அனுஷ்காவின் பளபள தேகத்திற்கு இதுதான் காரணமா..? வெளியானது ஸ்கின் கேர் சீக்ரட்!

Anushka Shetty Beauty Secrets: தமிழ் மற்றும் தெலுங்கு மொழி படங்களில் நடித்து பிரபலமானவர், அனுஷ்கா. இவர், தன் முக அழகையும் சரும அழகையும் பாதுகாக்க சில வழிமுறைகளை பின்பற்றுகிறார்.   

Written by - Yuvashree | Last Updated : Aug 16, 2023, 07:39 PM IST
  • பிரபல நடிகை அனுஷ்கா தனது சருமத்தை பாதுகாக்க பல விஷயங்களை செய்கிறார்.
  • அதில் ஒன்று, நீர்சத்தை உடலில் தக்கவைத்துகொள்வது.
  • அவரது சரும பொலிவிற்கு இன்னும் பல சீக்ரெட்ஸ் இருக்கின்றன.
அனுஷ்காவின் பளபள தேகத்திற்கு இதுதான் காரணமா..? வெளியானது ஸ்கின் கேர் சீக்ரட்!  title=

இயல்பான பக்கத்து வீட்டு பெண்ணின் கதாப்பாத்திரமாக இருந்தாலும், ஒரு நாட்டிற்கே இளவரசி எனும் கதாப்பாத்திரமாக இருந்தாலும் அந்த கதாப்பாத்திரத்தை அசால்டாக செய்து கொடுப்பவர், அனுஷ்கா ஷெட்டி. திகில் படங்களான அருந்ததி, பாகமதி போன்ற படங்களிலும் மாஸ் காட்டியிருப்பார், கிட்டத்தட்ட 17 ஆண்டுகளுக்கும் மேலாக திரையுலகில் இருக்கும் இவருக்கு ரசிகர்கள் பல லட்சம் பேர் உள்ளனர். அன்றிலிருந்து இன்று வரை அவரது நடிப்பின் அழகும் சருமத்தின் பொலிவும் மாறாமல் உள்ளது. தனது சருமம் மற்றும் உடல் அழகை அனுஷ்கா பராமறிப்பது எப்படி..? இதோ சில டிப்ஸ்!

சரும பொலிவு: 

அனுஷ்கா, தன் சருமத்தை இளமையாகவும் பொலிவாகவும் வைத்திருக்க தினமும் அதிக அளவில் தண்ணீர் பருகுவாராம். நீர்சத்தை உடலில் வைத்துக்கொண்டால் எந்த கிருமிகளும் நோய்களூம் உடலை அண்டாது என்பது இவருடைய நம்பிக்கை. அதனால், தன் சருமத்தை பொலிவு இழக்காமல் வைத்திருக்க தேவையான அளவு தண்ணீரை எடுத்துக்கொள்வார். இது, உள்ளூர இருந்து இவரது சருமத்திற்கு பொலிவு கொடுக்க உதவுகிறது. 

மேலும் படிக்க | இதை மட்டும் செஞ்சீங்கனா உங்களுக்கு பண சுதந்திரம் கிடைச்சிரும்

தேன்:

அனுஷ்கா ஆரோக்கியமான வாழ்க்கை முறையை பின்பற்றும் பிரபலங்களுள் ஒருவர். இவர், அழகு என்பது உள்ளுக்குள் இருந்தால்தான் வெளியில் வரும் என்பதை உறுதியாக நம்புவார். அதனால் தான் என்ன சாப்பிடுகிறோம், எப்படி சாப்பிடுகிறோம் என்பதையும் பார்த்துக்கொள்வார். இவரது உணவில் தினசரி பிரட் மற்றும் தேன் இருக்குமாம். இது, அனுஷ்காவின் அழகு ரகசியங்களுள் ஒன்ரு. தேனில் ஆண்டி ஆக்சிடன்ஸ் அதிகமாக இருக்கிறது. இது, அவரது சருமப்பொலிவையும் அழகையும் கெடாமல் பார்த்துக்கொள்ளும். 

அதிக மேக்-அப்பிற்கு நோ: 

அனுஷ்கா, அதிகமாக மேக் அப் போடுவதை விரும்பாதவர். பட விழாக்கள் அல்லது ஷூட்டிங் சமயங்கள் தவிர எப்போதும் இயல்பான முகத்துடனேயே இருப்பாராம். சில சமயங்களில் படப்பிடிப்பின் போது கூட மிகவும் குறைவான அளவு மேக்-அப்பையே உபயோகிப்பாராம். மேக்-அப் இல்லாமல் இருக்கும் போதுதான் தனது சருமம் மூச்சு விடுவது போல உணருவதாக அவரே சில இடங்களில் தெரிவித்திருக்கிறார். அழகு சாதன பொருட்களை உபயோகிக்காமல் இருக்கும் போதுதான் முகத்தில் உள்ள போர்ஸ் (Pores) திறந்து உள்ளே இருக்கும் அழுக்கை வெளியேற்றுமாம். 

ஃபேஸ் மாஸ்க்: 

அனுஷ்கா, வீட்டிலேயே தயாரித்த சில மாஸ்க்களையும் உபயோகிப்பாராம். வீட்டில் சமைப்பதற்கு என்று வைத்திருக்கும் பொருட்களை வைத்து கூட தனது சருமத்தை பொலிவுரச்செய்வதில் வல்லவராம் அனுஷ்கா. எலுமிச்சை சாறு மற்றும் சிரிய அளவு அரிசி மாவை வைத்து 5 நிமிடத்தில் ஃபேஸ் பேக் செய்து அதை தனது முகத்தில் தடவிக்கொள்வாராம். இதனால் தன் முகம் பொலிவுருவதாக அனுஷ்கா நம்புகிறார். மேலும், உடலில் கருப்பாக இருக்கும் இடங்களான கால் முட்டி, கை முட்டி போன்ற இடங்களிலும் அந்த பேக்கை தடவுவாராம். இதுவும் அவருக்கு நல்ல பலனை அளித்துள்ளது. 

சிகை அழகு:

சரும அழகிற்கு அனுஷ்கா எந்த அளவிற்கு முக்கியத்துவம் கொடுக்கிறாரோ அதே அளவிற்கு தனது சிகை அழகையும் முக்கியமாக கருதுகிறார். இவரது முடி, நீளமாக அடர்த்தியாக இருப்பதை நாம் பார்த்ததுண்டு. இதற்கு பின்னால் இருக்கும் ரகசியம் என்ன தெரியுமா? அவர் வீட்டில் இருக்கும் போது நேரம் கிடைக்கும் போதெல்லாம் கண்டிப்பாக தலைக்கு எண்ணெய் வைப்பாராம். அதுவும் ஒரு எண்ணெய் அல்ல, பல எண்ணெய்களை தேய்த்து மசாஜ் செய்வாராம். அந்த எண்ணெய்களை காய வைத்து தலையில் தேய்ப்பாராம். இதை பின்பற்றினால் கண்டிப்பாக கை மேல் பலன் கிடைக்குமாம். 

மேலும் படிக்க | மிஷன் 3000 மெட்ரிக் டன்... அலுமினியம் ரயில் பெட்டிகள்... ரயில்வேயின் அசத்தல் திட்டம்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News