உடல் பருமனை குறைக்க... சிக்குனு மாற... தினமும் இதை பண்ணுங்க போதும்

Weight Loss Tips: உடல் எடையை குறைப்பதில்  நமது உணவுகள் மற்றும் அன்றாட பழக்கவழக்கங்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன. உடல் செயல்பாடு ஒட்டுமொத்த ஆரோக்கியத்திற்கும் முக்கியமானது.

Weight Loss Tips: நாம் உணவை எப்போது, எப்படி, எவ்வளவு சாப்பிடுகிறோம் என்பதும், நாம் தினமும் கடைபிடிக்கும் சில பழக்கவழக்கங்களும் நமது உடல் பருமனுக்கு காரணமாகின்றன. கலோரி உட்கொள்ளலை குறைத்து, தொப்பை கொழுப்பை குறைத்து, உடல் எடையை குறைக்க நாம் அன்றாட வாழ்வில் கண்டிப்பாக பின்பற்ற வேண்டிய சில முக்கிய குறிப்புகளை பற்றி இங்கே காணலாம். 

1 /9

தண்ணீர்: உணவுக்கு முன் தண்ணீர் குடிப்பது பசியைக் குறைக்க உதவும். தண்ணீர் குடிப்பது, உணவின் போது உட்கொள்ளப்படும் கலோரிகளைக் குறைக்கும். உடல் நீரேற்றமாக இருப்பது செரிமானத்தை மேம்படுத்தி வளர்சிதை மாற்றத்தை மேம்படுத்தி ஒட்டுமொத்த உடல் ஆரோக்கியத்தையும் மேம்படுத்தும். 

2 /9

புரதச்சத்து: புரதச்சத்து நீண்ட நேரத்திற்கு நமக்கு நிறைவான உணர்வை அளிக்கின்றது. இதனால் நாம் தேவையை விட அதிகமான, ஆரோக்கியமற்ற உணவுகளை உட்கொள்வது தவிர்க்கபப்டுகின்றது. மேலும், புரதச்சத்து தசை வளர்ச்சிக்கு உதவுகிறது. இது ஒட்டுமொத்த ஆரோக்கியத்திற்கும் வளர்சிதை மாற்றத்திற்கும் முக்கியமானது.

3 /9

உணவில் கவனம்: நாம் உண்ணும் போது உணவில் கவனம் செலுத்துவதும், ஒவ்வொரு வாய் உணவையும் ரசித்து, ருசித்து சாப்பிடுவதும் மிக முக்கியமாகும். அவசரமாக சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். இது செரிமானத்தை பாதிக்கக்கூடும். 

4 /9

உறக்கம்: போதுமான தூக்கம் மிக அவசியம். தூக்கமின்மை பசி மற்றும் பசியைக் கட்டுப்படுத்தும் ஹார்மோன் அளவை சீர்குலைக்கும். இது பசியை அதிகரித்து அதிகப்படியான உணவுக்கு வழிவகுக்கும். தரமான தூக்கத்திற்கு முன்னுரிமை அளிப்பது ஒட்டுமொத்த ஆரோக்கியத்திற்கு நல்லது. இது எடை இழப்புக்கும் உதவுகிறது. 

5 /9

துரித உணவுகள்: பதப்படுத்தப்பட்ட உணவுகள், துரித உணவுகள், அதிக சர்க்கரை கொண்ட உணவுகள் ஆகியவற்றில் பெரும்பாலும் அதிக கலோரிகள் இருக்கும். இவற்றில் அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் இல்லாததால், இவை எடை அதிகரிப்பு மற்றும் உடல்நலப் பிரச்சினைகளுக்கு வழிவகுக்கும். ஊட்டச்சத்து நிறைந்த உணவுகளைத் தேர்ந்தெடுப்பது எடை இழப்பு மற்றும் ஒட்டுமொத்த ஆரோக்கியத்திற்கு உதவியாக இருக்கும். 

6 /9

உடல் செயல்பாடு: தினமும் போதுமான அளவு உடல் செயல்பாடுகள் இருப்பது மிக அவசியமாகும். இது கலோரிகளை எரிப்பது மட்டுமல்லாமல், வளர்சிதை மாற்றத்தையும் மேம்படுத்தி, மனநிலையை மேம்படுத்தி ஒட்டுமொத்த ஆரோக்கியத்தையும் மேம்படுத்துகிறது. தினமும் குறைந்தது 30 நிமிடங்களுக்காவது ஏதாவது உடற்பயிற்சி, யோகா, நடைபயிற்சி, ஓட்டப்பயிற்சி என ஏதாவது ஒன்றை செய்வது நல்லது. 

7 /9

உணவின் அளவு: உடலுக்குத் தேவையானதை விட அதிக கலோரிகளை உட்கொள்வதைத் தவிர்க்க, போர்ஷன் அதாவது உணவின் அளவில் கவனமாக இருப்பது நல்லது. பசிக்கு ஏற்றவாறு, ஆரோக்கியமான, சமச்சீரான உணவை மட்டுமே உட்கொள்ள வேண்டும். 

8 /9

மன அழுத்தம்: எடை அதிகரிப்புக்கு மன அழுத்தம் ஒரு முக்கிய காரணமாக உள்ளது. ஆகையால் மன அழுத்தத்தை நிர்வகிக்க ஆரோக்கியமான வழிகளைக் கண்டறியவும். நாள்பட்ட மன அழுத்தம் ஹார்மோன் அளவுகள் மற்றும் பசியின்மை கட்டுப்பாடு ஆகியவற்றில் தாக்கத்தை ஏற்படுத்தும். இதன் காரண்மாக எடை அதிகரிக்கும். எடை இழப்புக்கும், ஒட்டுமொத்த நல்வாழ்வுக்கும் தியானம், யோகா, உடற்பயிற்சி அல்லது உங்களுகு பிடித்தமான பொழுதுபோக்குகள் போன்றவை மூலம் மன அழுத்தத்தைக் குறைக்கும் செயல்களில் ஈடுபடுவது நல்லது. 

9 /9

பொறுப்பு துறப்பு: அன்புள்ள வாசகரே, எங்கள் செய்திகளைப் படித்ததற்கு நன்றி. இந்தச் செய்தி உங்களுக்கு பல தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதை எழுதுவதில் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களின் உதவியை நாங்கள் பெற்றுள்ளோம். இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.