யூரிக் அமிலப் பிரச்சனை போயே போச்சு! மூட்டுவலி போயிண்டே! ஹெல்த் டிப்ஸ்

Simple Techniques To Control Uric Acid: யூரிக் அமிலம் மூட்டு வலி பிரச்சனையை அதிகப்படுத்தியது, இந்தப் பிரச்சனையில் இருந்து நீங்கள் நிவாரணம் பெற விரும்பினால், இந்த வாழ்க்கை முறையை பின்பற்றுங்கள்...

Written by - Malathi Tamilselvan | Last Updated : Jul 16, 2023, 07:18 PM IST
  • யூரிக் அமில அளவை குறைக்க சிம்பிள் வழிகள்
  • இரத்தத்தின் கழிவை குறைக்க ஹெல்த் டிப்ஸ்.
  • ரசாயனங்களை உடைக்கும்போது உடலால் உருவாக்கப்படும் பியூரின்
யூரிக் அமிலப் பிரச்சனை போயே போச்சு! மூட்டுவலி போயிண்டே! ஹெல்த் டிப்ஸ் title=

யூரிக் அமிலம் அதிகரிப்பது, இப்போது ஒரு பொதுவான பிரச்சனையாகிவிட்டது, நமது வாழ்க்கை முறை மற்றும் உணவுப் பழக்கம் இதற்கு ஒருவிதத்தில் காரணமாகிறது. இவற்றைத் தவிர்க்க, உங்கள் பழக்கங்களை மாற்றிக்கொள்ள வேண்டும்.யூரிக் அமிலம் மூட்டு வலி பிரச்சனையை அதிகப்படுத்தியது, இந்தப் பிரச்சனையில் இருந்து நீங்கள் நிவாரணம் பெற விரும்பினால், இந்த வாழ்க்கை முறையை பின்பற்றுங்கள்.

நமது உடல் மற்றும் மனக் கோளாறுகளுக்கு முக்கியக் காரணம், நாம் தவறான வாழ்க்கை முறையை வாழ்ந்து வருவது தான். எது சரி, எது தவறு என்று தெரியாமலேயே, நமது ஆரோக்கியத்தை தொடர்ந்து மோசமடையச் செய்து பல நோய்களை எதிர்கொள்கிறோம்.

நமது தவறான வாழ்க்கைமுறையால் ஏற்படும் ஒரு பிரச்சனை யூரிக் அமிலம் அதிகரிப்பது. இந்தப் பிரச்சனை அதிகரித்தால், மூட்டுகள் மற்றும் விரல்களில் படிகங்கள் உருவாகத் தொடங்கும். இதனால், மூட்டுகளில் வலி ​​மற்றும் வீக்கம் ஏற்படுகிறது. இதைத் தவிர்க்க, நீங்கள் சில தினசரி நடவடிக்கைகள் மற்றும் உணவுப் பழக்கங்களை மாற்ற வேண்டும், அதன் விளைவு சில நாட்களில் ஆக்கப்பூர்வமாக உங்கள் ஆரோக்கியத்தில் தெரியும்.

மேலும் படிக்க | அதிகப்படியான வைட்டமின் டி கூட ஆபத்தானது! அதிகமாக இருப்பதற்கான அறிகுறிகள்

யூரிக் அமிலத்தை குறைப்பதற்கான வழிகள்
எடை இழப்பு
உடல் எடை அதிகரித்தால், அதனுடன் கூடுதல் இணைப்பாக பல பிரச்சனைகளும் அழைப்பில்லாமல் வந்து சேர்கின்றன. அவற்றில் ஒன்று யூரிக் அமிலம். உங்கள் எடை சீராக இருந்தால் யூரிக் அமிலம் படிப்படியாக குறைய ஆரம்பிக்கும். ஆரோக்கியமான உணவை எடுத்து உடல் செயல்பாடுகளை அதிகரிக்கவும்.

வைட்டமின் சி உள்ள உணவுகளை உண்ணுங்கள்
யூரிக் அமிலத்தைக் கட்டுப்படுத்த வைட்டமின் சி மிகவும் முக்கியமான ஊட்டச்சத்து ஆகும். அதன் உதவியுடன், கீல்வாதத்தின் ஆபத்து பெரிதும் குறைக்கப்படுகிறது, அதே போல் இரத்தத்தில் யூரிக் அமிலத்தின் அளவு பராமரிக்கப்படுகிறது. இதற்கு ஆரஞ்சு, எலுமிச்சை, சாத்துக்குடி போன்ற விட்டமின் சி உள்ள உணவுகளை உண்ணவும். கிவி பழத்தை தவிர்த்துவிட வேண்டாம்.

மதுவைத் தவிர்க்கவும்
அதிக அளவில் மது அருந்துபவர்களுக்கு யூரிக் அமில பிரச்சனைகள் அதிகம். மது அருந்துவது சமூகக் கேடு மட்டுமல்ல, உடல் நலத்துக்கும் கேடு. அதனால்தான், மதுவின் மோகத்தை விட்டு ஒழிப்பது, உடலையும் மனதையும் மட்டுமல்ல, பணத்தையும் பாதுகாக்கும்.

குறைந்த பியூரின் உணவுகளை உண்ணுங்கள்
ப்யூரின் அதிகம் உள்ள உணவுகளை நீக்கி, உங்கள் தினசரி உணவில் குறைந்த பியூரின் உணவுகளைச் சேர்க்க வேண்டும். இது யூரிக் அமிலத்தைக் குறைக்க உதவும். குறைந்த கொழுப்புள்ள பால் பொருட்கள், பழங்கள், காய்கறிகள், முழு தானியங்கள் சாப்பிடலாம்.

இனிப்பான குளிர்பானங்களை தவிர்க்கவும்
குளிர்பானங்கள் ஆரோக்கியத்திற்கு கெடுதலை ஏற்படுத்துபவை. ருசிக்காகவும், குளிர்ச்சிக்காவும் பருகப்படும் ஒவ்வொரு கிளாஸ் குளிர்பானமும், உங்கள் யூரிக் அமிலத்தின் அளவை அதிகரிக்கும் என்பதை மனதில் வைத்துக் கொள்ளுங்கள். அதிக சர்க்கரை உள்ளடக்கம் கொண்ட குளிர்பானங்கள் ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கும் மற்றும் யூரிக் அமிலத்தை அதிகரிப்பதில் முக்கிய பங்கு வகிக்கின்றன.

(பொறுப்பு துறப்பு: உடலில் அதிக யூரிக் அமில அளவைக் குறைப்பதற்கான அறிவுரைகள் பொதுவானவை, அவற்றை மருத்துவ சிகிச்சைக்கு மாற்றாக கருதக்கூடாது. யூரிக் அமிலத்தின் அளவு அதிகமாக இருக்கும்போது மருத்துவரைச் சந்தித்து உங்களை நீங்களே பரிசோதித்துக் கொள்ளுமாறு பரிந்துரைக்கிறோம்)

மேலும் படிக்க | உனக்கு மூளை இருக்கா? நாலு பேர் கேள்வி கேட்டா, இந்த 4 விஷயத்தை சரிபார்க்கவும்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

Trending News