இந்த அறிகுறிகள் இருக்கிறதா? சிறுநீரக பாதிப்பாக இருக்கலாம்! ஜாக்கிரதை!

உடலின் முக்கியமான உறுப்பாக இருக்கும் சிறுநீரகத்தை ஆரோக்கியமாக வைத்திருக்க வேண்டுமானால் நாம் சில விஷயங்களை தவிர்க்க வேண்டும்.  

Written by - RK Spark | Last Updated : Mar 26, 2023, 06:27 AM IST
  • வலி நிவாரணிகளை அதிகமாக உட்கொண்டால் சிறுநீரக பாதிப்பு ஏற்படும்.
  • தண்ணீர் அதிகமாக குடித்தால் அல்லது குறைவாக குடித்தால் சிறுநீரக பாதிப்பு ஏற்படும்.
  • மது அருந்துவதும், சிகரெட் பிடிப்பதும் சிறுநீரகத்தில் பாதிப்பை ஏற்படுத்தும்.
இந்த அறிகுறிகள் இருக்கிறதா? சிறுநீரக பாதிப்பாக இருக்கலாம்! ஜாக்கிரதை! title=

நமது உடலின் முக்கியமான உறுப்பாக இருக்கும் சிறுநீரகத்தின் ஆரோக்கியத்தை பாதுகாப்பதில் நாம் கவனமாக இருக்க வேண்டியது அவசியம்.  நமது ரத்தத்திலுள்ள நச்சுக்களை பிரித்தெடுத்து அந்த கழிவுகளை சிறுநீராக வெளியேற்றும் வேலையை சிறுநீரகம் செய்கிறது.  இப்பேற்பட்ட வேலையை செய்யும் சிறுநீரகத்தில் ஏதேனும் குறைபாடு ஏற்பட்டால் உடலிலுள்ள மற்ற உறுப்புகளிலும் பிரச்சனைகள் தொடங்கும்,  அதனால் தான் சிறுநீரகத்தை ஆரோக்கியமாக வைத்திருப்பது மிகவும் அவசியம் என்று அறிவுறுத்தப்படுகிறது. பெரும்பாலான மக்களுக்கு சிறுநீரக பாதிப்பு ஏற்படுவதன் முக்கிய காரணமாக வலி நிவாரணிகள் உள்ளது.  பலரும் தலைவலி மற்றும் வயிற்று வலிக்கான மருந்துகளை மருத்துவரின் ஆலோசனையைப் பெறாமல் நேரடியாக மருந்துகளில் சென்று வாங்கி சாப்ப்பிடுகின்றனர், இது நாளடைவில் அவர்களுக்கு பெரியளவில் தீங்கினை ஏற்படுத்திவிடுகிறது.  தற்போது சிறுநீரகத்தை ஆரோக்கியமாக வைத்திருக்க வேண்டுமானால் எதையெல்லாம் தவிர்க்க வேண்டும் என்பதை பற்றி பின்வருமாறு பார்ப்போம்.

மேலும் படிக்க | Health Alert! சாப்பிட்ட பின் பழம் சாப்பிடும் பழக்கம் இருக்கா... இந்த செய்தி உங்களுக்குத் தான்!

1) அதிகளவில் உப்பு சேர்க்கப்பட்ட உணவினை சாப்பிட்டால் சிறுநீரகம் கடுமையாக பாதிக்கப்படும்.  உப்பில் உள்ள சோடியம் இரத்த அழுத்தத்தை அதிகரிக்கிறது, இது சிறுநீரகத்தில் மோசமான பக்க விளைவுகளை ஏற்படுத்திவிடும்.

2) புரதச்சத்து நிறைந்த உணவுகள் உடலுக்கு நல்லது தான் என்றாலும் அதனை அதிகமாக சாப்பிடக்கூடாது. பொதுவாக இறைச்சிகள் புரதச்சத்தின் சிறந்த மூலமாக விளங்குகிறது.  அதிக புரத சத்து நிறைந்த உணவை உட்கொள்வது சிறுநீரகங்களில் வளர்சிதை மாற்ற சுமையை அதிகரிக்கும், இதனால் சிறுநீரக கல் பிரச்சனைகள் ஏற்படும்.

