சொத்துக்குவிப்பு வழக்கு! பொன்முடிக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை உறுதி!

Minister Ponmudi Case: வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கில் தமிழக உயர்கல்வித் துறை அமைச்சர் பொன்முடிக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதிப்பு.  

Written by - RK Spark | Last Updated : Dec 21, 2023, 11:05 AM IST
  • பொன்முடிக்கு தண்டனை உறுதி.
  • 3 ஆண்டு சிறை தண்டனை விதித்தது உயர்நீதிமன்றம்.
  • மேல் முறையீட்டுக்கு 30 நாட்கள் கொடுக்கப்பட்டுள்ளது.
சொத்துக்குவிப்பு வழக்கு! பொன்முடிக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை உறுதி! title=

வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கில் தமிழக உயர்கல்வித் துறை அமைச்சர் பொன்முடிக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கி உள்ளது.  சொத்துக்குவிப்பு வழக்கில் குற்றவாளி என அறிவிக்கப்பட்ட தகுதிநீக்கம் செய்யப்பட்ட எம்.எல்.ஏ பொன்முடிக்கு, 3 ஆண்டுகள் சிறை & 50 லட்சம் அபராதம் விதித்து உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதன்காரணமாக அவர் உடனடியாக நீதிமன்றத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.  இந்த வழக்கில் அவரது மனைவியும் குற்றவாளிகள் என உறுதி செய்யப்பட்டுள்ளது.  மேல்முறையீடு செய்வதற்காக 30 நாட்களுக்கு தண்டனை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.  

மேலும் படிக்க | யார் இந்த பொன்முடி? பகுதிநேர பேராசியர் டூ அமைச்சர்

 

வருமானத்துக்கு அதிகமாக ஒரு கோடியே 75 லட்சம் ரூபாய் சொத்து சேர்த்ததாக தொடரப்பட்ட வழக்கில் அமைச்சர் பொன்முடி மற்றும் அவரது மனைவி விசாலாட்சியை விடுதலை செய்த விழுப்புரம் நீதிமன்ற தீர்ப்பை சென்னை உயர் நீதிமன்றம் நேற்று ரத்து செய்திருந்தது. சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ஜெயச்சந்திரன் முன்பு இன்று 2வது வழக்காக பட்டியலிடப்பட்டு இருந்தது.  பொன்முடி தேசிய கொடி இல்லாத காரில் நேரில் ஆஜராகினார்.  இதனால் திமுக வட்டாரம் பரபரப்பாக இருந்தது. ஆதாரங்களை முழுமையாக ஆராயாமல், அமைச்சர் பொன்முடி மற்றும் அவரது மனைவி விசாலாட்சியை, சொத்துக்குவிப்பு வழக்கில் இருந்து விடுவித்து விழுப்புரம் சிறப்பு நீதிமன்றம் பிறப்பித்த தீர்ப்பு அப்பட்டமான தவறு மட்டுமல்லாமல் வெளிப்படையான பிழை என, சென்னை உயர் நீதிமன்றம் முன்பு தெரிவித்து இருந்தது.

சொத்துக்குவிப்பு வழக்கில் அமைச்சர் பொன்முடி விடுதலை செய்து விழுப்புரம் சிறப்பு நீதிமன்றம் அளித்த தீர்ப்பை ரத்து செய்து, சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ஜெயச்சந்திரன் பிறப்பித்த தீர்ப்பில், இந்த வழக்கை சிறப்பு நீதிமன்றம் மேலோட்டமாக விசாரித்தது. பொன்முடி, அவரது மனைவி விசாலாட்சி ஆகியோரது வருமானத்தை தனித்தனியாக கணக்கிட்டு, இரண்டு பேர் வருமானத்தை ஒன்றாக சேர்த்து விசாரிக்க முடியாது என்ற சிறப்பு நீதிமன்றத்தின் முடிவு அடிப்படையிலேயே தவறு எனச் சுட்டிக்காட்டி இருந்தார். பொது ஊழியரான அமைச்சர் பொன்முடியின் மனைவி விசாலாட்சி,  கணவருக்கு வந்த வருமானத்தில் தன் பெயரில் சொத்துக்களை வாங்கிக் குவித்துள்ளார். அவருக்கு ஏற்கனவே உள்ள மூலதன வருமானம் மூலமே இந்த சொத்துக்கள் வாங்கப்பட்டன என்பதை சிறப்பு நீதிமன்றம் முதலில் கண்டறிந்து இருக்க வேண்டும். ஆனால், 2006 – 11 வரையிலான 5 ஆண்டுகளில் வாங்கப்பட்ட சொத்துக்களின் மதிப்பு, அவரது மூலதன வருமானத்தில் இருந்து வாங்க முடியாது என்று லஞ்ச ஒழிப்புத் துறை தாக்கல் செய்த ஆதாரங்களை சிறப்பு நீதிமன்றம் புறந்தள்ளியுள்ளது என நீதிபதி குறிப்பிட்டுள்ளார். 

அமைச்சர் பொன்முடி தன் மனைவி விசாலாட்சி பெயரில் பெரும்பாலான சொத்துக்களை வாங்கியுள்ளார் என்பதற்கு ஏராளமான சந்தேகம் கொள்ள நம்பத்தகுந்த காரணங்கள் இருந்தும் அதை ஏற்காமல் சிறப்பு நீதிமன்றம், வருமான வரிக் கணக்கை ஏற்றுக் கொண்டு விடுதலை செய்துள்ளது. ஆதாரங்களை ஆராயாமல் சிறப்பு நீதிமன்றம் எடுத்துள்ள முடிவு, அப்பட்டமான தவறு மட்டுமல்லாமல் வெளிப்படையான பிழை என நீதிபதி தனது தீர்ப்பில் தெரிவித்து இருந்தார். பொன்முடி, விசாலாட்சி ஆகியோருக்கு எதிராக லஞ்ச ஒழிப்பு போலீசார் தாக்கல் செய்த சுதந்திரமான ஆதாரங்களை பரிசீலிக்காமல் இருவரையும் விடுதலை செய்த சிறப்பு நீதிமன்ற தீர்ப்பு ஏற்றுக் கொள்ள முடியாது. 2006- 11ம் ஆண்டுகளில் வருமானத்துக்கு அதிகமாக ஒரு கோடியே 72 லட்சத்து 63 ஆயிரத்து 468 ரூபாய், அதாவது வருமானத்தை விட 64.90 சவீதத்துக்கு அதிகமாக சொத்துச் சேர்த்துள்ளது நிரூபணமாகியுள்ளது எனக் கூறி, சிறப்பு நீதிமன்ற தீர்ப்பை ரத்து செய்து தீர்ப்பளித்தார்.  இந்நிலையில் தற்போது 3 ஆண்டு சிறையும் 50 லட்சம் அபராதமும் விதித்து தீர்ப்பளித்துள்ளது உயர்நீதிமன்றம்.

மேலும் படிக்க | அமைச்சர் பொன்முடி விடுதலை ரத்து... சொத்து குவிப்பு வழக்கில் தண்டனை அறிவிப்பு எப்போது?

 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News