Anti-Valentine’s Week: காதலுக்கு பின் என்ன? மோதல் தான்! இது காதலர் எதிர்ப்பு வார சோகம்!

Lovers Observe Sad In Anti-Valentine’s Week: காதலை கொண்டாடும் வாரம் முடிந்த பிறகு, காதலுக்கு சோகக்கீதம் பாடும் காதல் எதிர்ப்பு வாரத்தை சோகத்துடன் அனுசரிக்கும் ‘என்ன கொடுமை சார் இது?’ வாரம்...  

Written by - Malathi Tamilselvan | Last Updated : Feb 16, 2024, 08:19 AM IST
  • காதலர் தினம் முடிந்த அடுத்த நாளில் இருந்து காதலர் எதிர்ப்பு வாரம்
  • காதலர் எதிர்ப்பு வாரத்தில் அடிதடி உதை குத்து
  • டிஷ்யூம் டிஷ்யூம்! இது காதலர்களுக்கு சோக வாரம்
Anti-Valentine’s Week: காதலுக்கு பின் என்ன? மோதல் தான்! இது காதலர் எதிர்ப்பு வார சோகம்! title=

காதலுக்கு பின் என்ன மோதல் தானே? காதலர் தினத்தை இனிப்பாக கொண்டாடிய பிறகு, டிஷ்யூம் டிஷ்யூம் என அடிதடி போட்டுக் கொள்ளும் காதலர்களுக்கான வாரம் இது. காதலை கொண்டாடும் வாரத்திற்கு அடுத்த நாளே காதல் உணர்வுக்கு எதிரானநாள் அனுசரிக்கப்படுகிறது. காதலர் எதிர்ப்பு வாரத்தில் வரும் நாட்களைப் பற்றித் தெரிந்துக் கொள்வோம். ஸ்லாப் டே முதல் கிக் டே வரை, 7 காதல் எதிர்ப்பு நாட்களின் பட்டியல் இது

காதலர் வாரம்

நிபந்தனையற்ற அன்பை வெளிப்படுத்தும் பிப்ரவரி 14 காதலர் தினத்தை கொண்டாடும் வாரத்தில் அட்டைகள், ரோஜா மலர்கள் பரிசுகள், முத்தங்கள் என காதலை பொக்கிஷமாக மாற்றும் நேர்மறையான தினத்தைக் கொண்டாடினால், காதல் நிறைந்த வாரம் முடிவடையும்போது, காதலர் எதிர்ப்பு வாரம் தொடங்குகிறது.

காதல் உணர்வுக்கு எதிரான இந்த நாள் தனிமையில் இருப்பவர்கள் அல்லது புதிய உறவுகளில் இருப்பவர்கள் இந்த வாரத்தைக் கொண்டாடுகின்றனர். இது வெளிப்படையாக பலராலும் பேசப்படுவது இல்லை, கொண்டாடப்படுவது இல்லை என்றாலும் இப்படி ஒரு வாரம்  இருப்பதே பலருக்கு தெரியாது. 

காதல் எதிர்ப்பு வாரம்

பிப்ரவரி 15 அன்று தொடங்கி பிப்ரவரி 21 வரை தொடருக்கும் காதல் எதிர்ப்பு வாரத்தில் ஸ்லாப் டே, கிக் டே, பெர்ஃப்யூம் டே, ஊர்சுற்றும் தினம், கன்ஃபெஷன் டே, மிஸ்ஸிங் டே, பிரேக்-அப் டே (Slap Day, Kick Day, Perfume Day, flirt day, confession day, missing Day, Breakup Day) என 7 நாட்கள் அனுசரிக்கப்படுகின்றன.

ஸ்லாப் டே

காதலர் எதிர்ப்பு வாரம் ஸ்லாப் தினத்துடன் தொடங்குகிறது. ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி 15 அன்று ஸ்லாப் டே அனுசரிக்கப்படுகிறது. இந்த நாள் இதயம் உடைந்த அனைவரும், தங்கள் முன்னாள் காதல் துணை கொடுத்த வலியை ’அறைந்து வெளியேற்றும்’ தினமாக அனுசரிக்கப்படுகிறது.

