'தளபதி 66' படத்தில் விஜய்யுடன் இணையும் பிரபுதேவா?

'போக்கிரி' மற்றும் 'வில்லு' போன்ற தொடர்ந்து 'தளபதி 66' படத்தில் விஜய் நடனமாடும் ஒரு பாடலுக்கு பிரபுதேவா கோரியோகிராப் செய்யப்போகிறார்.   

Written by - RK Spark | Last Updated : May 21, 2022, 08:48 PM IST
  • விஜய் தற்போது வம்சி இயக்கத்தில் நடித்து வருகிறார்.
  • அடுத்த ஆண்டு பொங்கலுக்கு இப்படம் வெளிவர உள்ளது.
  • சமீபத்தில் தெலுங்கானா முதல்வரை சந்தித்து இருந்தார் விஜய்.
'தளபதி 66' படத்தில் விஜய்யுடன் இணையும் பிரபுதேவா?  title=

வம்சி பைடிப்பள்ளி இயக்கத்தில் நடிகர் விஜய் நடிக்கும் தளபதி 66 படம் குறித்த லேட்டஸ்ட் தகவல்கள் அடிக்கடி வெளியாகி ரசிகர்களை உற்சாகப்படுத்தி வருகிறது.  ஆரம்ப காலகட்டத்தில் விஜய் நடித்திருந்த துள்ளாத மனமும் துள்ளும், பூவே உனக்காக போன்ற செண்டிமெண்ட் படங்களை போன்று இந்த படம் அமையும் என்று கூறப்பட்டுள்ளது.  தமிழ் மொழியில் உருவாக்கப்படும் இந்த படமானது தெலுங்கில் மொழிமாற்றம் செய்து வெளியிடப்பட இருக்கிறது.  தில் ராஜுவின் ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தில் ராஷ்மிகா மந்தனா, பிரபு, பிரகாஷ் ராஜ், சரத்குமார் மற்றும் ஜெயசுதா ஆகியோர் நடிக்கின்றனர்.

மேலும் படிக்க | விக்ரம் படத்தை தூக்கி பிடிக்கப்போவதே சூர்யா தான் - கமல்ஹாசன்!

தற்போது இப்படம் குறித்த லேட்டஸ்ட் அப்டேட் ஒன்று வெளியாகியுள்ளது, அதாவது தளபதி 66 படத்தில் விஜய் நடனமாடும் ஒரு பாடலுக்கு பிரபுதேவா கோரியோகிராப் செய்ய இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.  ஏற்கனவே பிரபுதேவா இயக்கத்தில் விஜய் நடித்திருந்த போக்கிரி மற்றும் வில்லு போன்ற பிளாக்பஸ்டர் படங்களை இயக்கியிருந்தார், இந்த இரண்டு படங்களின் ஓப்பனிங் பாடலிலும் பிரபுதேவா தான் கோரியோகிராப் செய்திருந்தார், அவரும் விஜய்யுடன் சேர்ந்து சில ஸ்டெப்புகளை போடுவார்.  தற்போது 13 வருடங்களுக்கு பின்னர் மீண்டும் தளபதி 66 படத்தின் மூலம் விஜய்க்கு, பிரபுதேவா கோரியோகிராப் செய்யவிருக்கிறார் என்று கூறப்படுகிறது.  இந்த பாடலும் ஓப்பனிங் பாடலாக இருக்கக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது, அதே சமயம் மற்ற இரண்டு பாடல்களில் விஜய் யுடன் சேர்ந்து பிரபுதேவா நடனமாடியதை போல இந்த படத்திலும் ஆடுவாரா என்பது தெரியவில்லை.

prabhu

ஹைதராபாத்திலேயே இந்த பாடல் காட்சிப்படுத்தப்பட இருப்பதாக கூறப்படுகிறது.  இசையமைப்பாளர் தமன் இப்படத்தில் நான்குக்கும் மேற்பட்ட பாடல்களுக்கு இசையமைக்கவுள்ளார், இவர் ஏற்கனவே விஜயுடன் இணைந்து பணியாற்ற வேண்டும் என்கிற ஆசையில் இருந்தவர்.  அதனால் இப்படத்தில் இவர் இசையமைக்கும் பாடல்கள் நன்கு ஹிட் ஆகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.  ஹைதராபாத்தில் நடைபெறும் 'தளபதி 66' படத்தின் படப்பிடிப்பு ஜூன் மாத பாதியில் முடிக்கப்பட்டு, அதன் பின்னர் அடுத்தகட்ட படப்பிடிப்பிற்காக படக்குழு சென்னை திரும்பவுள்ளது.

மேலும் படிக்க | ‘Rowdy Baby’ பாடலை முடக்கிய ஹேக்கர்ஸ்?- காரணம் என்ன?!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News