வைட்டமின் பி12 குறைபாட்டை நீக்க உதவும் சூப்பரான சைவ உணவுகள்

Vitamin B12 Deficiency in Vegetarians: நாம் உட்கொள்ளும் உணவு நமது உடலின் எரிபொருள் என்றே கூறலாம். நாம் சாப்பிடும் உணவு ஆரோக்கியமானதாக இருந்தால் நம் உடலும் ஆரோக்கியமாக இருக்கும். 

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Mar 13, 2024, 06:13 PM IST
  • பெரும்பாலும் சைவ உணவுகளை உட்கொள்பவர்களுக்கு வைட்டமின்களின் குறைபாடு ஏற்படுவது சகஜம்.
  • குறிப்பாக சைவ உணவை உட்கொள்பவர்களுக்கு வைட்டமின் பி12 குறைபாடு காணப்படுகிறது.
  • இது ஒரு முக்கியமான வைட்டமின் என்பதால் இதை புறக்கணிக்க முடியாது.
வைட்டமின் பி12 குறைபாட்டை நீக்க உதவும் சூப்பரான சைவ உணவுகள் title=

Vitamin B12 Deficiency in Vegetarians: சுவர் இல்லாமல் சித்திரம் எழுத முடியாது. ஆரோக்கியமான உடல் இல்லாமல் நம்மால் வாழ்க்கையை மகிழ்ச்சியாக வாழ முடியாது, நம் இலக்குகளை அடைய முடியாது, பலவித வேலைகளை செய்து அவற்றில் வெற்றி காண முடியாது. உடல் ஆரோக்கியத்தில் அதிகப்படியான கவனம் செலுத்த வேண்டியது மிக அவசியமாகும். உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள ஒழுங்கான வாழ்க்கை முறை, ஆரோக்கியமான உணவு முறை, உடற்பயிற்சிகள் ஆகியவை அவசியம். நாம் உட்கொள்ளும் உணவானது நம் வயிற்றை நிரப்புவதோடு உடலில் ஆரோக்கியமாக வைத்திருப்பதிலும் உதவியாக இருக்கின்றது.

நாம் உட்கொள்ளும் உணவு நமது உடலின் எரிபொருள் என்றே கூறலாம். நாம் சாப்பிடும் உணவு ஆரோக்கியமானதாக இருந்தால் நம் உடலும் ஆரோக்கியமாக இருக்கும். உணவில் வைட்டமின்கள் மற்றும் மினரல்கள் நிறைந்த உணவு வகைகளை நாம் சேர்த்துக் கொள்ள வேண்டும். இவற்றின் மூலம் மிக எளிய வழியில் நம் உடலுக்கு தேவையான ஊட்டச்சத்துக்களை அளிக்க முடியும்.

பெரும்பாலும் சைவ உணவுகளை உட்கொள்பவர்களுக்கு (Vegetarians) வைட்டமின்களின் குறைபாடு ஏற்படுவது சகஜம். குறிப்பாக சைவ உணவை உட்கொள்பவர்களுக்கு வைட்டமின் பி12 குறைபாடு காணப்படுகிறது. இது ஒரு முக்கியமான வைட்டமின் என்பதால் இதை புறக்கணிக்க முடியாது.

வைட்டமின் பி12 நன்மைகள் (Benefits of Vitamin B12)

நம் உடலுக்கு மிகவும் தேவையான வைட்டமின்களில் வைட்டமின் பி12 ஒன்று. வைட்டமின் பி12 டிஎன்ஏ -ஐ ஒருங்கிணைத்து நரம்பு மண்டலத்தை ஆரோக்கியமாக வைப்பதில் முக்கிய பங்கு வகிக்கின்றது. இது உடலுக்கு தேவையான ஆற்றலை அளிக்கின்றது. நமது  உடலால் வைட்டமின் பி12 -ஐ தானாக உருவாக்க முடியாது. இதை நம் உணவுகளின் மூலம்தான் நாம் உடலுக்கு அளிக்க வேண்டும். வைட்டமின் பி12 நிறைந்த உணவுகளை நாம் உட்கொள்ள வேண்டும். பெரும்பாலான அசைவ உணவுகளிலேயே வைட்டமின் பி12 காணப்படுகிறது. இதன் காரணமாகத்தான் சைவ உணவு உட்கொள்பவர்களின் உடலில் வைட்டமின் பி12 இன் குறைபாடு (Vitamin B12 Deficiency) ஏற்படுகின்றது.

