அண்ணா சீரியல்: பால் குடத்தில் ஆசிடை கலக்கும் முத்துப்பாண்டி.. ரத்னாவுக்கு நடக்க போவது என்ன?

Anna Zee Tamil Serial Today's Update: பால் குடத்தில் ஆசிடை கலக்கும் முத்துப்பாண்டி.. ரத்னாவுக்கு நடக்க போவது என்ன? அண்ணா சீரியல் இன்றைய எபிசோட்

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : Apr 17, 2024, 02:21 PM IST
  • ஜீ தமிழ் தொலைக்காட்சியில் தினமும் இரவு 8.30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் அண்ணா.
  • அண்ணா சீரியல் இன்றைய எபிசோட் அப்டேட்.
  • ரத்னா பால் குடம் எடுக்க போகும் விஷயம் முத்துபாண்டிக்கு தெரிய வருகிறது.
அண்ணா சீரியல்: பால் குடத்தில் ஆசிடை கலக்கும் முத்துப்பாண்டி.. ரத்னாவுக்கு நடக்க போவது என்ன? title=

Anna Zee Tamil Serial Today's Update: தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் தினமும் இரவு 8.30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் அண்ணா. இந்த சீரியலின் நேற்றைய எபிசோடில் ரத்னா கல்யாணம் நல்லபடியாக நடிக்க வேண்டும் என்று வேண்டி கொண்டு பால் கொடுக்க கோவிலுக்கு வந்துள்ள நிலையில் இன்று நடக்க போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க. 

தமிழில் பல தொலைக்காட்சிகள் விதவிதமான கதையம்சங்கள் கொண்ட சீரியல்களை ஒளிப்பரப்பு வருகின்றன. அந்த வகையில், ஜீ தமிழ் தொலைக்காட்சியில்  பிரபலமான சீரியல், அண்ணா (Anna Serial). இன்று (ஏப். 17) நடக்க போவது என்ன என்பது குறித்து இதில் காணலாம்.அதாவது, இசக்கியும் பாக்கியமும் கோவிலுக்கு கிளம்ப முத்துப்பாண்டி எங்க போறீங்க என்று கேட்க இசக்கி கோவிலுக்கு என்று உளறி விடுகிறாள், எதற்கு என்று கேட்க பாக்கியம் உனக்கு ப்ரோமோஷன் கிடைக்கணும்னு தான் வேண்டிக்க போறோம் என்று சொல்ல நான் நம்ப மாட்டேன் என்று சொல்லும் அவன் நானே கோவிலில் விட்டு விடுகிறேன் என்று கூட்டி செல்கிறான். 

கோவிலில் ரத்னா பால் குடம் எடுக்க போகும் விஷயம் முத்துபாண்டிக்கு தெரிய வருகிறது, இதனால் பாலில் ஆசிடை கலந்து ரத்னா தூக்கி செல்லும் போது பானையை உடைத்து அவள் முகத்தை சிதைக்க திட்டம் போடுகிறான். பால் குடத்தில் யாருக்கும் தெரியாமல் ஆசிடையும் கலந்து விடுகிறான். 

தன்னுடன் கூட்டி வந்தவரிடம் உண்டிகோலை கொடுத்து குறி பார்த்து அடிக்க சொல்ல அவன் தடுமாற முத்துப்பாண்டி குறியை சரியாக வைத்து அடிக்கிறான். சரி நானே அடிக்கிறேன் என்று முடிவெடுத்து காத்திருக்க ரத்னா பால் குடத்தை தூக்க தயாராகிறாள். இப்படியான நிலையில் அடுத்து நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய அண்ணா சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காண தவறாதீர்கள்.

மேலும் படிக்க | வர்ஷங்களுக்கு சேஷம் படத்தின் மூலம் மீண்டும் ரீ-என்ட்ரி கொடுத்துள்ள நிவின் பாலி!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News