விமான பணியாளர்களிடம் சண்டையிட்ட பயணி! புறப்பட்ட உடனேயே தரையிங்கிய விமானம்!

டெல்லி விமான நிலையத்தில் தரையிறங்கியதும், பரபரப்பு ஏற்படுத்திய பயணி போலீஸாரிடம் ஒப்படைக்கப்பட்டார். போலீசார் எப்ஐஆர் பதிவு செய்து மேல் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : Apr 10, 2023, 01:53 PM IST
  • விமானக் குழு பணியாளர்கள் இருவருக்கு உடல் காயம் ஏற்பட்டது.
  • விமானி-இன்-கமாண்ட் விமானத்தை டெல்லிக்குத் திரும்ப முடிவு செய்தார்.
  • தரையிறங்கிய பிறகு, பயணி பாதுகாப்பு அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டார்.
விமான பணியாளர்களிடம் சண்டையிட்ட பயணி! புறப்பட்ட உடனேயே தரையிங்கிய விமானம்! title=

ஏர் இந்தியா விமானம்: டெல்லியில் இருந்து லண்டன் செல்லும் ஏர் இந்தியா விமானத்தில் பயணி ஒருவர் சண்டையிட்டு ஏற்படுத்தினார். விமானம் டெல்லிக்கு திரும்பும் அளவுக்கு சண்டை மூண்டு பயணம் பாதிக்கப்பட்டது. டெல்லி விமான நிலையத்தில் விமான நிறுவனம் போலீசில் புகார் அளித்த நிலையில், பரபரப்பு ஏற்படுத்திய பயணியை போலீசார் கைது செய்தனர். ஏர் இந்தியா விமானம் திங்கள்கிழமை (ஏப்ரல் 10) காலை 6.35 மணிக்கு டெல்லியில் இருந்து லண்டனுக்கு புறப்பட்டது. சிறிது நேரத்தில், பயணி ஒருவர் விமானத்தில் சண்டையிட்டார். விமானக் குழுவினரும் தாக்கப்பட்டனர். இதில் இருவர் காயமடைந்தனர். பயணி தனது கட்டுப்பாட்டை இழந்ததைக் கண்ட விமானி, விமானத்தை மீண்டும் டெல்லிக்கு கொண்டு செல்ல முடிவு செய்தார்.

டெல்லி விமான நிலையத்தில் தரையிறங்கியதும், பரபரப்பு ஏற்படுத்திய விமான பயணி போலீஸாரிடம் ஒப்படைக்கப்பட்டார். போலீசார் எப்ஐஆர் பதிவு செய்து மேல் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். விமானம் புறப்படும் நேரம் மாற்றியமைக்கப்பட்டுள்ளது. திங்கட்கிழமை மதியம் விமானம் புறப்படுகிறது.

மேலும் படிக்க | 15 பயணிகளை விட்டுவிட்டு பறந்த விஜயவாடா - குவைத் விமானம்!

ஏர் இந்தியா  வெளியிட்ட அறிக்கை

ஏர் இந்தியா வெளியிட்டுள்ள அறிக்கையில், "ஏப்ரல் 10, 2023 அன்று ஏர் இந்தியா விமானம் AI-111 டெல்லி-லண்டன் ஹீத்ரோ  விமானத்தில், ஒரு பயணியின் கடுமையான கட்டுக்கடங்காத நடத்தை காரணமாக புறப்பட்ட உடனேயே டெல்லி திரும்பியது. வாய்மொழி மற்றும் எழுத்துப்பூர்வ எச்சரிக்கைகள் இருந்தபோதிலும், பயணி தொடர்ந்து சண்டையிட்டு குழப்பத்தை ஏற்படுத்தினார். விமானக் குழு பணியாளர்கள் இருவருக்கு உடல் காயம் ஏற்பட்டது. விமானி-இன்-கமாண்ட்  விமானத்தை டெல்லிக்குத் திரும்ப முடிவு செய்தார், தரையிறங்கிய பிறகு, பயணி பாதுகாப்பு அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டார்."

மேலும், காவல்துறையில் எப்ஐஆர் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. ஏர் இந்தியா விமானத்தில் உள்ள அனைவரின் பாதுகாப்பு, மதிப்பு மற்றும் கண்ணியம் எங்களுக்கு முக்கியம். பாதிக்கப்பட்ட விமான குழுவினருக்கு அனைத்து உதவிகளையும் செய்து வருகிறோம். பயணிகளுக்கு ஏற்பட்ட சிரமத்திற்கு வருந்துகிறோம். இன்று மதியம் விமான நேரம் மாற்றப்பட்டு மீண்டும் திட்டமிடப்பட்டுள்ளது." என ஏர் இந்தியா நிறுவனம் கூறியுள்ளது. 

மேலும் படிக்க |  IndiGo flight: தில்லி - தோஹா இண்டிகோ விமானத்தில் பயணித்த பயணி ஒருவர் மரணம்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

Trending News