எனினும் சில சைவ உணவுகளிலும் வைட்டமின் பி12 உள்ளது என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். வைட்டமின் பி12 குறைபாடு உள்ளவர்கள் இந்த உணவுகளை தேர்ந்தெடுத்து இவற்றை அதிகமாக தங்கள் டயட்டில் சேர்த்துக் கொள்வது நல்லது.

வைட்டமின் பி12 குறைப்பாட்டை நீக்க உதவும் சில சைவ உணவுகளை பற்றி இங்கே காணலாம்: 

ப்ரோக்கோலி 

ப்ரோக்கோலி (Broccoli) வைட்டமின் பி12 -இன் ஒரு முக்கியமான ஆதாரமாக பார்க்கப்படுகின்றது. வைட்டமின் பி12 குறைபாடு உள்ளவர்கள் இதை தங்களது உணவில் சேர்த்துக் கொள்ளலாம். இதில் ஃபோலேட் அதாவது ஃபோலிக் ஆசிடும் உள்ளது. இதன் மூலம் ஹீமோகுளோபின் அதிகரிக்கிறது.

சோயாபீன்

சைவ உணவுகளை உட்கொள்பவர்களுக்கு வைட்டமின் பி12 குறைபாடு ஏற்பட்டால் அவர்கள் சோயாபீனை (Soyabean) தங்கள் டயட்டில் சேர்த்துக் கொள்ளலாம். டோஃபு, சோயா சங்ஸ், சோயா பால் ஆகியவற்றை உட்கொள்ளலாம். சோயாபீன் உட்கொள்வதால் உடலில் வைட்டமின் பி12 குறைபாடு சரியாகிறது.

மேலும் படிக்க | உச்சி முதல் பாதம் வரை... வெறும் வயிற்றில் இலவங்கப்பட்டை நீர் செய்யும் மேஜிக்

பனீர்

பால் பொருட்களிலும் வைட்டமின் பி12 காணப்படுகிறது. வைட்டமின் பி12 குறைபாடு உள்ளவர்கள் பனீரை (Paneer) தங்கள் உணவில் சேர்த்துக் கொள்ளலாம். புரோட்டின் அதிகமாக உள்ள பனீரில் வைட்டமின் பி12 அதிகமாக உள்ளது. இது தவிர காட்டேஜ் சீஸிலும் வைட்டமின் பி12 உள்ளது.

ஓட்ஸ் 

நார்ச்சத்தும் பலவித வைட்டமின்களும் நிறைந்த ஓட்ஸ் (Oats) வைட்டமின் பி12 குறைபாட்டை சரி செய்ய உதவுகிறது. ஓட்ஸ் உட்கொள்வதால் உடலுக்கு பலவித ஆரோக்கிய நன்மைகள் கிடைக்கின்றன. சைவ உணவு உட்கொள்பவர்கள் ஓட்ஸை தங்கள் டயட்டில் சேர்த்துக் கொள்ளலாம்.

பால், தயிர்

வைட்டமின் பி12 குறைபாட்டை சரி செய்ய தயிர் (Curd) உட்கொள்வது நல்லது. தயிரில் வைட்டமின் பி12, வைட்டமின் பி1, வைட்டமின் பி2 ஆகியவை உள்ளன. இது தவிர தினமும் ஒன்றிலிருந்து இரண்டு கப் பால் (Milk) அருந்துவதும் நல்லது.

(பொறுப்பு துறப்பு: அன்புள்ள வாசகரே, எங்கள் செய்திகளைப் படித்ததற்கு நன்றி. இந்தச் செய்தி உங்களுக்கு பல தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதை எழுதுவதில் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களின் உதவியை நாங்கள் பெற்றுள்ளோம். இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)

மேலும் படிக்க | வெயில் காலத்தில் தயிர் நல்லதா? மோர் நல்லதா? மருத்துவர்களின் தேர்வு என்ன?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News