Uric Acid பிரச்சனை இருக்கா? இரவில் இந்த உணவுகளை கண்டிப்பா சாப்பிடாதீங்க

Uric Acid:  இரவு உணவில் எந்தெந்த உணவுகள் யூரிக் அமிலத்தின் அளவை விரைவாக அதிகரிக்கின்றன என்பதை இந்த பதிவில் அறிந்து கொள்வோம். இந்த உணவுகளை தினசரி இரவு உணவில் இருந்து தவிர்க்க வேண்டும்.

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Oct 29, 2022, 05:46 PM IST
  • நீங்கள் அசைவ உணவுகளை அதிகமாக உட்கொண்டால், யூரிக் அமில அளவு வேகமாக அதிகரிக்கும் அபாயம் உள்ளது.
  • அசைவ உணவில் பியூரின் அளவு அதிகம்.
  • இரவு உணவில் சில காய்கறிகளை உட்கொள்வது பிரச்சனையை அதிகரிக்கும்.
Uric Acid பிரச்சனை இருக்கா? இரவில் இந்த உணவுகளை கண்டிப்பா சாப்பிடாதீங்க title=

கீல்வாதம் என்பது மூட்டுவலியின் ஒரு வலி மிகுந்த வடிவமாகும். இது இரத்தத்தில் யூரிக் அமிலத்தின் அளவு அதிகமாகும்போது ஏற்படும். இரத்தத்தில் யூரிக் அமிலத்தின் அளவு அதிகரிப்பதால், அது மூட்டுகளில் படிகங்கள் வடிவில் குவிந்து வலியை ஏற்படுத்துகிறது. பியூரின் எனப்படும் ரசாயனங்களை உடல் உடைக்கும்போது யூரிக் அமிலம் உருவாகிறது. பியூரின்கள் ஏற்கனவே உடலில் இருக்கும். அவை சில உணவுகளிலும் காணப்படுகின்றன. பொதுவாக, யூரிக் அமிலம் சிறுநீர் வழியாக உடலில் இருந்து வெளியேறுகிறது. ஆனால் சிறுநீரகம் உடலில் இருந்து இந்த நச்சுகளை அகற்ற முடியாமல் போகும்போது, ​​​​அது மூட்டுகளில் படிகங்கள் வடிவில் குவிக்கத் தொடங்குகிறது.

அதிகப்படியான புரதத்தை உட்கொள்வது யூரிக் அமிலம் உருவாகும் அபாயத்தை அதிகரிக்கும். யூரிக் அமிலம் என்பது உடலால் உருவாக்கப்பட்ட நச்சுகள் ஆகும். இது அனைவரின் உடலிலும் உருவாகிறது. நீங்கள் அசைவ உணவுகளை அதிகமாக உட்கொண்டால், யூரிக் அமில அளவு வேகமாக அதிகரிக்கும் அபாயம் உள்ளது. அசைவ உணவில் பியூரின் அளவு அதிகம். இரவு உணவில் பியூரின்கள் நிறைந்த அசைவ உணவுகள் யூரிக் அமிலத்தின் அளவை வேகமாக அதிகரிக்கச் செய்யும். இரவு உணவில் எந்தெந்த உணவுகள் யூரிக் அமிலத்தின் அளவை விரைவாக அதிகரிக்கின்றன என்பதை இந்த பதிவில் அறிந்து கொள்வோம். இந்த உணவுகளை தினசரி இரவு உணவில் இருந்து தவிர்க்க வேண்டும்.

ஆட்டிறைச்சியின் சில பகுதிகளைத் தவிர்க்கவும்:

அசைவம் சாப்பிட்டால், கல்லீரல், சிறுநீரகம் போன்றவற்றை சாப்பிடுவதைத் தவிர்க்கவும். இந்த உணவுகளில் அதிக அளவு பியூரின்கள் உள்ளன. இது யூரிக் அமிலத்தை விரைவாக அதிகரிக்கும். நீங்கள் அசைவ உணவுகளின் மூலம் புரதத்தை எடுத்துக் கொண்டால், யூரிக் அமிலம் அதிகரிப்பதால் சிறுநீரக கற்கள் உருவாகும் அபாயமும் அதிகரிக்கும்.

மேலும் படிக்க | Uric Acid:கால்களில் இந்த பிரச்சனை இருக்கா? யூரிக் அமிலத்தின் அளவு அதிகமாக இருக்கலாம் 

சில காய்கறிகள் இரவில் சிரமத்தை அதிகரிக்கலாம்:

இரவு உணவில் சில காய்கறிகளை உட்கொள்வது பிரச்சனையை அதிகரிக்கும். இரவு உணவில் கீரை, உருளைக்கிழங்கு, பீட்ரூட் மற்றும் கேரட் ஆகியவற்றை உட்கொள்வது உங்கள் பிரச்சனையை அதிகரிக்கும். அவற்றை உட்கொள்வதைத் தவிர்க்கவும். இந்த காய்கறிகள் யூரிக் அமிலத்தை அதிகரிப்பது மட்டுமின்றி சிறுநீரக கற்கள் உருவாகும் அபாயத்தையும் அதிகரிக்கும்.

சிவப்பு இறைச்சியை தவிர்க்கவும்:

அசைவம் சாப்பிட்டால், இரவு உணவாக மாட்டிறைச்சி, ஆட்டிறைச்சி மற்றும் பன்றி இறைச்சி சாப்பிடுவதை தவிர்க்கவும். இந்த சிவப்பு இறைச்சி உங்கள் பிரச்சனையை அதிகரிக்கும்.

கடல் உணவை தவிர்க்கவும்:

நெத்திலி, மட்டி, மத்தி மற்றும் டுனா போன்ற சில கடல் உணவுகளில் பியூரின்கள் அதிகம். கடல் உணவு ஆரோக்கியத்திற்கு மிகவும் நன்மை பயக்கும் என்றாலும், யூரிக் அமில நோயாளிகள் அவற்றைத் தவிர்க்க வேண்டும். மீனை உட்கொள்வது கீல்வாத நோயாளிகளுக்கு ஆபத்தை ஏற்படுத்தும்.

மேலும் படிக்க | Uric Acid அதிகமாக இருந்தால், அசைவ உணவு வேண்டாம்: சிறுநீரகம் செயலிழக்கும்!! 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

 

Trending News