அதிமுக எதிர்க்கட்சித் துணைத் தலைவர் யார்? மாஃபா பாண்டியராஜன் சொன்ன அந்த நபர்!

அதிமுக எதிர்க்கட்சித் துணைத் தலைவராக ஆர்.பி உதயகுமார் அமர்ந்தே ஆகவேண்டும் என அதிமுக முன்னாள் அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் பேட்டி அளித்துள்ளார்.  

Written by - RK Spark | Last Updated : Apr 12, 2023, 07:16 AM IST
  • ஆன்லைன் ரம்மி அவசர சட்ட மசோதா விவகாரம்.
  • ஆளுநர் சட்ட ரீதியாக செய்திருக்கிறார்.
  • அதிமுக முன்னாள் அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் கருத்து.
அதிமுக எதிர்க்கட்சித் துணைத் தலைவர் யார்? மாஃபா பாண்டியராஜன் சொன்ன அந்த நபர்! title=

திருவள்ளூர் மாவட்டம் திருநின்றவூர் நகர அதிமுக அவை தலைவர் தன்ராஜ் என்பவர் அண்மையில் மறைந்ததை அடுத்து அவரது 16ஆம் நாள் படத்திறப்பு நிகழ்ச்சி திருநின்றவூரில் நடைபெற்றது. இதில் அதிமுக முன்னாள் அமைச்சர்கள் மாஃபா பாண்டியராஜன், ரமணா, முன்னாள் எம்எல்ஏ அலெக்ஸாண்டர் உள்ளிட்ட அதிமுக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சியில் தன்ராஜின் திருவுருவப்படத்தை திறந்து வைத்த பின் அமைச்சர் பாண்டியராஜன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், "ஆன்லைன் ரம்மி விவகாரத்தில் ஆளுநரின் முடிவை விமர்சிப்பது முறையற்றது.

மேலும் படிக்க: கடல்சார் தொல் வாழ்வியலைத் தேடும் “யாத்திரை” -எழுத்தாளர் ஆர்என் ஜோ டி குருஸ்

காலம் தாழ்த்தாமல் ஆளுநர் இந்த முடிவை எடுத்திருந்தால் மற்றவர்கள் குற்றம் சாட்டும் நிலை ஏற்பட்டிருக்காது என்றார். மேலும் ஆன்லைன் ரம்மி தடை சட்டத்திற்கு ஒப்புதல் அளிக்க இவ்வளவு தாமதம் ஏற்படுத்த வேண்டிய அவசியம் இல்லை எனவும் கூறினார்.  தொடர்ந்து பேசிய அவர் சட்டமன்ற எதிர்கட்சித் துணைத் தலைவர் விவகாரத்தில் சபாநாயகர் அதர்ம போக்குடன் செயல்படுவதாக குற்றம்சாட்டினார். 

உச்சநீதிமன்றத்தால் அங்கீகரிக்கப்பட்ட அதிமுக பொது செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஒரு முடிவு எடுக்கும் போது சட்டமன்றத்தில் அதற்கு மாறுபட்டு முடிவை சபாநாயகர் எடுப்பது தவறு எனவும் கூறினார். அடுத்ததாக வெகு விரைவில் எதிர்க்கட்சித் துணைத் தலைவராக ஆர்.பி உதயகுமார் அமர்ந்தே ஆகவேண்டும், இல்லையெனில் மீண்டும் நீதிமன்றம் சென்று முடிவை எடுக்கும் நிலைக்கு அதிமுகவை தள்ள வேண்டாம் எனவும் எச்சரிக்கை விடுத்தார்.

மேலும் படிக்க | இனி ஆன்லைனில் ரம்மி விளையாடினால்.. இவ்வளவு தண்டனையா? ஜாக்கிரதை!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News