளீனும் தென்னாப்பிரிக்காவில் பிறந்தவர். இவர் 1997ஆம் ஆண்டில் கேப் டவுண் நகரில் பிறந்தார்.   

3 /7

இவர் தனது வம்சாவளி மூலம் நெதர்லாந்தின் பாஸ்போர்டை பெற்றார். அவர் கடந்தாண்டு நெதர்லாந்து அணிக்காக அறிமுகமானார்.   

4 /7

2. காலின் ஆக்கர்மேன் (Colin Ackermann) - தற்போதைய நெதர்லாந்து அணியின் டாப்-ஆர்டர் வீரராக உள்ள காலின் ஆக்கர்மேன் தென்னாப்பிரிக்காவில் பிறந்தவர். இவர் 1991ஆம் ஆண்டில் அங்குள்ள கேப் மாகாணத்தின் ஜார்ஜ் நகரில் பிறந்தவர்.   

5 /7

இவர் தென்னாப்பிரிக்காவுக்கு 19 வயதுக்குட்பட்டோருக்கான அணியில் துணை கேப்டனாக 2010ஆம் ஆண்டில் செயல்பட்டார். தேசிய அணியில் வாய்ப்பில்லாததால் அவர் நெதர்லாந்துக்கு மாறினார். அங்கு 2019இல் தனது முதல் சர்வதேச போட்டியை விளையாடினார். இவரும் நடப்பு தொடரில் உள்ளார்.   

6 /7

3. ரோலோஃப் வான் டெர் மெர்வே (Roelof van der Merwe) - இவர் 1984ஆம் ஆண்டு தென்னாப்பிரிக்காவின் ஜோகன்னஸ்பர்க் நகரில் பிறந்தவர். ரோலோஃப் வான் டெர் மெர்வே: இவர் சர்வதேச அளவில் தென்னாப்பிரிக்காவுக்கு 13 ஒருநாள் மற்றும் பல டி20 போட்டிகளை விளையாடி உள்ளார்.  

7 /7

தென்னாப்பிரிக்க அணியில் அவருக்கு பெரிதாக வாய்ப்பில்லை என்பதால் அவர் நெதர்லாந்து சென்று அங்கு குடியுரிமையும் பெற்றார். 2015இல் நேபாள அணிக்கு எதிராக வான் டெர் மெர்வே நெதர்லாந்து அணிக்காக விளையாடினார். டி20 போட்டிகளில் இரு நாடுகளுக்காக விளையாடிய 5ஆவது வீரர் என்ற பெருமையை பெற்றார். இவர் நடப்பு உலகக் கோப்பையில் முக்கிய வீரராக உள்ளார்.