3) சிலர் லேசாக தலைவலி ஏற்பட்டாலே உடனே வலி மாத்திரை சாப்பிடுவார்கள், இது முற்றிலும் தவறான பழக்கம்.  நீங்கள் அதிகளவில் வலி நிவாரணிகளை சாப்பிட்டு வந்தீர்கள் என்றால் அது உங்கள் சிறுநீரகத்தில் மோசமான விளைவுகளை ஏற்படுத்தும்.  மருத்துவரின் ஆலோசனையுடன் வலி நிவாரணிகள் சாப்பிட வேண்டும்.

4) மது அருந்துவது பல பிரச்சனைகளுக்கு வழிவகுக்கும், மதுவால் பாதிக்கப்படும் உடலின் முக்கியமான உறுப்பு கல்லீரல்.  அதிகப்படியான மற்றும் தினசரி மது அருந்தினால் கல்லீரல் மற்றும் சிறுநீரகங்களில் மிகவும் மோசமான விளைவு ஏற்படும்.  மேலும் அதிகப்படியான குளிர் பானமும் சிறுநீரகத்திற்கு தீங்கு விளைவிக்கும்.

5) சிகரெட் அல்லது புகையிலை பயன்படுத்துவது மிகவும் ஆரோக்கியமற்ற பழக்கம் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.  இந்த நச்சு புகையை உள்ளிழுப்பதன் காரணமாக மூச்சுக்குழல் மற்றும் உடலில் நச்சுகள் குவியத் தொடங்குகின்றன, இது நாளடைவில் சிறுநீரக பாதிப்பை ஏற்படுத்தும்.

6) திரவத்தால் சிறுநீர்ப்பை நிரம்பும்போது சிறுநீர் வெளியேறும், உடலிலுள்ள நச்சுக்கள் சிறுநீர் மூலம் வெளியேறுகிறது.  சிறுநீரை வெளியேற்றாமல் வைத்திருக்கும்போது அது சிறுநீரகத்திற்கு பெரியளவில் பாதிப்பினை ஏற்படுத்தும்.  சிறுநீர் கழிக்கவில்லை என்றால் சிறுநீர் ரிஃப்ளக்ஸ் பிரச்சனை ஏற்பட்டு, சிறுநீர் சிறுநீரகத்தை நோக்கி வரும், இதனால் பாக்டீரியா தொற்று ஏற்படும்.

7) தினமும் 8-10 கிளாஸ் தண்ணீர் குடிப்பது அவசியம்.  இதை விட குறைவாக தண்ணீர் குடிப்பதால், உடலில் சேரும் நச்சுகள் சிறுநீரக செயல்பாட்டில் மோசமான விளைவை ஏற்படுத்தி சிறுநீரக ஆரோக்கியம் பாதிக்கப்படும்.  மேலும் அதிக தண்ணீர் குடித்தாலும் சிறுநீரகத்தில் அழுத்தம் அதிகரித்து பாதிப்புகள் ஏற்படும்.

8) சாதாரண மக்களை ஒப்பிடும்போது, ​​உடல் பருமன் உள்ளவர்களுக்கு சிறுநீரக பாதிப்பு ஏற்படும் அபாயம் பல மடங்கு உள்ளதாக ஆய்வுகள் கூறுகிறது.  அதிகப்படியான உட்கொள்வதால் எடை அதிகரிக்கும் என்பதால் அளவுக்கு அதிகமாக சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும்.

9) தினமும் 7-8 மணி நேரத்திற்கும் குறைவாக தூங்குபவர்களுக்கு உயர் இரத்த அழுத்தம் மற்றும் இதய நோய் ஏற்படும் அபாயம் அதிகம்.  உயர் ரத்த அழுத்தம் மற்றும் இதய நோய் காரணமாக சிறுநீரகத்தின் செயல்பாட்டில் பாதிப்பு ஏற்படும்.

மேலும் படிக்க | நோயற்ற வாழ்வு வேண்டுமா... காலை உணவிற்கு ‘இவை’ வேண்டாமே!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News