வாழ்க்கை சொர்க்கமாக இருக்க... திருமணத்திற்கு முன் கேட்க வேண்டிய சில கேள்விகள்..!!

திருமணம் என்பது நம் வாழ்வின் மிக முக்கிய நிகழ்வு. எனவே, இந்த முடிவை எடுப்பதற்கு முன், நீங்கள் சில முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். திருமண உறவு தொடர்பாக அவசரமாக முடிவு எடுத்தால், அது உங்கள் வாழ்க்கையை நரகமாக்கும். 

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : May 20, 2024, 03:37 PM IST
வாழ்க்கை சொர்க்கமாக இருக்க... திருமணத்திற்கு முன் கேட்க வேண்டிய சில கேள்விகள்..!! title=

திருமணம் என்பது நம் வாழ்வின் மிக முக்கிய நிகழ்வு. எனவே, இந்த முடிவை எடுப்பதற்கு முன், நீங்கள் சில முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். திருமண உறவு தொடர்பாக அவசரமாக முடிவு எடுத்தால், அது உங்கள் வாழ்க்கையை நரகமாக்கும். சரியான துணையைத் தேர்ந்தெடுத்தால், திருமணத்திற்குப் பிறகு வாழ்க்கை இன்னும் அழகாக மாறும். நீங்கள் சரியான துணையைத் தேர்ந்தெடுத்திருந்தால், வாழ்க்கையில் நீங்கள் சந்திக்கும் நல்ல காலம் மட்டுமல்லாது கெட்ட காலத்தையும் எளிதாகக் கடக்க முடியும். எனவே, திருமணத்திற்கு முன் சில விஷயங்களை தெளிவுபடுத்துவது மிகவும் அவசியம். அந்த விஷயங்கள் என்னவென்று தெரிந்து கொள்வோம்..

திருமணத்தில் உங்கள் விருப்பம்

காதல் திருமணங்கள் பெருகி விட்டது என்றாலும், நம் நாட்டில், இன்னும் பெரும்பாலான திருமணங்கள் நிச்சயிக்கப்பட்ட திருமணங்கள் தான். திருமண முடிவுகளில் குடும்ப உறுப்பினர்களின் குறுக்கீடு அதிகம். சில இடங்களில் இந்த குறுக்கீடு வரம்பு மீறுவதையும் காணலாம். இந்த பிரச்சினையை ஆண்களை விட பெண்கள் அதிகம் சந்திக்கின்றனர். எனவே, திருமணத்திற்கு முன், இந்த முடிவு உண்மையில் விருப்பப்படி எடுக்கப்படுகிறதா இல்லையா என்பதை உங்கள் துணையிடம் கேட்க வேண்டும்.

உங்கள் தொழில் திட்டம் குறித்த தகவல்

திருமணத்திற்குப் பிறகு உங்கள் இருவரின் எதிர்காலமும் ஒருவரையொருவர் நேரடியாக சார்ந்திருக்க கூடியது. எனவே, திருமணத்திற்கு முன், ஒருவர் தங்கள் துணை எதிர்கால வாழ்க்கைத் திட்டங்களைப் பற்றி நிச்சயமாகக் கேட்க வேண்டும். அதே நேரத்தில், உங்கள் இருவரின் வாழ்க்கைத் திட்டங்கள் ஒன்றோடு ஒன்று சரியாக பொருந்தாது என்றால், நீங்கள் உங்கள் திட்டங்களை மாற்ற வேண்டும் அல்லது உங்கள் துணையை மாற்ற வேண்டும். இந்தத் தேர்வு உங்களுக்கு எது முக்கியம் என்பதைப் பொறுத்தது.

மேலும் படிக்க | உங்கள் குழந்தையை ஏசி அறையில் தூங்க வைப்பீங்களா? இந்த விஷயத்தில் கவனம்!

குடும்பக் கட்டுப்பாடு பற்றிய திட்டம்

திருமணத்திற்கு முன் உங்கள் துணையுடன் குடும்பக் கட்டுப்பாடு பற்றி விவாதிக்க வேண்டும். இன்று திருமணத்திற்குப் பிறகு குடும்பக் கட்டுப்பாடு குறித்து இருவருக்குள்ளும் வெவ்வேறு கருத்துக்கள் வெளிவருவது அவர்களின் உறவில் கசப்பை ஏற்படுத்துவதை அடிக்கடி பார்க்க முடிகிறது.

பொருளாதார அம்சம்

மாறிவரும் இன்றைய காலகட்டத்தில், ஒருவர் மற்றவரின் விருப்பு வெறுப்புகள் மற்றும் ஒருவரின் நிதி நிலை குறித்தும் கவனமாக இருக்க வேண்டும். நீங்கள் மகிழ்ச்சியான திருமண வாழ்க்கையை வாழ விரும்பினால், உங்கள் தேவைகளுக்கு ஏற்ப நிதி ரீதியாகவும் வலுவாக இருக்க வேண்டும்.

விருப்பு வெறுப்புகளை ஆராய்தல்

உங்கள் கூட்டாளியின் விருப்பு வெறுப்புகள் பற்றி நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும். அதாவது உங்கள் துணை என்ன சாப்பிட விரும்புகிறார்? அவர் சைவமா அல்லது அசைவமா? இது தவிர, அவர் எங்கு பயணம் செய்ய விரும்புகிறார். இதன் மூலம் அவர்களின் விருப்பு வெறுப்புகளை எளிதில் புரிந்து கொள்ள முடியும்.

மேலும் படிக்க | தாய்லாந்திற்கு சுற்றுலா செல்ல திட்டமா? விசா தொடர்பான விதிகளில் மாற்றங்கள்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News