Astro Traits: பணத்தை ஊதாரித்தனமாக செலவு செய்யும் ‘சில’ ராசிகள்!

Astro Traits: ஜோதிடத்தில் சில ராசிகள் பற்றி குறிப்பிடுகையில், சில ராசிக்கு சொந்தக்காரர்கள், தங்கள் ஆசைகலை நிறைவேற்றிக் கொள்ள, பணத்தை ஊதாரித்தனமாக செலவு செய்வார்கள் என்றும், பனத்தை சேமிக்கும் எண்னமே இருப்பதில்லை எனவும் கூறப்பட்டுள்ளது. 

ஜோதிடத்தில், குறிப்பிட்ட 5 ராசிகள் மிகவும் செலவு செய்வார்கள் என கூறப்பட்டுள்ளது இந்த ராசிக்காரர்கள் தங்கள் விருப்பங்களை நிறைவேற்ற எந்த எல்லைக்கும் செல்லலாம். பணம் அவர்களிடம் நிலைக்காது. பணத்தை தண்ணீரைப் போல் செலவு செய்யும் இந்த ராசிகளைப் பற்றி தெரிந்து கொள்வோம்.

(பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல் பொதுவான அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளது. ZEE NEWS இதற்கு பொறுப்பேற்காது.)

1 /5

கும்ப ராசிக்காரர்ககள் தங்களின் பொய்யான பெருமையை காட்ட நிறைய செலவு செய்கிறார்கள். சமுதாயத்தில் தங்களின் அந்தஸ்தை நிலைநிறுத்த, இவர்கள் பணத்தை தண்ணீராக செலவழிக்கிறார்கள். இந்த ராசிக்காரர்களால் காப்பாற்ற முடியாது. பணம் வந்தாலே உடனே செலவு செய்கிறார்கள்.

2 /5

விருச்சிக ராசியின் அதிபதி செவ்வாய். இந்த ராசிக்காரர்கள் பணம் செலவழிக்கும் விஷயத்தில் முன்னோடியாக இருக்கிறார்கள். பிறரைப் பற்றி கவலைப்படாமல் சுதந்திரமாக வாழ்கிறார்கள்; பணத்தை செலவு செய்யும் விஷயத்தில் இவர்கள் சற்றும் பின்வாங்குவதில்லை. இந்த ராசிக்காரர்கள் இன்றைய நாளை வாழ விரும்புகிறார்கள்.

3 /5

உடல் சுகங்களுக்குக் காரணமான சுக்கிரனின் ராசி இது. துலா ராசிக்காரர்கள் மிகவும் பொழுதுபோக்ககிறகாக அதிகம் செலவழிக்கின்றனர். தங்கள் ஆசையை நிறைவேற்றுவதில் பின்வாங்க மாட்டார்கள். இவர்கள் தமக்கு மட்டுமின்றி தங்கள் நண்பர்கள் மற்றும் உறவினர்களின் பொழுது போக்கிற்காகவும் பணத்தை செலவிடுகின்றனர்.

4 /5

சிம்ம ராசியின் அதிபதி சூரியன். இந்த ராசிக்காரர்கள் தங்கள் கம்பீரமான ஆடம்பரத்திற்கும் நிகழ்ச்சிக்கும் பெயர் பெற்றவர்கள். தங்களுக்காக நிறைய பணம் செலவழிக்கிறார்கள். பல சமயங்களில் இந்தப் பழக்கத்தால் இவர்களும் கடனாளிகளாகி விடுகிறார்கள்.இவர்களுக்கு ஆடம்பர வாழ்க்கை முறை மிகவும் பிடிக்கும். 

5 /5

மிதுன ராசியின் அதிபதி புதன். இந்த ராசிக்காரர்கள் பணத்தை தண்ணீரை போல் செய்வார்கள். தங்கள் வசதிக்காக செலவு செய்யத் தயங்குவதில்லை. இந்த ராசிக்காரர்கள் தங்களின் வாழ்க்கை மற்றும் உணவுக்காக நிறைய பணம் செலவழிப்பார்கள். இவர்கள் மற்றவர்களுக்கும் தயக்கம் இன்றி செலவு செய்கிறார்கள். அதனால் தான் சில நேரங்களில் பணம் அவர்களிடம் நிலைக்காது.