மிரட்டலாக வெளியாகி இருக்கும் ஜோஜு ஜார்ஜின் ஆண்டனி ட்ரைலர்!

Antony Trailer: ஜோஷியின் இயக்கத்தில் வித்தியாசமான திரைக்கதை மற்றும் மனதை கவரும் வகையில் உருவாக்கி இருக்கும் 'ஆன்டனி' படத்தின் ட்ரெய்லர் வெளியாகி உள்ளது.    

Written by - RK Spark | Last Updated : Nov 27, 2023, 04:33 PM IST
  • ஜோஜு ஜார்ஜ் நடிக்கும் ஆண்டனி படம்.
  • கல்யாணி பிரியதர்சன், செம்பன் வினோத் நடிக்கின்றனர்.
  • இயக்குனர் ஜோஷி இந்த படத்தை இயக்கி உள்ளார்.
மிரட்டலாக வெளியாகி இருக்கும் ஜோஜு ஜார்ஜின் ஆண்டனி ட்ரைலர்! title=

பொரிஞ்சு மரியம் ஜோஸ் படத்தின் கூட்டணி மீண்டும் இரண்டாவது முறையாக இணைந்து 'ஆண்டனி' படத்தை உருவாக்கி உள்ளனர்.  இந்த படத்தின் அதிரடி டிரைலர் தற்போது வெளியாகியுள்ளது. மேலும் அனைவரிடத்திலும் ட்ரெய்லர் நல்ல விமர்சனங்களைப் பெற்றுள்ளது மற்றும் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை உருவாக்குகிறது. இப்படத்தை ஐன்ஸ்டின் சாக் பால் தயாரிக்க, ஐன்ஸ்டின் மீடியா, நெக்ஸ்டல் ஸ்டுடியோ மற்றும் அல்ட்ரா மீடியா என்டர்டெயின்மென்ட்ஸ் ஆகியவற்றின் கீழ் சுஷில்குமார் அகர்வால், ரஜத் அகர்வால், நிதின் குமார், கோகுல் வர்மா மற்றும் கிருஷ்ணராஜ் ராஜன் ஆகியோர் இணைந்து தயாரித்துள்ளனர். ராஜேஷ் வர்மா இந்த படத்திற்கு வசனம் எழுதியுள்ளார். 'ஆண்டனி' படம் மனிதர்களின் உணர்ச்சிகளை ஒருங்கிணைத்து, குடும்பப் பிணைப்புகளைத் தாண்டி ஒரு அழுத்தமான கதையை சொல்கிறது.

மேலும் படிக்க | வறுமையில் வாடும் பிரபல நடிகர்..வீடு கூட இல்லாமல் பிளாட்பார்மில் வாழும் அவலம்!

ஜோஜு ஜார்ஜ், கல்யாணி பிரியதர்சன், செம்பன் வினோத் ஜோஸ், நைலா உஷா உள்ளிட்ட நட்சத்திர நடிகர்கள் நடித்துள்ள 'ஆன்டனி' படத்தை ஐன்ஸ்டின் மீடியா, நெக்ஸ்டல் ஸ்டுடியோ மற்றும் அல்ட்ரா மீடியா என்டர்டெயின்மென்ட்ஸ் ஆகியவற்றின் கீழ் மலையாளம், இந்தி, தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய மொழிகளில் பான் இந்தியா படமாக வெளியிட திட்டமிட்டுள்ளனர். இப்படத்தின் வெளிநாட்டு உரிமையை ஃபார்ஸ் பிலிம்கோ மோஷன் பிக்சர்ஸ் வாங்கியுள்ளது. இரத்த உறவுகளை விட ஆழமான தொடர்பைக் கொண்டிருக்கும் உறவுகளை பற்றி படம் பேசுகிறது.  முன்னணி நடிகர்கள் தவிர 'ஆண்டனி' திரைப்படத்தில் விஜயராகவன், ஆஷா சரத், ஜினு ஜோசப், ஹரிபிரசாந்த், அப்பானி சரத், பினு பப்பு, சுதிர் கரமனா, ஜூவல் மேரி, ஜிஜு ஜான், பத்மராஜ் ரதீஷ், ஆர்.ஜே.ஷான், ராஜேஷ் சர்மா, சுனில் குமார், நிர்மல் பாலாழி, கராத்தே கார்த்தி, சிஜோய் வர்கீஸ், டைனி டாம் மற்றும் மனோஹரியம்மா  உள்ளிட்ட அனுபவமிக்க நடிகர்கள் உள்ளனர். கல்யாணி பிரியதர்ஷன் இதுவரை நடிக்காத புதிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

ரெனதிவ்வின் வசீகரிக்கும் ஒளிப்பதிவுடன், ஜேக்ஸ் பிஜோயின் மயக்கும் இசையில், ஜோஷியின் இயக்கத்தில் ஆண்டனி படம் நேர்த்தியான மற்றும் தனித்துவமான பாணியை கொண்டுள்ளது.  ட்ரீம் பிக் ஃபிலிம்ஸ் படத்தின் விநியோகம் செய்கிறது, மேலும் சிபி ஜோஸ் சாலிசேரி தலைமை இணை இயக்குநராக பணியாற்றுகிறார், ராஜசேகர் ஆக்சன் இயக்குநராக பணியாற்றி உள்ளார். 'ஆண்டனி' திரைப்படத்தில் எடிட்டர் ஷியாம் சசிதரன் மற்றும் ஆர்.ஜே.ஷான் போன்ற திறமையான குழுவினரும் இடம்பெற்றுள்ளனர். 

திலீப் நாத்தின் கலை இயக்கத்தை மேற்கொள்ள, பிரவீன் வர்மா ஆடை வடிவமைப்பாளராகவும், தீபக் பரமேஸ்வரன் தயாரிப்பு நிர்வாகத்தை மேற்கொள்கிறார். மேலும் ரோனெக்ஸ் சேவியர் மேக்கப், அனூப் பி சாக்கோவின் ஸ்டில்களும், விஷ்ணு கோவிந்தின் சிறந்த ஒலிப்பதிவும் மற்றும் படத்தின் பிஆர்ஓவாக சபரி பணியாற்றுகிறார். படத்தின் சந்தைப்படுத்தல் மற்றும் தகவல் தொடர்புகளை சங்கீதா ஜனச்சந்திரன் மற்றும் கேரளாவில் அப்ஸ்குராவால் கையாளப்படுகிறது. வரும் டிசம்பர் 1 முதல் படம் திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

மேலும் படிக்க | பருத்திவீரன் பஞ்சாயத்து: கொளுத்திப்போட்ட ஞானவேல் ராஜா, கொந்தளித்த நடிகர்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News