கார்த்திகை தீபம்: ரொமான்ஸ் மோடில் கார்த்திக்.. விவாகரத்து கேட்ட மீனாட்சி, ஆனந்த் கொடுத்த அதிர்ச்சி..!!

Karthigai Deepam Today's Episode Update: ரொமான்ஸ் மோடில் கார்த்திக்.. விவாகரத்து கேட்ட மீனாட்சி, ஆனந்த் கொடுத்த அதிர்ச்சி - கார்த்திகை தீபம் இன்றைய எபிசோட் அப்டேட்

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : May 8, 2024, 03:34 PM IST
  • கார்த்திகை தீபம் இன்றைய எபிசோட் அப்டேட்
  • ரொமான்ஸ் மோடில் கார்த்திக்.
  • ஜீ தமிழ் தொலைக்காட்சியின் பிரபலமான சீரியல் கார்த்திகை தீபம்.
கார்த்திகை தீபம்: ரொமான்ஸ் மோடில் கார்த்திக்.. விவாகரத்து கேட்ட மீனாட்சி, ஆனந்த் கொடுத்த அதிர்ச்சி..!! title=

Karthigai Deepam Today's Episode Update: தொலைக்காட்சி சீரியல்கள் நம் பலரது வாழ்வோடு பின்னிப்பிணைந்து இருக்கும் அம்சமாக உள்ளன. தினசரி தொடராக வரும் டிவி சீரியல்களுக்கும், அவற்றில் நடிக்கும் நடிகர், நடிகைகளுக்கும் சினிமா பிரபலங்களையே மிஞ்சும் அளவுக்கு கூட ரசிகர் பட்டாளம் உள்ளது. அப்படி பல ரசிகர்கள் விரும்பி பார்க்கும் சீரியல்களில் ஒன்றுதான் ‘கார்த்திகை தீபம்’ சீரியல்.

தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் தினமும் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் கார்த்திகை தீபம். இந்த சீரியலின் நேற்றைய எபிசோடில் மீனாட்சியும் மைதிலியும் சேர்ந்து முதலிரவுக்கான ஏற்பாடுகளை செய்து கொண்டிருந்த நிலையில் இன்று நடக்க போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க. 

அதாவது, அபிராமி வீட்டில் தீபாவை கலாய்த்து கொண்டே முதலிரவு ரூமை ஏற்பாடு செய்து முடித்து வைக்கின்றனர். அதன் பிறகு தீபாவை ரெடி பண்ணி ரூமிலேயே இருக்க சொல்கின்றனர். மறுபக்கம் கார்த்திக் ரம்யா கம்பெனியில் வேலை செய்து கொண்டிருக்க அவனை ஓவர் டியூட்டி பார்க்க சொல்கின்றனர். 

கார்த்திக்கும் அதே போல் வேலையை முடித்து விட்டு வீட்டிற்கு வர அவனிடம் புது துணி எல்லாம் இருக்கு, போய் ரெடியாகிட்டு வாங்க என்று மீனாட்சி சொல்ல எதுக்கு அண்ணி என்று கேட்க மேலே தீபா வெயிட் பண்ணிட்டு இருக்கா, அவ சொல்லுவா என்று கலாய்க்கின்றனர். 

இதையடுத்து கார்த்திக் மேலே வர ரூம் அலங்காரங்களை பார்த்து விட்டு இதுக்கு தான் என்னை ஓடிட்டு இருந்தார்களா? என்று தீபாவிடம் ரொமான்ஸாக பேசி விட்டு சரி ப்ரெஷ் ஆகிட்டு வரேன் என்று குளிக்க செல்கிறான். மறுநாள் லாயர் ஒருவர் வீட்டிற்கு வந்து விவாகரத்து கேட்டு அப்ளை பண்ணி இருந்தது யாரு என்று கேட்கிறார், எல்லாரும் புரியாமல் இருக்க மீனாட்சி நான் தான் என்று ஷாக் கொடுக்கிறாள். 

மேலும் படிக்க | நடிகர் கிருஷ்ணா நடிக்கும் புதிய படம்! பூஜையுடன் துவங்கிய படப்பிடிப்பு!

ஆனந்திடம் நீங்க தான் வேற கல்யாணம் பணிக்கிடீங்கல எனக்கு விவாகரத்து கொடுத்து அறுத்து விட்டுடுங்க, நான் என் வாழ்க்கையை பார்த்துக்கறேன், வேற கல்யாணம் பண்ணிக்கறேன் என்று சொல்ல ஆனந்த் கையெழுத்து போட முடியாது என்று மறுக்கிறான், இது இருந்தால் தானே ஆடுவ என்று டாகுமெண்ட்ஸை கிழித்து போடுகிறான். இப்படியான நிலையில் அடுத்து நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய கார்த்திகை தீபம் சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காண தவறாதீர்கள்.

மேலும் படிக்க | Thug Life Update: நாளை காலை 10 மணிக்கு வெளியாகிறது தக் லைஃப் அப்டேட்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News