iPhone 15: ஆப்பிளின் அதிரடி ஆபர்! வெறும் ரூ.66,999க்கு ஐபோன் 15 வாங்கலாம்!

iPhone 15 Discount: காதலர் தினத்தை முன்னிட்டு ஐபோன் 15க்கு ஆபர்கள் வெளியாகி உள்ளது. இதன் மூலம் குறைந்த விலையில் ஆப்பிள் ஐபோனை வாங்க முடியும்.    

Written by - RK Spark | Last Updated : Feb 11, 2024, 06:27 PM IST
  • ஐபோன் 15 மொபைலுக்கு அதிரடி ஆபர்.
  • ரூ. 66,999க்கு மொபைலை வாங்க முடியும்.
  • காதலர் தினத்திற்கு ஆபர் வழங்கப்பட்டுள்ளது.
iPhone 15: ஆப்பிளின் அதிரடி ஆபர்! வெறும் ரூ.66,999க்கு ஐபோன் 15 வாங்கலாம்!  title=

iPhone 15 Discount: காதலர் தின இந்த வாரம் வர உள்ளது.  கடந்த ஒரு வாரமாக ஒவ்வொரு தினங்கள் கொண்டாடப்பட்டு வருகிறது.  இந்த சமயத்தில் iPhone 15 மொபைலுக்கு பிளிப்கார்ட் நிறுவனம் அதிரடி ஆஃபர்களை வழங்கி உள்ளது.  இதன் மூலம் Apple iPhone 15ஐ (Black, 128 GB) வாங்குபவர்களுக்கு நிறைய பணத்தை மிச்சப்படுத்த முடியும்.  மேலும் இந்த சலுகை பலரை புதிய ஐபோன் வாங்க வைக்கும். பிளிப்கார்ட்டில் நீங்கள் ஷாப்பிங் செய்தால் இந்த அதிரடி சலுகையை நீங்கள் பெற முடியும்.  பிளிப்கார்ட் பயனர்களுக்காக இந்த ஆபர் வழங்கப்படுகிறது. இந்த சலுகையைப் பயன்படுத்த ஐபோனை எப்படி குறைந்த நிலையில் வாங்கலாம் என்பதை தெரிந்து கொள்ள தொடர்ந்து படியுங்கள்.  

மேலும் படிக்க | 11 ஆயிரத்துக்குள் இப்படியொரு 5ஜி போன்.. 50MP கேமரா, டால்பி ஸ்பீக்கர்..!

தள்ளுபடி சலுகை என்ன?

பிளிப்கார்ட் தள்ளுபடியில் ஐபோன் குறைந்த விலையில் நமக்கு கிடைக்கிறது.  இந்த ஆபர் மூலம் பெரும் தொகையை நம்மால் சேமிக்க முடியும்.  பிளிப்கார்ட்டில் iPhone 15 (Black, 128 ஜிபி) மாடலின் தற்போதைய விலை ரூ. 79,900 ஆகும்.  தற்போது பிளிப்கார்ட் நிறுவனம் இந்த மாடல் போனிற்கு அதன் ஒரிஜினல் விலையில் இருந்து 16 சதவீதம் தள்ளுபடி வழங்கி உள்ளது. இந்த தள்ளுபடியின் மூலம், ஐபோன் 15 ஐ வெறும் 66,999 ரூபாய்க்கு நீங்கள் வாங்க முடியும்.  ஒட்டுமொத்தமாக, இந்த சலுகையின் மூலம் வாடிக்கையாளர்கள் தோராயமாக ரூ.10,000 சேமிக்க முடியும்.

பிளிப்கார்ட்டில் ஐபோன் 15 (Black, 128 ஜிபி) வாங்க வாடிக்கையாளர்கள் ரூ.66,999 செலுத்த வேண்டும், இருப்பினும் இன்னும் குறைந்த விலையில் நீங்கள் இந்த மொபைலை வாங்கலாம்.  பிளிப்கார்ட்டில் உள்ள எக்ஸ்சேஞ்ச் சலுகையை பயன்படுத்தி இந்த ஐபோன் 15 மொபைலை நீங்கள் வாங்கினால் மேலும் தள்ளிப்படி வழங்கப்படுகிறது.  எக்ஸ்சேஞ்ச் மூலம் ரூ.54900க்கு ரூபாய்க்கு நீங்கள் ஐபோன் 15 வாங்கலாம். இதன் மூலம் நீங்கள் மிக குறைந்த விலையில் மொபைலை வாங்கலாம். இந்த சலுகை குறைந்த காலம் மட்டுமே வாடிக்கையாளர்களுக்கு இருக்கும். ஐபோன் 15ஐ குறைந்த விலையில் வாங்க நினைத்தால் உடனே பிளிப்கார்ட்டில் வாங்கி விடுங்கள்.

ஐபோன் 15

ஐபோன் 15 ஆனது டைனமிக் ஐலேண்ட் தொழில்நுட்பத்துடன் உருவாகி உள்ளது. இதனால் பயனர்களுக்கு பிரிமியம் மொபைலை பயன்படுத்தும் உணர்வை தருகிறது.  6.1-இன்ச் டிஸ்ப்ளே உடன் இந்த iPhone 15 முன் எப்போதும் இல்லாத வகையில், ஒரு புதிய அற்புதமான பயனர் அனுபவத்தை தருகிறது. அதன் கேமரா அமைப்பு, குவாட்-பிக்சல் சென்சார், 100% ஃபோகஸ் பிக்சல்கள் கொண்ட சக்திவாய்ந்த 48MP கேமராவை கொண்டுள்ளது. 24MP பிரண்ட் கேமராவை கொண்டுள்ளது. 2x டெலிஃபோட்டோ லென்ஸ் மூலம், -0.5x, 1x மற்றும் 2x-ல் நிலையில் புகைப்படம் எடுக்க முடியும்.  

மேலும் படிக்க | காதலனின் தாடி உங்களுக்கு பிடிக்கவில்லையா... தள்ளுபடியில் கிடைக்கும் டிரிம்மர்களை பரிசளிக்கலாம்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News