மேலும் படிக்க | Valentine Day: காதலர் தினத்தை மறக்கமுடியாத நாளாக மாற்ற யோசனைகள்

கிக் டே 

ஸ்லாப் டேக்குப் பிறகு, பட்டியலில் அடுத்த நாள்,பிப்ரவரி 16 அன்று கிக் டே அன்று, முன்னாள் காதலை நினைத்து வருத்தப்படுவதை நிறுத்திவிட்டு, முன்னாள் காதலின் நினைவுகளை வாழ்க்கையில் இருந்து உதைத்து துரத்தி வெளியேற்ற அனுமதிக்கிறது. இந்த நாள் அன்று, அவர்கள் நினைவாக நீங்கள் வைத்திருக்கும் பரிசுகள் அல்லது நினைவுகள் அனைத்தையும் அகற்றுவதற்கான நாளாக அனுசரிக்கப்படுகிறது கிக் டே.

ஃபெர்ப்யூம் டே

காதலர் எதிர்ப்பு வாரத்தின் மூன்றாவது நாள் பெர்ஃப்யூம் தினமாகும், பிப்ரவரி 17 அன்று, உங்களைப் பற்றி மட்டுமே கவனம் செலுத்த வேண்டும் என்பதை உணர்த்தும் தினம் இது. மனதில் அலைபாயும் சோக நினைவுகளை வலிகளை அகற்றிவிட்டு, புத்துணர்வுடன் வாழ, வாசனை திரவியத்தை பயன்படுத்தும் தினமாக அனுசரிப்படுகிறது. கடந்தகால எதிர்மறை எண்ணங்களை அகற்றும் தினம் இது.

ஊர்சுற்றல் நாள்

காதலர்களுக்கு எதிரான வாரத்தின் நான்காவது நாளான பிப்ரவரி 18 அன்று ஊர்சுற்றல் தினமாகும் (flirt day). இந்த நாள் அனைத்து ஒற்றையர்களும் வாழ்க்கையில் முன்னேறிச் செல்வதற்கும், வாய்ப்புகளைப் பெறுவதற்கும், தாங்கள் நீண்டகாலமாக விரும்பிக்கொண்டிருந்த நபரை அணுகுவதற்குமான நாள் ஆகும். பழைய நினைவுகளில் இருந்து வெளிவந்து, நீங்கள் விரும்பும் ஒருவரிடம் உங்கள் உணர்வுகளை தெரிவிக்கவும்.

மேலும் படிக்க | ராதிகா-சரத்குமார் இடையே காதல் மலர்ந்தது எப்படி? அவர்களே சொல்லும் கதை..

ஒப்புதல் நாள் (மன்னிப்பு கேட்கும் நாள் - Confession Day)

காதலர் எதிர்ப்பு வாரத்தின் ஐந்தாவது நாள். இது பிப்ரவரி 19 அன்று, நீங்கள் விரும்பும் ஒருவரிடம் அல்லது கடந்த காலத்தில் நீங்கள் புண்படுத்தியவர்களிடம் உங்கள் உணர்வுகளை ஒப்புக்கொள்ளும் நாளாக அனுசரிக்கப்படுகிறது. உணர்வுகளுக்கு மன்னிப்பு கேட்பது ஒருவரை சிறந்த நபராக மாற்றும் என்பதன் அடிப்படையில் அனுசரிக்கப்படும் நாள் இது.

மிஸ்ஸிங் டே

காதலர் எதிர்ப்பு வாரத்தின் ஆறாவது நாள் மிஸ்ஸிங் டே (missing Day) பிப்ரவரி 20 அன்று அனுசரிக்கப்படுகிறது. தங்கள் முன்னாள் காதலரை பிரிந்ததில் எப்படி உணர்கிறார்கள் என்பதை அவர்களிடம் சொல்ல விரும்புபவர்கள் இந்த நாளை அனுசரிக்கின்றனர்.

பிரேக்அப் டே

காதலர் எதிர்ப்பு வாரத்தின் கடைசி நாளான பிப்ரவரி 21 அன்று பிரேக்அப் டே (Breakup Day) அனுசரிக்கப்படுகிறது. இந்த நாள் நீங்கள் நீண்டகாலமாக மனதை சோகத்தில் ஆழ்த்தியிருக்கும், வேதனையான முடிவுக்கு கொண்டு வர அனுமதிக்கும் நாள் பிரேக்-அப் டே.

மேலும் படிக்க | Aishwarya Rajinikanth: “Why This Kolaveri பாடலால் 3 படத்திற்கு பாதிப்புதான்” ஐஸ்வர்யா ரஜினிகாந்த் பளிச்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News