மூளையை சுறுசுறுப்பாக்கும் நெல்லிக்காய் ஜூஸ்: தயாரிப்பது எப்படி

உங்கள் மூளை ஜெட் வேகத்தில் இயங்க ஆரோக்கிய நலன்கள் நிறைந்த நெல்லிகாய் பெரிதும் உதவும். நெல்லிக்காய் உடலில் இருந்து மூளைக்கு ரத்த ஓட்டம்  சீரான வேகத்தில் செல்ல உதவுவதால், மூளை சுறுசுறுப்பாக செயல்படுகிறது.

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : Jul 5, 2022, 06:17 PM IST
  • மூளை ஆரோக்கியம் மட்டுமின்றி கண் பார்வைத் திறனுக்கும் நெல்லிக்காய் மிகவும் அவசியம்.
  • நமது வாழ்க்கை முறை காரணமாக கண்புரை, கண் அழுத்த நோய் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகரிக்கிறது.
  • நெல்லிகாய் ஜூஸ் தயாரிக்கும் முறை.
மூளையை சுறுசுறுப்பாக்கும் நெல்லிக்காய் ஜூஸ்: தயாரிப்பது எப்படி title=

நெல்லிக்காயில் வைட்டமின்கள், நார்ச்சத்து, சோடியம், பொட்டாசியம், பாஸ்பரஸ், கால்சியம், மக்னீசியம், ஃபோலேட், நியாசின் அமினோ அமிலங்கள், தையாமின் போன்ற உடலுக்கு தேவையான அத்தியாவசிய சத்துக்கள் நிறைந்திருக்கின்றன. 

தினமும் சிறிதளவு நெல்லிக்காய் ஜூஸ் அருந்துபவர்களுக்கு மூளையை சுறுசுறுப்பாக வேலை செய்யும் என வல்லுநர்கள் கூறுகின்றனர். நெல்லிகாய் உடலிலிருந்து ரத்த ஓட்டம் மூளைக்கு சீரான வேகத்தில் செல்வதை உறுதி செய்வதால், மூளை சுறுசுறுப்பாக செயல்படுகிறது. 

நெல்லிக்காய்  நமது இரத்தத்தில் உருவாகும் ப்ரீராடிக்கல்களின் வளர்ச்சியைக் கட்டுப்படுத்தி மூளைக்கு சீரான வேகத்தில் ரத்தம் செல்வதையும் உறுதி செய்கிறது. தொடர்ந்து நெல்லிக்காய் ஜூஸ் அருந்துபவர்களுக்கு ஞாபக சக்தியும் அதிகரித்து மனம் ஒருமைப்படுகிறது. இதனால், அல்சைமர் போன்ற நோய் ஆபத்தும், மூளை வளர்ச்சி குன்றும் ஆபத்தும் பெருமளவு குறைகிறது. 

மூளை ஆரோக்கியம் மட்டுமின்றி கண் பார்வைத் திறனுக்கும் நெல்லிக்காய் மிகவும் அவசியமானதாகும்.  நாள் முழுவதும் கணிணியில் வேலை பார்ப்பவர்கள் நிச்சயம் கண ஆரோக்கியத்தில் கவனம் செலுத்த வேண்டும்.

மேலும் படிக்க | உடலில் ஆக்ஸிஜன் அளவு குறையாமல் இருக்க இந்த பழங்களை அவசியம் டயட்டில் சேர்க்கவும்

அதோடு நமது வாழ்க்கை முறை காரணமாக எதிர்காலங்களில் கண்புரை, கண் அழுத்த நோய் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகரிக்கிறது. கண்களின் ஆரோக்கியத்திற்கு சிறந்த இயற்கை உணவு நெல்லிக்காய் என்றால் மிகையில்லை. நெல்லிக்காய் ஜூஸ் தொடர்ந்து அருந்துபவர்களுக்கு கருவிழி திசுக்களின் வளர்ச்சி குறைபாடு ஏற்படும் அபாயம் நீங்கி கண்புரை ஏற்படுவதற்கான வாய்ப்புகள் வெகுவாக குறைகிறது.

அதோடு, நெல்லிக்காயில் இருக்கும் வைட்டமின் சி உடலில் தேங்கியிருக்கும் அதிகப்படியான கெட்ட கொழுப்பை கரைத்து வெளியேற்றுகிறது. உடலில் இருக்கும் புரதச்சத்தை அதிகரித்து உடல் எடையைக் கட்டுக்குள் வைக்க உதவுகிறது. 

நெல்லிகாய் ஜூஸ் தயாரிக்கும் முறை

நெல்லிக்காயை நன்கு கழுவி கொட்டையை நீக்கி விட்டு பொடியாக வெட்டி வைத்து கொள்ளவும். மிக்ஸியில் நெல்லிக்காயை போட்டு, கூடவே  இஞ்சி,  சிறிதளவு தண்ணீர் சேர்த்து அரைத்து கொள்ளவும்.

அரைத்த ஜூஸை வடிகட்டி அதில், தேன், எலுமிச்சை சாறு சேர்த்து கலந்து குடித்து வரவும். அந்த ஜூஸை மோரு கலந்தும் அருந்தலாம். நெல்லிக்காய், இஞ்சி, புதினா, கறிவேப்பிலை ஆகியவற்றை அரைத்து கோரில் கலந்து, உப்பு சேர்த்து குடிக்கலாம்.

(பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டது. அதை ஏற்றுக்கொள்வதற்கு முன், கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெறுங்கள். ZEE NEWS இதை உறுதிப்படுத்தவில்லை.)

மேலும் படிக்க | Heart Health: கெட்ட கொலஸ்ட்ராலை நீக்க இந்த மசாலாவை தினமும் உணவில் சேர்க்கவும்

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

 

Trending News