கடுகு எண்ணெயுடன் இந்த 3 பொருட்கள் கூட்டு சேர்ந்தால்? நரைமுடி கருங்கூந்தலாகும்!

Oil For Grey Hair: நரை முடியை கருப்பாக்க கடுகு எண்ணெயில் இந்த 3 பொருட்களை கலந்து மசாஜ் செய்து வாருங்கள்! சில நாட்களில் பலன் கிடைக்கும்...

Written by - Malathi Tamilselvan | Last Updated : Nov 28, 2023, 12:23 PM IST
  • நரை முடியை கருப்பாக்கும் கடுகு எண்ணெய்
  • கடுகு எண்ணெயுடன் கூட்டணி வைத்தால் முடியை கருப்பாக்கும் பொருட்கள்
  • தலைமுடி மசாஜ் நன்மைகள்
கடுகு எண்ணெயுடன் இந்த 3 பொருட்கள் கூட்டு சேர்ந்தால்? நரைமுடி கருங்கூந்தலாகும்! title=

முடியை கருப்பாக்கும் கடுகு எண்ணெய்: அதிகரித்து வரும் மாசுபாடு மற்றும் சத்து குறைந்த உணவுக் கோளாறுகள் காரணமாக, பல பிரச்சனைகளை எதிர்கொள்ள வேண்டியுள்ளது. இந்த பிரச்சனைகளில் முடி உதிர்தல் மற்றும் நரைத்தல் ஆகியவை முக்கியமானவைகளாக இருக்கின்றன. தலைமுடியே நமது உடல் ஆரோக்கியத்தை பிரதிபலிக்கும் கண்ணாடி என்றும் சொல்வதால், இளநரை, நரைமுடிவு, முடி உதிர்தல், பொலிவிழந்த தலைமுடி என பல பிரச்சனைகள் நமது உடலின் தன்மையை வெளிக்காட்டுகின்றன.

தலைமுடி உடல் உள்ளுறுப்புகளை பிரதிபலிப்பது மட்டுமல்லாமல், தலைமுடியை ஆரோக்கியமாக பாதுகாத்தால், அது உடலின் உள்ளுறுப்புகளையும் சீர் செய்யும் என்பது ஆயுர்வேதத்தின் நம்பிக்கை. தலையில் மசாஜ் செய்வதால் முடியின் வேர் வழியாக அது ஆழ ஊடுருவிச் சென்று உடல் சூட்டைக் குறைக்கிறது.

தலை மசாஜ் செய்வதற்கு பல வகையான எண்ணெய்களைப் பயன்படுத்தினாலும், குளிர் மற்றும் பனி காலத்தில் கடுகு எண்ணெய் உங்கள் தலைமுடியை கருப்பாக்குவதில் நல்ல பலனைத் தரும். கடுகு எண்ணெயுடன் பல வகையான மூலிகைகளை சேர்த்து பயன்படுத்தலாம். இது தலைமுடியின் ஆயுளையும் ஆரோக்கியத்தையும் அதிகரிக்கும். முடியின் வேர்களை வலுப்படுத்தவும் முடியும். முடியை கருப்பாக்க கடுகு எண்ணெயை எப்படி பயன்படுத்துவது என்று பார்ப்போம்?

மேலும் படிக்க | கீல்வாதம், மூட்டுவலி, யூரிக் அமில பாதிப்பா? உருளைக்கிழங்கும் சேனைக்கிழங்கும் நல்லது

கடுகு எண்ணெயில் கறிவேப்பிலை
தலைமுடியை கருப்பாக்க, கடுகு எண்ணெயை உங்கள் தலைமுடிக்கு குறைந்தது 1 மணிநேரம் தடவவும். அதற்கு முன் இந்த சிறப்பான எண்ணையை எப்படி தயாரிப்பது என்று தெரிந்துக் கொள்வோம். ஒரு பாத்திரத்தில் கடுகு எண்ணெயை எடுத்து, அதில் சிறிது கறிவேப்பிலை சேர்த்து, சூடுபடுத்தவும்.

எண்ணெய் நன்கு சூடானதும் அடுப்பை நிறுத்திவிடவும். கைப் பொறுக்கும் சூட்டில் எண்ணெயய் வந்த பிறகு அதைக் கொண்டு தலைமுடியை மசாஜ் செய்யவும். இந்த எண்ணெயைக் கொண்டு உங்கள் தலைமுடியை தொடர்ந்து மசாஜ் செய்வது முடியை வலுவாக்குவதுடன் தலைமுடி கருப்பாக மாறலாம், இது தலைமுடிக்கு தேவையான ஊட்டச்சத்துக்களைக் கொடுப்பதுடன், புதிதாக நரைமுடி தோன்றுவது கட்டுப்படும்.

கடுகு எண்ணெய் மற்றும் எலுமிச்சை சாறு
நரைத்த முடியை கருப்பாக்க கடுகு எண்ணெய் மற்றும் எலுமிச்சை சாறு கலந்து தடவவும். முதலில் கடுகு எண்ணெய் எடுத்துக்கொண்டு, அதில் ஒரு எலுமிச்சம் பழத்தின் சாற்றை சேர்த்து கலந்து கொள்ளவும். அதன் பிறகு, இந்த ஹேர் பேக்கை தலைமுடியில் தடவவும்.

முடியில் சுமார் 30 நிமிடங்கள் வைத்திருந்தால், தலைமுடிக்கு முழுமையான ஊட்டச்சத்து கிடைக்கும், இது முடியை மென்மையாகவும் அடர்த்தியாகவும் மாற்றும். மேலும் இது முடியின் அழகை மேம்படுத்தும். கடுகு எண்ணெயில் ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள், இது வைட்டமின் ஈ மற்றும் தாதுக்கள் போன்ற ஊட்டச்சத்துக்களையும் கொண்டுள்ளது, இது உங்கள் தலைமுடியை அடர்த்தியாகவும், கருப்பாகவும், வலுவாகவும் மாற்றும். 

மேலும் படிக்க | Hair Care Tips: இளவயதிலேயே நரை முடியா? இந்த காய் இருந்தால், நோ டென்ஷன்

கடுகு எண்ணெய் + நெல்லிக்காய்

நெல்லிக்காய் சாறு மற்றும் கடுகு எண்ணெய், முடியை கருப்பாக்குவதில் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இந்த கலவை பொடுகு பிரச்சனையை குறைக்கும். கடுகு எண்ணெயில் 2 முதல் 3 ஸ்பூன் நெல்லிக்காய் சாறு சேர்த்து, உங்கள் தலைமுடியில் மெதுவாக மசாஜ் செய்யவும். இந்த கலவையை தொடர்ந்து பயன்படுத்துவதன் மூலம் உங்கள் தலைமுடி கருப்பாகும். 

(பொறுப்பு துறப்பு: தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே எழுதப்பட்ட கட்டுரை இது. இங்கு குறிப்பிட்டுள்ளவற்றை பின்பற்றுவதற்கு முன் மருத்துவ ஆலோசனையைப் பெறவும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)

மேலும் படிக்க | Hair Care Tips: கோடையில் கூந்தலை பராமரிக்க கூல் டிப்ஸ் இதோ

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News